Friday, September 16, 2016

LETTERS WRITING .....

காணாமல் போன கடிதங்கள்...

பழைய நாள்ள, கிராமத்துல, எல்லாரும் ஒண்ணா வாழ்ந்தா. ஒவ்வொருத்தர் பத்திய தகவல்கள், எண்ணங்கள் எல்லாம் நேரிடையா பரிமாறப்பட்டது.
யாராவாது, ஏதாவது வேலையா பட்டணம் போனா, "போய் சேர்ந்ததுக்கு, கடுதாசி போடு. திரும்பி வரும் தேதிக்கு  தகவல்தெரிவி" ங்கறInstruction ஓட, வழி அனுப்பப் பட்டா.
போறவரும், ஊருக்குப் போனதும், ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி (பல சமயம் கிளம்பும் போதே கார்டில் அட்ரெஸ் எழுதி எடுத்துண்டு போயிடுவா)
---------------------------------------------------------------------
"நமஸ்காரங்கள் .
சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்.
சீக்கிரம் திரும்பி விடுவேன்
கவலைப் பட வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்
வரும் முன் தகவல் கொடுக்கிறேன்.
அனேக நமஸ்காரங்கள்
இப்படிக்கு தங்கள் மகன்
............"
-----------------------------------------------------------------------
என்று ஒரு கார்ட் வரும். அது எல்லாருக்கும் படித்துக் காண்பிக்கப் படும்.
பெண் கல்யாணம் ஆகி, வேறு ஊருக்குப் போவாள். நேரம் ஒழியும் போது லெட்டர் எழுதுவாள்.


அது கண்டிப்பாக அம்மாவுக்காகத்தான் இருக்கும் ! ஆனால் படிப்பது, அப்பா, அண்ணன் என்று படிக்கத் தெரிந்தவர்கள். சமயத்தில் போஸ்ட்மன்.
---------------------------------------------------------
"அம்மாக்கு அனேக நமஸ்காரங்கள்.
இங்கு எல்லோரும் சௌக்கியம். அங்கும் எல்லோரும் சௌக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நிற்க,
அப்பாவுக்கு இருமல் தேவலையா. ? தம்பி ஸ்கூலுக்கு ஒழுங்கா போகிறானா. மன்னி பின்ன ஆரம்பித்த பூ வேலையை முடித்து விட்டாளா ?
முடிந்தால், எனக்கும் ஒரு பை பின்னி வைக்கச்சொல்லு.
மாடு ஒழுங்காக பால் கரக்கிறதா? கோடி ஆத்து செண்பகத்தை ரொம்ப விசாரித்ததாக சொல்லு.
இங்கு பட்டணத்தில் நல்ல சல்லடை அரை  ரூபாய்க்கு கிடைக்கிறது.
முடிந்தால் உனக்கு ஒண்ணு வாங்கி வருகிறேன்.
இங்கே மாமியார், மாமினார் எல்லாரும் சௌக்கியம்.
நான் நன்றாக சமைப்பதாக எல்லாரும் சொல்றா. உனக்கு அது சந்தோஷமா இருக்கும்னு நெனக்கிறேன்.
மற்றவை நேரில்
அப்பாவுக்கு என் நமஸ்காரங்களை சொல்லு. "
-----------------------------------------------------
இந்த கார்டு நூறு தரம் படிக்கப் பட்டு, கண் கலங்கி, பெண்ணின் நினைவுகளில் மூழ்கி, அம்மாவும் அப்பாவும் அவளை பற்றிய கதைகளை பேசி... பிறகு, லெட்டர் குத்தி வைக்கும் கம்பியில் சொருகப்படும்.
இந்த கடிதங்களில் ஒளிவு மறைவே இருக்காது... மாமியார் வீட்டிலும். அதனால் தான் மாமியார் கொடுமைகள் (!) லெட்டரில் இருக்காது.

1940 க்கு மேல் ஆண்களும் வெளி ஊரில் வேலை தேடி போனார்கள். அது, 50 களில் பாம்பே, டெல்லி, கல்கத்தா என்று  ஆயிற்று.
வருஷத்துக்கு ஒரு தரம் தான் பாக்க முடியும் ங்கற நிலையில, லெட்டர் ரொம்ப அவசியமாகி, வாழ்வின் ஒரு முக்கிய அங்கமானது.
கார்டில் நுணுக்கி நுணுக்கி அப்பா எழுதுவார். பல சமயங்களில், அம்மா சொல்படி பெண் அல்லது பக்கத்து வீட்டுப் பெண் எழுதுவாள்.
வீட்டு விஷயங்கள் எல்லாம் விவரமாக, ஒன்று விடாமல் எழுதப் படும். படிக்கும் போது படம் பார்ப்பது போல் தெளிவு.
ஒவ்வொரு லெட்டரிலும் ,"வேளா வேளைக்கு சாப்பிடு; உடம்பை பார்த்துக்கொள்; குழந்தைகள் ஜாக்கிரதை; எப்போதும் உங்கள் ஞாபகமாகவே இருக்கு" இதெல்லாம் ரிபீட்டு !!

அறுபதுகளில் என் அக்காக்கள் ஒவ்வொருவராக கல்யாணம் ஆகி போக, 3 அக்கா, 1 அண்ணன் வெளியூரில் இருக்க, அடிக்கடி லெட்டர் வரும்.
அம்மா, அப்படியே அந்த கடிதத்துக்காக காத்திருப்பது, கண் முன் இருக்கிறது.
11 மணிக்கு முதல் போஸ்ட் டெலிவரி. அந்த postmanஐ  பாத்து, "எனக்கு ஏதாவது இருக்கா?" ன்னு கேக்காம, அம்மா சாப்பிட்டது இல்லை. (10 மணி சாப்பாடு)
லெட்டர் இல்லன்னா, அத நெனச்சு கொஞ்ச நாழி உக்காந்துட்டு 11.30  க்கு சாப்பிடுவா. லெட்டர் இருந்தா, சந்தோஷமா வாங்கி, படிக்கச் சொல்லி கேட்டு, அதில் சந்தேகங்கள் கேட்டு (இத பத்தி என்ன எழுதி இருக்கு, அதைப் பத்தி சொல்லி இருக்காளா? ) .. அப்பாவை ஒரு தரம் படிக்கச் சொல்லி கேட்டுட்டு .. 11.30  மணிக்கு சாப்பிடுவா. அந்தக் கடுதாசியை தடவித் தடவி பாப்பா !!
காலை போஸ்டில் லெட்டர் வரலைன்னா, மூணு மணி , மாலை போஸ்ட் !
நான் உள்ளூரில் கல்யாணம் ஆகிப் போனாலும், அப்பா கிட்டேர்ந்து எப்போவாவது  கார்ட் வரும். அப்போ எல்லாம் போனே கிடையாது.
அப்புறமா, போன் வந்தாலும், எங்கம்மாவாத்தில கிடையாது .
1974 இல் பூனா போனேன். அப்பா கிட்டேர்ந்து வாரம் ஒரு கார்டு வரும்.
ரெண்டே லைன் தான் எழுதுவா.
-------------------------------------------------------------
"All well here. Write often. Hope Mappillai is fine"
உனக்கும்,  மாப்பிள்ளைக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள்
அப்பா "
--------------------------------------------------------------
இது கொட்டை எழுத்தில் இருக்கும்.
அப்போ எல்லாம் கார்ட் ஒரு அணா. அப்புறம் 10 நயா பைசா ஆயிற்று.
(அணா விலிருந்து பைசா வுக்கு மாறிய போது, புதிய மாற்றம் என்பதால் "நயா பைசா" )
Inland Letter 2 அணா. அப்புறம் 15 நயா பைசா ஆயிற்று. ஆனா அப்பா கார்ட்ல தான் எழுதுவா. அம்மா எழுதினா, (பக்கத்தாதில யாரையாவது விட்டு, எழுதச்சொல்லுவா - தமிழில்) ... விஷயம் நிறைய இருக்கும். ஏன்னா, வீட்டில நடந்தது எல்லாத்தையும், நேர பேசற மாதிரி எழுதணும். Inlandரொம்பிடும்.
தானே போஸ்ட் ஆபீஸ் போய் கார்டு, கவர் வாங்கிண்டு வந்து , தானே போய் போஸ்ட் பண்ணுவா. தானே போஸ்ட் பாக்ஸில் போடும்போது, அந்த தொடு  உணர்ச்சி எனக்கும் கிடைக்கும் என்ற ஒரு feeling .அம்மா லெட்டரை எதிர் பார்த்து எப்படி காத்திருப்பாள் ங்கறது எனக்கு தெரியும் ஆனதால், நானும் விவரமாக பதில் எழுதுவேன்.

 இவர் பூனா போய், இரண்டு மாதம் நான் மெட்ராசில் இருக்கறச்சே, நானும் இப்படித்தான் , மாடியிலிருந்து, போஸ்ட்மன் வரவை ஆவலோட பாத்துண்டிருப்பேன். தவறாம லெட்டர் வரும். இப்போ கவர். 25 பைசா. போன் பேசுவது என்றால், Trunk Call Bookபண்ண வேண்டும்.   சார்ஜ்அதிகம். அதனாலே போன் பேசும் வழக்கமே கிடையாது.
அம்மாக்கு, மாமியாருக்கு என்று வாரத்துக்கு ரெண்டு லெட்டர் எழுதணும்.
ஒரு அவசர செய்தி தெரிவிக்கணும்னா ஒரு தந்தி போகும். பழைய நாள்ல "சார், தந்தி" ன்னு குரலை கேட்டாலே, எல்லாருக்கும் பதட்டம் வந்துடும். ஏன்னா, அது ஒரு "கெட்ட" செய்தியாக  தான் இருக்கும்ன்னு ஒரு எண்ணம். அது ஒரு வகையில சரி தான். ஒரு deathசேதி தான் அவசரமா சொல்லப்படும்.

அதுக்கப்புறம் தந்தி கொஞ்சம் சாதாரண மாச்சு.
"arrived safely" ; "vasaantha delivered a baby boy. mother& child fine" ; "reaching there on Friday" ... இப்படியா பட்ட செய்திகள்.
அம்மாவாத்தில் குழந்தை பிறந்தால், மாமியார் வீட்டுக்கு நேரிலேயே, சர்க்கரை கல்கண்டோடு செய்தி சொன்னாலும்,  கார்டின் நாலு பக்கமும் மஞ்சள் குங்குமம் தடவி கார்ட் போகும். எந்த நல்ல செய்தியும், (கல்யாண நிச்சய தார்த்தம், வளை காப்பு, இப்படி) கார்டில் மஞ்சள் குங்குமத்தோடு போகும். பாக்கும்போதே மங்கள கரமாக இருக்கும்.  
என் குழந்தைகள் பெரியவார்கள் ஆகி, பெரியவன் ஹாஸ்டலுக்கு போனாலும், போன் சர்வ சாதாரணமாகி விட்டது. லெட்டர் எழுதும் வழக்கம் இல்லாமல் போயிற்று.
ஆனால் என் கடைசி பையன் XII thமுடித்து விட்டு, அமெரிக்கா போனான். அப்போ செல் போன் கிடையாது. நேரம் மாறுபடும் - சுமார் 9 மணி நேரம். அதனால் மறுபடியும் லெட்டர் எழுத ஆரம்பிச்சேன். நான் நாலு எழுதினா , அவன் கிட்டேர்ந்து ஒண்ணு வரும் ! ஆனா, அந்த ஒண்ணு ஒரு மாசத்துக்கு தாங்கும். எங்கம்மாவைப் போல, நானும் திரும்ப திரும்ப படித்து, லெட்டரை பத்திரமாக வைப்பேன்.
அந்த மாதிரி லெட்டரை படிக்கும்போது, அந்த கை எழுத்தைப் பார்க்கும்போது, குழந்தைகளை நேரில் பார்ப்பது போல் இருக்கும்; தொடுவது போல் இருக்கும்; அந்த உணர்வை விவரிக்க முடியாது.
நான் எழுதும் ஒவ்வொரு லெட்டரும், "கண்டிப்பாக பதில் போடு" என்றுதான் முடியும் !! வீட்டு விஷயங்கள், குடும்ப வம்புகள் எல்லாம் விவரமாக எழுதும்போது, மெட்ராசை மிஸ் பண்ணும்   அவனுக்கும், மனதுக்கு இதமாக இருந்திருக்கும்.
அவன் படிப்பை முடித்து, அங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க, அப்புறம் போன் செய்வது அவனுக்கு ஈசியாக போய் விட்டது.
பிறகு வாழ்க்கையை ஆக்கிரமித்தது e - mail . கம்ப்யூட்டர்  ல் டைப் அடிக்கும்போது , இந்த உணர்வுகள் மங்கித்தான் போகின்றன. செய்திகள் சுருக்கமாகவும், பிசினஸ் மாதிரியும் இருக்கு.
இன்னொண்ணு, இப்போ குழந்தைகளுக்கெல்லாம், அம்மாவோடு அடிக்கடி communicate பண்ணனும்னே தோணறது இல்லை. அந்த உணர்வு கொறச்சல் தான். எப்ப கேட்டாலும் "பிசி" ம்பா . டைமே இல்லைம்பா.
அப்புறம் செல் போன் வர, சீப்பாகவும் இருக்க (ஒரு வேளை நமக்கு பணம் அதிகம் இருக்கோ?) , குரலையாவது கேக்க முடியறது. எப்போ வேணும்னாலும் பண்ணலாம். அதுவே சில சமயம் தொந்தரவு கூட. - அம்மா, மீட்டிங்ல  இருக்கேன். அப்புறம் பேசறேன் !

அப்புறம், recentஆக  வந்தது skype . சௌரியமா போச்சு. காமரால முகம் பாத்து பேசலாம்; ரொம்ப நாழி பேசலாம்.; செலவு கிடையாது. சௌகரியம் தான்.
ஆனால், கையால் எழுதப்பட்ட ஒரு லெட்டரை படிக்கும் உணர்வும், சந்தோஷமும், இதுல எதிலையும் இல்ல ங்கறதுதான் உண்மை.
இப்போ போஸ்ட் ஆபீஸ் எல்லாம் அப்படியே இருக்கு. கார்ட், கவர், ஸ்டாம்ப் வியாபாரமே இருக்காது. போஸ்ட் பாக்ஸில் லெட்டரே இருக்காது. அப்போ, அங்கே இருக்கற போஸ்ட் மன் எல்லாம் என்ன பண்றா ?
போராக குவிந்திருக்கும் லெட்டர்களை, ஏரியா வகையில் பிரித்து , எடுத்து போவது, கட்டு லெட்டரை வைத்து, "கட்டக், கட்டக்" என்று சீல் குத்தும் வேகம், லயம், ஓசை இதெல்லாம் இருக்காதே !
போஸ்ட்மன் தான் வரதில்லையே தவிர, கொரியர் தூக்கிண்டு ஒரு நாளைக்கு 10 தரம் வந்து பெல் அடிக்கராளே - அதுதான் கொடுமை. உருப்படியா ஏதாவது இருக்குமோ - படிச்சுப் பார்க்கராப்புல ? எல்லாம் JUNK. அதுல பேப்பர்ல நியூஸ் படிச்சு படிச்சு, கொரியர் காரன் வந்து பெல் அடிச்சா , கதவ தெறக்க பயம்மா இருக்கு. இல்லாத கற்பனை எல்லாம் வரது! லெட்டர் குடுக்கராப்பல, உள்ளே வந்து, என்ன கொன்னு திருடராப்பல. அதனாலே, கிரில் வழியா வாங்கி, கையெழுத்துப் போட்டு, அவனை சந்தேஹத்துடன் முறைத்துபார்த்து சில சமயம் அவனுக்கே என்னை பாத்தா எரிச்சல் வரும்
இந்த computer, e-mailஇவைகளால் இன்னொரு பெரிய சந்தோஷம் போய் விட்டது !
பிறந்த நாளைக்கு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு, எவ்வளவு கிரீட்டிங் அனுப்புவோம் ! கடைக்கு போய் கிரீட்டிங் வாங்குவதே சுவாரசியம். நல்ல படம், வார்த்தைகளின் பொருத்தம், சில நல்ல humorous pictures, wordingsபாத்து எடுப்போம். உறவுகள் போட்டு, wife, husband, daughter, son, Birth day cards with age , எல்லாம் கிடைக்கும். அதை வாங்கி, ஸ்டாம்ப் ஒட்டி, கையெழுத்து போட்டு, அனுப்புவதும், பெறுவதும் எவ்வளவு சந்தோஷம் !
இப்போ எல்லாம் Mobile SMSஆச்சு. மொத்தமாக, எல்லாருக்கும் ஒரே மெசேஜ் அடித்து, send போட்டால் போய் விடும். இதில் personal touchஎங்கே இருந்து வரும் ??
Birth Day, Wedding Day Greetings  எல்லாம்  e-card  ஆகிப் போச்சு.
பேனாவால் போடும் ஒரு கையெழுத்துக்கு இதெல்லாம் ஈடாகுமா?

எனக்கு லெட்டரே தராத போஸ்ட்மன் ஐநான்வருஷத்துக்குரெண்டுதரம்கண்டிப்பாகபார்ப்பேன். ஒருத்தர்இல்ல... மூணுபேரு... அடையாளமேதெரியாது.. "யாருங்க" ன்னுகேட்டா" நாங்கதாம்மா  இந்தஏரியாபோஸ்ட்மேன்” ம்பா.
அவா மூணு பேர் வரது .... தீவாளி, பொங்கல் இனாம் வாங்க. விலை வாசி இதுலயும் தான் ஏறிப்போச்சு... ஒரு ரூ. குடுத்த இடத்துல குறைஞ்சது 50 ரூ. குடுக்க வேண்டியிருக்கு !!
அம்மா இருந்த வரைக்கும், கார்த்திகை , சங்கராந்திக்கு மணியார்டர் வரும். குஷியாக இருக்கும். மணியார்டர் வந்த, போஸ்ட் மானுக்கு சந்தோஷமா ஒரு ரூ. கொடுப்போம். இப்ப
நேரு, தன மகள் இந்த்ரா காந்திக்கு எழுதிய கடிதங்கள், ஒரு புத்தகமாகவே வந்திருக்கு !!
என் பேத்தி, குழந்தையா இருக்கறச்சே, ஒரு சார்ட் பேப்பரை கட் பண்ணி, படங்கள் வரஞ்சு, கலர் பண்ணி,  "Dear Paatti, Happy Birthday" ன்னு எழுதி குடுப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்படியே வீட்டிலே, டிவி  மேலேவெப்பேன். எல்லார்கிட்டயும்பெருமையாகாமிப்பேன். நிறைய குழந்தைகள், கிரீட்டிங் கார்ட் பண்ணுவதை ஹாபி யாக வெச்சிண்டிருந்தா. இப்போஅந்த சந்தோஷமும் குறைந்துதான் போச்சு.


2 comments: