பாட்டியின் மண் பானை சமையல், அம்மாவின் வெண்கல பானை ஆயிற்று;
எவர் சில்வர் என்று ஒன்று பளபளப்பாக வர, வெண்கல பானை
பரணுக்கு ஏறிற்று !
வந்தது ருக்மிணி குக்கர்... ஆஹா... எவ்வளவு எளிமை இனி..சாதம்
சமைப்பது...!!
அம்மா எனக்கு குடுத்தாள் கல் சட்டியும், வெண்கல
பானையும்...
"அம்மா குடுத்தது... தூக்கிப்போட மனசில்லை..."
பரணுக்கு ஏற்று...அம்மாவின் ஞாபகமாக இருக்கட்டும் !!!
பின்னர் பஜாரில் தலை காட்டியது பிரஷர் குக்கர்.. அதில் சமைப்பது
"ப்ரெஸ்டிஜ்"ஆயிற்று;
ருக்மணி போனாள் பரணுக்கு...!!!
எவ்வளவு மகிழ்ச்சி ! அந்த விசில் சத்தம் எவ்வளவு இனிமை !!
பக்கத்தில் நிற்க வேண்டாம், அடிக்கடி கிளற வேண்டாம், எரி வாயு
மிச்சம்...
இதெல்லாம் சொல்லப்பட்ட காரணங்கள் ... குடும்பத்தலைவனிடம் !!
அத்தோடு நின்றதா... ??
அப்புறம் வந்தது எவர் சில்வர் குக்கர் ! துலக்குவது சுலபம், எல்லோரும்வைத்திருக்கிறார்கள்
இப்போது சொல்லப்பட்ட காரணங்கள் !
ஆகா.... ஏறிற்று பரணுக்கு இன்னொரு குக்கர்...!!
தூக்கி போட மனமில்லை... "அடி கெட்டி" ... ஸ்வீட் செய்ய
உதவும் - இது சமாதானம்; ]
இப்போது... எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்; மைக்ரோ வேவ் !!
மனைவி சொல்கிறாள் கணவனிடம்...
"வேறு வீடு பாருங்கள்.. சமையல் அறையில் பெரிய பரணுடன் "
ஆனால்... பாட்டியின் மண் சட்டி கீரையும், கல் சட்டி
குழம்பும் எவ்வளவுருசி..
நாக்கு ஏங்குகிறது ... !!!!
No comments:
Post a Comment