Wednesday, August 31, 2016

FESTIVALS (3) - VARALAKSHMI NOMBU....

அந்த நாளைய வரலக்ஷ்மி விரதம் 



வெள்ளிக்கிழமை நோம்பு என்றால் , வியாழன் படாத பாடு படும்.
நாங்க எல்லாம் ஸ்கூல் !! அம்மாதான் பாவம்.எல்லாம் செய்வாள். அப்போது அந்த
வேலையின் கஷ்டம் எனக்குத் தெரியவில்லை.
எங்களை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, தலைக்கு ஸ்நானம் செய்து, மடி உடுத்தி, சாப்பிடாமல்....
1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, தனித்தனியாக ஊற வெச்சத  கல்லுரலில்அரைப்பா.. உளுத்த மாவில் கொஞ்சம் பச்சரிசி மாவுடனும், மீதியை .பு.அரிசி மாவுடனும் கரைத்து வைப்பா. பச்சரிசி இட்லிநெய்வேத்யத்துக்கு.
3. தேங்காயை உடைத்து , துருவி, பூரணம் பண்ணுவா.
4. எள்ளை வறுத்து, எள் பூரணம்
5. பச்சரிசி களைந்து, உலக்கையால் இடித்து (வேலைக்காரி இடிக்க, அம்மா தள்ளிகொடுப்பாள்) ,சலித்து வைப்பாள் - கொழக்கட்டைக்கு.
6. அம்மன் முகமெல்லாம் அப்போது கிடையாது. காப்பர்/ வெண்கல  சொம்பில், சுண்ணாம்பை பூசி, காவியால் அம்மன் முகம் அப்பா வரைந்து வைப்பார். அதில் தேங்காய், மாவிலை வைத்து, சொம்பிற்குள் அரிசி, பருப்பு, வெல்லம், வெள்ளி, தங்க காசுகள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எல்லாம் போட்டு, கலசம் வைத்து, அலங்காரம் செய்து, பலகையில் இழை கோலம் போட்டு, வாழை நுனி இலை போட்டு, அதன் மேல் அரிசி பரத்தி, கலசத்தைவைப்பா. தெரிந்த அளவு அலங்காரம். (கண்ணுக்கு மை இட்டு, செயின் போட்டு)
7.  இழை கோலத்துக்கு, கல்லுரலில் அரிசி மாவு அரைத்து வைத்து
எல்லாவற்றையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு தான் சுமார் மூன்று மணிக்குசாப்பிடுவாள்.

8. மண்டபம் எல்லாம் இப்போது போல் வாழக் கன்று வைத்து காட்டுவதில்லை. அப்பா, சுவற்றில், சுண்ணாம்பு பூசி, காவியால், பிரஷ் வைத்து, scale வைத்து, மண்டபம் வரைந்து, நடுவில் கலசம், அதன் மேல் தேங்காய் etc. எல்லாம் வரைந்து, பல்லாங்குழி, கழக்கொடி(அம்மனுக்கு விளயாடவாம் !), நாகப்பழம், மண்டபத்தில் வாழை மரம் (தாரோடு) எல்லாம் வரைந்து...
(அந்த அழகை சொல்லி முடியாது. ஒரு போட்டோ கூட இல்லை) ரெடி பண்ணுவார்.
வாசலில், சுவாமி இடத்தில் இழை கோலங்கள் ராத்திரியே போட்டு விடுவோம்.



சாயந்திரம் அப்பா மார்கெட் போய் (அதற்கு மட்டும் நான் ஒட்டி கொள்வேன்)தேங்காய், பழம், தாழம்பூ, உதிரிப்பூ, தொடுத்த பூ, பிச்சோலை கருக மணி, பல வகைபழங்கள் எல்லாம் வாங்கி வருவார்.

ராத்திரிக்கு வெண் பொங்கல் தான் பலகாரம். சாப்பாட்டுக்கடை முடிந்ததும், அடுப்பு (மண்) மெழுகி, கோலம் போட்டு, சமையல் உள் அலம்பி...

பூஜை அன்று... அம்மா சுத்த பட்டினி.
இந்த பூஜை... மாலை பசுக்கள் மேய்ச்சலில் இருந்து திரும்பும் வேலையில் (சுமார் 5 மணிக்கு மேல் செய்ய வேண்டும் !!)
நிறைய நேரம் இருப்பதால், பூஜை சாமான்கள் எடுத்து வைத்து, அம்மன் அழைத்து, பாட்டு பாடி - எல்லாம் நிதானமாக நடக்கும்.

சாஸ்த்ரிகள் வந்து, பூஜையை சிரத்தையாக செய்து, சரடு கட்டும்போது 6 மணி ஆகிவிடும்
பிறகு என்ன.. நமஸ்காரம் செய்து எழுந்திருக்கும்போது... வடை, அப்பத்துடன் தான்எழுந்திருப்போம் !!
நெய்வேத்யத்துக்கு : இட்லி, சாதம், பருப்பு, கொழுக்கட்டை (வெல்ல பூரணம், எள்ளு, உளுத்தம் பூரணம்) , வடை, அப்பம்...
இட்லிக்கு சாம்பார்... வெளுத்து வாங்குவோம் சாப்பாட்டை.
அம்மா... 1922 to 1986 (64 years) இதே போல் பூஜை பண்ணி இருக்கா.



சென்னையில், எங்காத்துல  எல்லாம் காலை ராகு காலத்துக்கு அப்புறம் பூஜை.
வேலைக்கு போகும்போது, எங்க North Indian Principal க்கு சாஸ்த்ரிகள் வர லேட்ஆகும் என்று சொன்னால் புரியாது. லீவும்  கிடையாது.
அதனால், பூஜை காலை 7 மணிக்கு என்று ஆயிற்று !!

இப்போது  (சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது !!) : கடையில்வாங்கும் processed அரிசி மாவு, இட்லி மாவு, வீட்டு வேலை செய்பவள் துருவும் தேங்காய் / பொடிக்கும் வெல்லம் / ஏலக்காய்; முதல் நாள் இரவே அம்மன் அலங்காரம்; மறு நாள் காலை 4 மணிக்கு எழுந்து, எல்லாம் எய்து, 8 மணிக்கு பூஜை.  
சுருங்கித்தான் போய் விட்டது !!!

நோம்பு என்று சொல்லும்போது, எனக்கு அம்மாவை விட மாமியார் ஞாபகம் அதிகம் வருகிறது .
கல்யாணம் நிச்சயமாகியதும், மாமியாருக்கு நோம்பு உண்டு என்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

கல்யாணம் ஆன வருடம் விமரிசையாக நோம்பு எடுத்து வைத்தார்.
அம்மா எனக்கு சீராக வெள்ளி முகம், பித்தளை மணி, தூபக்கால், தீபக்கால் என்று பூஜை பாத்திரங்களும், வெற்றிலை பாக்கு பழம் என்று கொடுத்தாள். மாமியாருக்கு பரம திருப்தி.

மாமியாரும் காலை மடியாக எல்லாம் செய்து வைப்பார். பூனாவில் இருந்தபோது கூட, மாவு இடித்து தான் கொழக்கட்டை. அங்கே தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம். சுமார் 30 பேர் வெற்றிலை பாக்குக்கு வருவா. (அது 1974 to 1980.)



1966 to 1973 & 1980 to 1993 சென்னையில்.
இரண்டு நாத்தனார்களுக்கும் நோம்பு கிடையாது. எங்காத்துக்கு வந்துடுவா. நான் மெயின் சமையல் செய்தாலும், ரொம்ப ஹெல்ப் பண்ணுவா. ரொம்ப ஜாலியாக இருக்கும்.
மாமனார் , கலசம் கட்டி கொடுப்பார். வாழை கன்று மண்டபத்தில் கட்டி கொடுப்பார். centre table ஐ கவுத்துப்போட்டு, அலங்காரம். இரவு 11 மணியாகும் எல்லாம் முடிய. மடி புடவை எல்லாம் பக்கா வாக இருக்கணும் ! மாமியார் அதில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

நோம்பில் என் மாமியாரின் அம்மன் முகம் கலசத்திலும், கீழே என்னுதும் இருக்கும். பாட்டு பாடி, ஆரத்தி எடுத்து, அம்மன் அழைத்து... குழந்தைகளுக்கு பட்டு பாவாடை போட்டு...
அன்று முழுவதும் விரதம் இருந்து,  ஒரு வேளை  இட்லி, வடை, கொழுக்கட்டை சாப்பிட்டு, இரவு பட்டினி இருந்து.......

நெய்வேதியத்துக்கு கொஞ்சம் பண்ணி விட்டு, பாக்கியை வைத்து விட்டால், மாமியார் அலுக்காமல் கொழக்கட்டை பண்ணி கொடுப்பார்.

  சாயந்திரம் கட்டாயம் பாட்டு பாட வேண்டும். மறு நாள் புனர் பூஜை பண்ண வேண்டும். எவ்வளவு பூ....... அமர்க்களமாக இருக்கும்.

என் அம்மா இறந்த பிறகு, என் மாமியார், என் நாத்தனார்களுக்கு குடுப்பது போலவே, எனக்கும் வெத்திலை பாக்கில் பணம் வைத்து கொடுப்பார். (நான் feel பண்ணக்கூடாது என்று) அந்த நாள் என் மீது மிக ஆசையாக இருப்பார். அதை செயலில் காண்பிப்பார்.

என் மாமனார் இறந்ததும், நான் மட்டும் செய்வேன். மனசுக்கு கஷ்டமாக இருக்கும். But she had accepted it boldly.

the day she handed over her "mugam" to me, I was touched&moved.

இப்போது என் அம்மாவை விட மாமியாரை நினைத்து கண் கலங்குகிறேன். எங்கிருந்தாலும் என்னை நாளை வாழ்த்துவார்.

                                                                   மாமியார்



Monday, August 29, 2016

FESTIVALS (2) - DEEPAVALI ...

தீபாவளி பண்டிகை
  

தீபாவளி எங்களால் ரொம்ப ஆர்வத்தோடு எதிர் பார்க்கப்படும் ஒரு பண்டிகை.
வருடத்தில் ஒரு புது டிரஸ்! ஆர்வம் இருக்கத்தானே செய்யும்?
ஆனால் அது என்ன என்பது கடைசி வரைக்கும் suspense !!
வீட்டின் பண நிலைமை !!
அநேகமாக தீபாவளிக்கு 2 நாளைக்கு முன்தான் துணி எடுப்பார் அப்பா.
பாவாடை சட்டைக்கு - சீட்டி என்றொரு துணி வகை உண்டு. என்றும் அதுதான்.
கஜம் (1 கஜம் = 3 அடி = 90 cm) 3 or 4 Rs. இருக்கும். மொத்தமாக வாங்கினால், இன்னும் மலிவு !
அதனால், மொத்தமாக வாங்கி, எங்கள் எல்லோருக்கும் அதே பாவாடை சட்டை. தாவணி போடும் அக்காக்களுக்கு, வாயில் தாவணி !
இதை தைக்க குடுத்து, தையர் காரன் பிகு பண்ணி, அவனை கெஞ்சி கூத்தாடி... !!
தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன் கையில் மருதாணி.
தீபாவளிக்கு முதல் நாள். ராத்திரி 8 மணிக்கு அய்யன்கடை தெருவுக்கு போவோம். தைத்த துணி வர 10 மணி கூட ஆகி விடும்.
அங்கேயே, கண்ணாடி வளையல்கள்.. ஆளுக்கு இரண்டு டஜன் !! சாமந்தி அல்லது கதம்பம்.
(ராத்திரி, ஒரு சிஸ்டர் ,அப்பாவுக்கு தெரியாமல் , சட்டை கையை பிடித்து, tightஆகதையல் போடுவாள்)

அம்மாவின் பட்சண களேபரம் ஒரு வாரம் முன்பு ஆரம்பித்து விடும். வருடா வருடம் அதே !!
கடலை மாவு தேன்குழல், ஓமப்பொடி, மைசூர் பாகு, லட்டு, ரவா உருண்டை, திரட்டுப்பால்...
உப்பு பட்சணங்கள் பிஸ்கட் டின் இல் full ஆக இருக்கும். sweets...சம்புடத்தில்.
தீவாளி மருந்து வீட்டிலேயே கல்லுரலில் சாமான்களை போட்டு, இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து, முதல் நாள் கிளறுவாள். 

இரவு முழுவதும் தூங்க மாட்டோம்.
ராத்திரி 12 மணிக்கு மேல் கோதுமை அல்வா, பஜ்ஜி, போண்டா வாசனை தூக்கும்

காலை 3 மணிக்கு ஆரம்பித்து... எண்ணெய் தேய்ப்பது என்றால்.. பேருக்கு இல்லை.. ஓமம் போட்டு காய்ச்சிய எண்ணெய்.. கோலம் போட்ட பலகை.. தட்டில் வெத்திலை பாக்கு, குங்குமம், ஒரு தட்டில் பக்ஷணம் ..விறகு அடுப்பில் பெரிய தவலையில் கொதிக்கும் வெந்நீர்.


வயது படி... starting from the youngest (அதாங்க நான் !!) உட்கார வைத்து, குங்குமம் இட்டு, வாயில் ஸ்வீட் குடுத்து, சூடு பறக்க தாராளமாக எண்ணெய் தேய்த்து...
சீயக்காய் தேய்த்து விட்டு; குளித்ததும் அப்பா கையால் துணி வாங்கி உடுத்தி, நீள தலை முடியை ஆற்றி, பின்னல் போட்டு, பூ வைத்து..
தீபாவளி மருந்து ஒரு உருண்டை. 
ஆறு மணிக்குமேல் அமாவாசை வந்து விடும் என்பதால், அதற்கு முன்பாகவே, போண்டா பஜ்ஜி எல்லாம் சாப்பிடுவோம். ஏன்னா, எல்லாத்திலையும் வெங்காயம் இருக்கும். 

                                   

 அண்ணாக்கள் வெடி வெடிக்க வேடிக்கை பார்த்து...
ஓலை வெடி என்று ஒன்று.. தென்னம் ஓலையில் செய்து நுனியில் திரி இருக்கும்.. நீளமாக இருக்கும்.. அதற்கும் மேலே அப்பா ஒரு நீள கொம்பில் ஆணி அடித்து , ஓலை வெடியை சொருகி குடுப்பார் ! அதை வீர தீரமாக வெடிப்போம் !! எல்லாம் ரொம்ப கொஞ்சம் தான். மொத்தமாக 5 rs. க்கு வெடி வாங்கினால் தாராளம்.
அதை தாம்பாளத்தில் வைத்து, மொட்டை மாடியில் வெய்யிலில் காய வைத்து, அது தாம்பாளத்தோடு வெடித்து சிதறியதெல்லாம் அழிக்க முடியாத நினைவுகள்...

பிறகு தட்டு நிறைய பக்ஷணம் வைத்து, வயிறு நிறைய சாப்பிட்டு... தூங்கி முழித்தால்..
அம்மா பாவம்... பாயசத்தோடு சமையல் முடித்திருப்பாள்.

(முதல் நாள் வெங்காய சாம்பார், உருளை கிழங்கு கரி... எப்படி அவ்வளவு சாப்பிட்டோம் ??)

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு... at least வசதி உள்ள வீட்டு குழந்தைகளுக்கு... பத்தோடு பதினொன்று.. அத்தோட இது ஒன்று என்ற மாதிரி புது டிரஸ் இல் thrill இல்லை.
Grand sweetsஇல் வாங்கிய பட்சணத்தை சாப்பிட interest இல்லை. (because even that is always available)
உறவுகளையும் நண்பர்களையும் தட்டில் பட்சணம் வைத்து எடுத்து போய், நமஸ்காரம் செய்து, பார்த்து வரும் பழக்கமில்லை...

பட்டாசு மட்டும் 10,000 / 20000 Rs. க்கு வெடிக்கிறார்கள்.

இனி வரும் generationகளுக்கு.. இதெல்லாம் புரியுமா ?
இந்த சந்தோஷங்கள் கிடைக்குமா ? 








Sunday, August 28, 2016

FESTIVALS (1) - AAVANI AVITTAM....


ஆவணி அவிட்டம் (YAJUR UPAKARMA)
  
"ஆவணி அவிட்டத்துக்கு அசடு கூட சமையல் முடித்துவிடுவாள்"என்பது ஒரு வஜனம்

சேமியா பாயசம்பிட்லைரசம்மோர் குழம்புகலத்துக்கு பருப்புபச்சடி,காரம் போட்ட 
கரிதேங்காய் போட்ட கரிகூட்டுஆம வடை, தேங்காய் போளிஅப்பளம்...

ஆண்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரே பண்டிகை இதுதான்!அதனால் கூடுதல் effort.
வாசலில் பெரிய படிக்கோலம், காவி இட்டு 

எங்கள் ஊரில்காலையில் ஆண்கள் குளித்துகாமோகாக்ஷி ஜபம்  பண்ணி,   சந்தி பண்ணி... கோவிலுக்கு  கிளம்ப வேண்டும்.
திரும்பி வர ஒரு மணியாகும். அதனால்தான் காலை டிபன் இட்லி, சட்னி, மிளகாய்பொடி, செகண்ட் டோஸ் காப்பி...
வாழை ஏட்டில் பரிமாறப்பட்டு, வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

கோயிலுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக்கொண்டு .. கோவில் கிணத்தில் ஸ்நானம் பண்ணி.. பிறகுதான் ஹோமம். முடிந்து வந்ததும் ஆரத்தி எடுத்து, உள்ளே வந்ததும், எல்லாருக்கும் பிரசாதம் (அந்த தேங்காய் வெல்லம் ரொம்ப நன்னா இருக்கும் !), தீர்த்தம்... நமஸ்காரங்கள் ..

பிறகு, நுனி இல்லை போட்டு சாப்பாடு ! மிச்ச போளியை பண்ணி,சாயந்திரம் வடையோடு அம்மா குடுப்பா.

கல்யாணத்துக்கு அப்புறம்... மாமனார் ஆத்தில் எல்லோரும் வீட்டில் குளித்ததோடு சரி. கோவிலில் வசதிப்படாது என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது !! சென்னையில் எதுக்குத்தான் வசதி !!

எங்காத்தில், மாமனார், S.K., இரண்டு மச்சினர்கள், என் பையன்கள்... 6 பெரும் வரிசையாக,பட்டு கட்டி (காலை குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சந்தியா வந்தனம் சொல்லிக் கொடுத்து பண்ண வைத்து...) கோவிலுக்கு போகும்போது... கண் திரிஷ்டிதான் படும்.. ! அவ்வளவு அழகு.

வரிசையாக உட்கார்ந்து, எல்லாருக்கும் பரிமாறி, நானும் என் மாமியாரும் சாப்பிட்டு முடிக்க 2 மணியாகும்.

இப்போது எல்லாமே business like !! 7, 9 என்று இரண்டு batch கோவிலில். இவர் முதல் batch க்கு போவார். அதனால் இட்லி கட் !

ஹோமம் எல்லாம்short cut, phataa fut !! 9 மணிக்கெல்லாம்வந்து, பத்து மணி சாப்பாடு !!

நிறைய பேர் வீட்டுக்கே சாஸ்திரிகளை வரச்சொல்லி செய்கிறார்கள். எனக்கென்னவோ கோவில் பிடிக்கும்.

சிறு வயதில் அப்பா என்னை அழைத்துப் போவார். கூஜாவுக்கு காவல் !!!

அன்று வீடே கல கல என்று ஒரு சந்தோஷம்  நிலவும் !

பண்டிகைக்காவது எல்லோரும் ஒன்று சேர்ந்த நாட்கள் போய்விட்டன !!

ஆனால் இன்னும் இந்த பண்டிகைகள் உயிரோடு இருப்பது சந்தோஷம் !!











Saturday, August 27, 2016

TREES & FLOWERS (2)....

மகிழம் பூ...

ஆகா... அந்த மரம் இருந்தாலே சுத்து வட்டு எல்லாம் வாசனையோ வாசனை.
கீழே நெறைய உதுந்து கிடக்கும். விடியற் காலையில்,, குளு குளு காற்றுடன், அந்த பூவை பொறுக்கறதே ஒரு அனுபவம். 
பொறுக்கியதை, தாவணி மடிப்பில் சேர்த்து, கொண்டு வந்து கொட்டி, (இதெல்லாம் தனியாக பண்ணக் கூடாது.. friends ஓட சேந்து பண்ணனும்) ஊசி நூல் வைத்து சரம் சரமாக கோத்து தலையில் வெச்சுண்டா  வாசனைதூக்கும்.. அந்தஇளம்பச்சைநிறமும், சின்ன சின்ன பூக்களும் அழகுதான்.

பவழ மல்லி, நந்தியா வட்டை... 
  

இரண்டுமே வெள்ளை; முந்தியது ஒரு அடுக்கு; பிந்தையது கொஞ்சம் அடுக்கடுக்கா இதழ்கள். 
சின்ன, அடர்த்தியான மரங்கள், பவழ மல்லியை , மரத்தை உலுக்கி உதுக்கலாம்; நந்தியா வட்டை பறிக்கணும்.
இவைகளை, ஊசி நூலில் கோத்து சுவாமிக்கு போடுவோம். 

 பவழ மல்லி, நந்தியா வட்டை, அரளி, செம்பருத்தி.. இவைகளெல்லாம், சின்ன தோட்டம் இருக்கறவா வீட்டுல கூட இருக்கும். 
கோவில் தோட்டங்களில் கண்டிப்பாக உண்டு...
                                       அரளி

                                 செம்பருத்தி

எங்க ஊருல எல்லாம், எல்லா கோவிலுக்கும் ஒரு நந்த வனம் இருக்கும்; சின்னதோ, பெரியதோ. அங்கே இந்த பூச்செடிகள் கண்டிப்பாக உண்டு. 
மெட்ராசில, எல்லா கோவிலிலும் நந்தவனம் இருக்கா ன்னு தெரியல்ல. 

அரளியில் மஞ்சள், சிகப்பு; செம்பருத்தியில் சிகப்பு ஒத்தை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி. 
இப்போ மெட்ராசில நர்சரியில , கலர் கலரா பாக்கறேன். 

தெருவில், வீட்டில் வேலியோரங்களில், ரொம்ப சின்ன சின்ன வெள்ளை நிற  தும்பைப் பூக்கள்மண்டிக்கிடக்கும்.. சின்னசெடிகளில்.
சங்கு புஷ்பமும் இப்படித்தான்... நமக்காகவே காத்திருப்பது போல் நீலம், ஊதா நிறங்களில் பூத்துக் கொட்டி கிடக்கும்.
                     தும்பைப் பூக்கள்
  சங்கு புஷ்பம்

அவைகளை பத்திரமாக பறிப்பது கூட கஷ்டம. அவைகளை நெறைய சேகரித்து வந்து, ஊசி நூலில் கோத்து, வட்ட வட்ட மாக வடை மாதிரி பண்ணி, அதை அரச மரத்தடி பிள்ளையாருக்கு வைப்போம்.

தஞ்சாவூரை சுற்றி நிறைய முந்திரி காடுகள். குட்டையாக அடர்த்தியாக, மரத்தின் மேல் பாகம், குடை மாதிரி அடர்த்தி இலைகளைக் கொண்டு இருக்கும்.. 


இவை தவிர, சுவரோரம் பிரண்டைகற்பூர வல்லி, வேலியில் படரும் வெத்திலை, ஆடு தொடா இலை
     பிரண்டை                கற்பூர வல்லி


ஆடு தொடா இலை











       வெத்திலை
இன்னும் எவ்வளவோ மரங்களுடனும், செடிக் கொடிகளுடனும், பூக்களுடனும் வாழ்ந்திருக்கிறோம்; இயற்கையை ரசித்திருக்கிறோம்.