நான் அக்ரஹாரத்துக்கு லீவுக்கு போனது எங்கப்பாவோட பூர்வீக வீடு-
பேரளத்துக்கும், காரைக்காலுக்கும் நடுவில் ஒரு கிராமம். திருநள்ளாருக்கு அருகில்..
சேத்தூர் ன்னு பேரு...
அங்கே ஒரு அக்ரஹாரம்...
அகரஹாரம்னாலே பிராமணர்கள் வசிக்கும் தெரு.
அக்ராகாரம்னா .. அப்போ எல்லாம் ஒரே pattern தான்...
சிறிய, சுமார் அகலத்துடன், (ஒரு கார் போகலாம்) , ரொம்ப நீளமாயும் இல்லாத, தெரு...இரண்டு பக்கங்களும் வீடுகள்...
compound எல்லாம் கிடையாது - street houses - வீடெல்லாம் ஒட்டி ஒட்டி இருக்கும்...
தெருக்கோடியில் கோவில்... விஷ்ணு அல்லது சிவன் கோவில்
அக்ரஹாரம் வீடெல்லாம் அநேகமாக ஒரே மாதிரி...
படிக்க படிக்க கற்பனை செய்து கொண்டே வாருங்கள். !!
வாசலில் திண்ணை..
சில படிகள் ஏறினால் - ரேழி -
திண்ணை - open to sky -
ரேழியிலும் ஒரு சைடு திண்ணை இருக்கும்... இருட்டாக இருக்கும்.. !!
உள்ளே நுழைந்தால் - பெரிய மித்தம் - நாலு பக்கமும் தூண்கள்... வெய்யில், மழை எல்லாம் அங்கே செமையாக இருக்கும்..
திருட்டுக்கு பயந்து, எல்லோரும் மேலே grill போட்டு மூட ஆரம்பித்து விட்டார்கள்..
மித்தத்துக்கு இரண்டு பக்கமும் - தாவாரம்... அதே நீளத்துக்கு... ஆனால் குறுகலாக..
ஒரு பக்கத்து தாவரத்தில், நடுவில் ஊஞ்சல் தொங்கும்..
தாவாரத்தின் வாசல் பக்க end இல் படுக்கை அல்லது ஆபீஸ் அறை ...
ஆபீஸ் அறையாக இருந்தால், ரேழியின் திண்ணை கிடையாது... அங்கே கதவு இருக்கும்... வெளி ஆட்கள் வந்தால் அதை தாண்டி போக அனுமதி இல்லை.
அந்த ரூமுக்கு வாசலை பார்த்த ஒரு ஜன்னல்... திண்ணை, வாசலை பார்க்கலாம்... வெளியில் வர அனுமதிக்கப் படாத பெண்கள், அந்த ஜன்னலின் பக்கம், ஜன்னல் “சீல்” இல் உக்காந்து வேடிக்கை பார்ப்பார்கள்; புக் படிப்பார்கள்... இருட்டுதான்...25 watt பல்பு தொங்கும்... bulb shade எல்லாம் கிடையாது... தொங்கும் wire பூரா ஒட்டடை, தூசு; பல்பு கருப்பு !!!
இந்த தாவாரத்தின் எதிர்த்த பக்கம், சாமான் உள் - உக்கிராண அறை... வருஷ, மாச சாமான்கள் .. நெல் மூட்டை etc
மற்றொரு தாவாரத்துக்கு வருவோம்...
அந்த தாவாரத்தின் வாசல் side ஒரு படுக்கை அறை...
ஜமக்காளத்திற்குள் தலைகாணி- பாய்க்குள் தலைகாணி வைத்து சுற்றி, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
தாவாரத்தின் மறு பக்கம் ... அடுக்களை... மண் அடுப்பு, மர ஷெல்பில் பாத்திரங்கள், தவலை குடங்களில் தண்ணி... குமுட்டி அடுப்பு .. இதுவும் இருட்டுதான்...
இந்த தாவாரம்தான் சாப்பிட... வரிசை கட்டி உக்காந்து, பெரியவர்களுக்கு பலகை , ஓலை தடுக்கு போட்டு, இலையில் பரிமாறும் சாப்பாடு...
சின்ன குழந்தை இருந்தால்... இந்த தாவாரத்தில் .. படுக்கை ரூம் கிட்ட தூளி தொங்கும்.. !!
வெளிச்சம் காத்து என்பது... மித்தத்தில்தான்... அதுவும் பகலில்தான் வெளிச்சம்.
எல்லார் கையிலும் ஓலை விசிறி....!!
பெண்கள் அந்த மித்தத்தில் சாமான் காய வைப்பதும், காலை நீட்டி பேசுவதும், பூ தொடுப்பதும், காய் நறுக்குவதும்... அழகோ அழகு...
மித்தத்தின் ஒரு மூலையில், ஜோடுதவலையில் தண்ணியும், பக்கத்தில் சொம்பும். வெளியே பொய் விட்டு வருபவர்களும், சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் கால் அலம்ப...
(இவ்வளவு நேரம் சொன்னது மித்தத்தின் சைடு)
மித்தத்தின் முன்னும் பின்னும் சிறிய இடங்கள் ...
வாசலை நோக்கி, கொல்லை புறத்தை நோக்கி...
பின்னால் போனால்... தாவாரம்...
அதில் வேண்டாத சாமான்கள் ; பறித்த தேங்காய்கள், இத்யாதி...
அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன ரூம்... பெண்களின் "அந்த மூன்று நாட்கள் " உட்கார வைக்க...
அதைத் தாண்டினால் கொல்லை பக்கம்.
அங்கு, இரண்டு சைடும் வேலி .. சுவரெல்லாம் கிடையாது... வேலியில் சிறிது இடை வெளி ஏற்படுத்தி, knack ஆக நுழைந்து.. அடுத்தாம் போக.. !! பெண்களுக்கு !!
இந்த கொல்லையில் நிறைய மரங்கள், (எங்காத்தில் தென்னை, பாக்கு..இப்பவும் இருக்கு !) .. கிணறு... ராட்டை வரும் முன்பு, அப்படியே இழுக்க வேண்டும்.. அப்புறம் சகடம் போடப்பட்டது. .. திறந்த கிணறுதான்.. மூடும் வழக்கம் இல்லை...
வேலியில், பல வகை கொடிகள்... முக்கியமாக வெற்றிலை...!
மல்லி இல்லாத வீடே கிடையாது.. பந்தலில் அவரை, புடலை, பீர்க்கை, பாகல் காய்கள் தொங்கும்... முல்லை பந்தல் இருக்கும்...
இந்த கொல்லை நீள வாக்கில் இருக்கும்...
அதன் முடிவில் ஆறு... (காவிரி அல்லது வாய்க்கால்)
இந்த சேத்தூர் வீட்டுக்கு நான் லீவுக்குப் போய் அத்தையோடு தங்கி இருக்கேன். ரொம்ப சின்ன வயசுதான்.(7/8 இருக்கும்) ஆனாலும், அத்தை சமைச்சுப் போட்டது, தோசை (வெள்ளை வெள்ளையாக, மெத்துன்னு) வாத்துப் போட்டு, சின்ன ஜாடியில் மிளகாய் பொடியும், இன்னொரு ஜாடியில் எண்ணையும் வைத்து குத்தியது, அந்த மித்தம், கொல்லை , பாக்கு மரங்கள், திண்ணை .. எல்லாம்..எல்லாம் .. ஞாபகம் இருக்கு.
எங்க தாத்தா ஆத்துக்கு போன feelingஐ கொண்டுவந்துவிட்டது...எங்க அப்பா ஊரும் கும்பகோணம் காரைக்கால் routeல பேரளம் பக்கத்துல போழகுடி ..அம்மா வழி தாத்தா ஆகமும் இதே போலத்தான் ..வைதீஸ்வரன் கோயில் பக்கத்துல ஒரு கிராமம் ..ஓலையாம்புத்தூர்னு பேரு ...superb ma'am
ReplyDeleteஎங்க தாத்தா ஆத்துக்கு போன feelingஐ கொண்டுவந்துவிட்டது...எங்க அப்பா ஊரும் கும்பகோணம் காரைக்கால் routeல பேரளம் பக்கத்துல போழகுடி ..அம்மா வழி தாத்தா ஆகமும் இதே போலத்தான் ..வைதீஸ்வரன் கோயில் பக்கத்துல ஒரு கிராமம் ..ஓலையாம்புத்தூர்னு பேரு ...superb ma'am
ReplyDeleteThanks for your comment.
Delete