Tuesday, September 13, 2016

FLOWERS...

பூ...

எங்க எல்லாருக்குமே பூ வெச்சுக்க ரொம்பப் பிடிக்கும்.
தஞ்சாவூர் கதம்பம் ரொம்ப famous . அதில் சுமார் 30 வகை பூக்கள், அதில் நிறைய வாசனை பூக்கள்இருக்கும்.
கெட்டியாக கட்டப்பட்டிருக்கும்.... கலர் கலராக இருக்கும்.
இது வருடம் முழுதும் கிடைக்கும்.

3 மாதங்கள் முன்பு தஞ்சை போனபோதுகதம்பமே இல்லை ! கேட்டால், " முன்னெல்லாம் தஞ்சாவூரை சுத்திநெறைய பூந்தோட்டம் இருக்கும். எல்லாம் plot போட்டு வித்துட்டாங்க. பூவே கிடையாது " என்ற தகவல் என்னை மிகவும் வருத்தியதுபாதித்தது !
ஏன் பெரிய வீட்டிற்கும் , flat இற்கும் , சொத்துக்கும், farm (farm போடாத) house க்கும் ஆசைப் பட்டுஇயற்கையை தொலைத்தோம் ??


 ஒரு முழம் கதம்பம் காலணா. (பேரம் பேசாமலேயே !)
நீளக்க, இறுக்கி தலை பின்னி, கட்டு பூ வெச்சு விடுவா. பூ, இரண்டு பக்கமும் கண்டிப்பாக தெரியணும்.. முன்னாலே இருந்து பாக்க.. அதுக்கு ஹேர் பின் எல்லாம் கிடையாது. சைடில் கொஞ்சம் முடி எடுத்து சொருகிக் கொள்வோம் !

இதை தவிர, சாமந்தி, மல்லி, ரோஜா, டிசெம்பர்... இதெல்லாம் சீசன் !
கனகாம்பரம் எப்போதும் கிடைக்கும்.
இந்த பூவெல்லாம் கூறு கட்டி விற்பார்கள்... சாமந்தி எண்ணி..எண்ணி...

இந்த பூ கட்டுவது என்பது ஒரு அழகான, சுவாரசியமான கலை.
பூவுடன் வாழை பட்டையும் தருவாள் பூக்காரி. அதை தண்ணீரில் போட்டு வைத்து விடுவோம்.


 மத்தியான வேலையில், எல்லாரும் சுத்தி உக்காந்து, பேசிண்டே, மட மட என்று பூ தொடுப்போம்...
வாழை நாரை, பின் வைத்து, சன்னமாநீளக்க கிழித்துக்கொள்வோம்...
மல்லி, கனகாம்பரம், இரண்டிரண்டாக ஒருவர் எடுத்து வைக்க, பக்கத்திற்கு இரண்டாக வைத்து, அடர்த்தியாக கட்டுவோம்.

நாலு மணி ஆனதும், தலையை இழைய வாரி, இறுக்கி பின்னி, ஒருவொருக்கொருவர் பூ வைத்து விடுவோம்.
(நீங்கள் பார்த்திருக்கிறீர்களா .. தெரியவில்லை.. தலை வாரும்போது, செடுக்கெடுக்க, அடுக்கடுக்காக உக்காந்துப்போம்.. நீள் வரிசையாக...உக்காந்துஒரே நேரத்தில்எல்லாருக்கும் தலை வாரியாகிவிடும் !
பின்னும்போது அம்மா அல்லது பெரிய அக்கா... எனக்கு அக்கா பின்னினால்தான் சரியாக இருக்கும்.)

எனக்கு மட்டும் இரட்டை பின்னல் உண்டு ! இரண்டு பக்கமும், தனியாக, சேர்த்து, பின்னலை சுற்றி பூ... !
வைஜயந்திமாலா, சரோஜா தேவி பாதிப்பு... !!


 சாமந்தியை கட்டு கட்டாக தலையில் வைத்து பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் வைத்துக்கொள்வோம்.. மஞ்சள், வெள்ளை கலர்கள்..
பின்னலும் இந்த வெயிட் எல்லாம் தாங்கியது... ( a rare sight nowadays ! ...now.. every girl is having loose hair&if at all flowers are kept inweddings etc., only jasmine, folded long&pinned at the centre)

அப்போ எல்லாம் பூவை கையால் அளவாக சுற்றி, முடி எடுத்து, பின்னலில் சொருகுவதே ஒரு கலை.



அம்மா வீட்டு தோட்டத்தில் கனகாம்பரம், டிசம்பர் பூக்கள் போட்டிருப்பாள்.ஆஹா.. அதை பறிக்கும் நேரமும் , தொடுக்கும் நேரமும்... அந்த சந்தோஷமும், அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும் !!
நிறைய பூக்கள் இருக்கும்... அந்தத் தெருவில் இருப்பவர்கள் எல்லாம் வாங்க வருவா. காசு குடுக்கத் தயார்...
ஆனால் எங்களுக்கு போக மிஞ்சியதுதான்...

அம்மாவும்தஞ்சாவூரின் கடைசி சில வருடங்கள், மிஞ்சிய பூவை, 100 காலணா என்று விற்றிருக்கிறாள்.. காசுக்கான அவசியம் !! ஆனால் அப்போதும், எங்களுக்குப்போக மிஞ்சியதுதான்..

ரோஜா சீசனில், 1 அணாவுக்கு 25 பூ கிடைக்கும். வாங்கி, அதையும் தொடுத்து வெச்சுப்போம் !
டிசம்பரில் வரும் என் பிறந்த நாளைக்கு, சாக்லேட் எல்லாம் கிடையாது... எல்லா டீச்சருக்கும் ஆளுக்கு ஒரு ரோஜா

இதைத் தவிர, அம்மாக்கு பின்னலில் பூ தைக்க நன்னா வரும். தலையை பின்னி,
தாழம்பூ, மல்லி, சாமந்தி, (கனகாம்பரமும், மருக்கொழுந்தும், கதிர் பச்சையும் மாற்றி மாற்றி) .. என்று விதம் விதமாக தைத்து விடுவாள்.
இப்போது மாதிரி ரெடி மேட் சடை எல்லாம் கிடையாது... ஊசியும், நூலும் வைத்து பொறுமையா தைப்பா...

"வங்கிப்பின்னல்"  என்று பூவை வைத்து பின்னுவாள்.
 நலங்குக்குக்கூட பூ தைத்தல்தான் !!
எங்கம்மா,தோட்டத்தில், சென்ட் ரோஸ் ன்னு ஒண்ணு இருந்தது...
ஒற்றை பெரிய, தடிமனான காம்பில், சின்ன சின்னதாக, பட்டன் ரோஸ் சைசில், வெள்ளை கலரில், நிறைய பூ சேர்ந்து , அடர்த்தியாக  பெரிய   கொத்தாக இருக்கும்... ரொம்ப ரொம்ப வாசனை... செடியும் அடர்த்தியான bush .
சமையல் அறைக்கும், கூடத்துக்கும் நடுவில் ஒரு அறை...
சமையல் அரைக்கும் இந்த அரைக்கும் நடுவில் ஒரு நிலை (கதவு கிடையாது)
தோட்டத்துக்கும், சமையல் அறையின் ஒரு பக்கம் கதவு..
ஒரு நாள் என் பெரிய அக்காசமையல் உள் போகரச்சே.. அந்த நிலைக்கு மேல், gap  இல், ஒரு பெரிய நல்ல பாம்பு... அனந்த சயனம் !!
நல்ல வேளையாக பார்த்து விட்டாள்.. இப்போ நெனச்சாலும் பயம்மா இருக்கும்...
உடனே, பக்கத்திலிருந்து ஆட்கள் எல்லாம் வந்துட்டா.. பாம்பை அடிக்க ஒரு சிறு கும்பல்... வேடிக்கை பாக்க பெரிய கும்பல்..!!
எங்காத்து பாம்பை எனக்கே மறைக்கிரா எல்லாரும்... முண்டி அடித்து முன்னால்நின்றால்... மனசுக்குள் நடுக்கம்... !
அடிக்க ஒருத்தர் கட்டைய ஒங்கரச்சியே நாங்க எல்லாம் சிதறி ஓடிட்டோம் !!
அதை அடித்து போட்டுட்டா... (நல்ல பாம்பை அடிக்கக் கூடாது ன்னு சாஸ்திரம் பேச எல்லாம் நன்னா இருக்கு... பின்ன அதை என்ன பண்றது ? "போடா ராஜா" ன்னு கொஞ்சினா, வீட்டுக்குள்ளேயே இடம் பெயரும் !! )
நான் என் குழந்தைகளுக்கு, ராம நாராயணன் ரேஞ்சு ல இந்த கதையை சொல்ல, ஒருதரம் குழந்தைகளுக்கு அந்த வீட்டை காண்பிக்க, "அம்மா, அந்த பாம்பு வந்த இடம் இதானே ?? " என்று காண்பித்துக் கேட்டார்கள் !! cross verification !!
பேரக்குழந்தைகளுக்கும் சொல்லி இருக்கேன்.. !!
மெட்ராஸ் வந்து கூட பூ பயித்தியம் போக வில்லை. ஆனால் சாமந்தி மட்டும் தடா.. எல்லாரும் பரிகாசம் பண்ணினா !!

அப்புறம் only மல்லி ஆகிப்போனது !

என் முதல் குழந்தை பிறப்பதற்கு முன்னால், ஏழு மாசத்தில், என் நாத்தனாருக்கும் அப்போது ஏழு மாசம்.

 அம்மா தண்டையார் பேட்டையிலிருந்து, விடியற்காலை  5 மணிக்கு  பூக்கடைக்கு பஸ்ஸில் போய் (Broadway ), நிறைய மல்லி மொக்கு வாங்கி, கொஞ்சம் கலர் பூக்களும் வாங்கி வைத்து, அது மலரும் முன் எங்காத்துக்கு, நுங்கம்பாக்கத்துக்கு வந்து1  மணிக்கு ஆரம்பித்து, சாயந்திரத்துக்குள், எங்கள் இருவருக்கும் பூ தைத்து விட்டாள். (மறக்கவே  முடியாது... நடுவில் ஒரு டம்ளர் காபி மட்டுமே !) .. அப்போ அம்மாக்கு 57 வயதுதான்.. கொஞ்சம் தளர்ந்துதான் போய் விட்டாள்... கஷ்டமான வாழ்கையின், வேலை பளுவின், ஏழு குழந்தைகள் வளர்ப்பின் சுவடுகள் அழுத்தமாக பதிந்து விட்டன... அம்மா உடம்பில் !
செருப்பு கூட போட தெரியாமல், வெறும் காலில் நடந்து, இரண்டு பஸ் ஏறி வந்து... விஞ்சி நின்றது பாசம் மட்டுமே... எங்கள்  மீது மட்டும் அல்ல... எல்லா பெண் குழந்தைகள் மீதும்... அது ஒரு UNIVERSAL  LOVE !!

பூ தைத்து விட்டால் , மூன்றாம் நாள் தான் பிரிப்போம். ராத்திரி தலை கலையாமல் படுப்பதே ஒரு ஆர்ட் !!
எப்படி பிரித்து எடுக்க வேண்டும் என்பதற்கு அம்மா instruction  கொடுத்து விட்டு போவாள்.

"அந்த நாள் போனதம்மா.. ஆனந்தம் போனதம்மா..
 அந்த நாள் இனி வருமா.. ஆனந்தம் நிலை பெறுமா..?? ""





No comments:

Post a Comment