Thursday, September 15, 2016

BRINJAL....

எனதருமை கத்திரிக்காயே
எனதருமை கத்திரிக்காயேஉன் மகிமையே மகிமை.
உன்ன வெச்சு எவ்வளவு உவமைகள் !
"கத்தரிப்பூ கலர் ", "குண்டு கத்திரிக்காய்", கத்திரிக்காய்க்கு காலும் கையும் மொளச்சாப்பில" , "குள்ள கத்திரிக்கா" .. இப்படி பல. 
சினிமா பாட்டுல கூட நீ வந்துட்டே ! 
உங்கிட்ட  நெறைய iodine, phosphorousஇருக்காம். உன்ன நெறைய சாப்பிட்டா , cancerவராதுன்னு எங்கோ படிச்ச ஞாபகம்.

அத விடு... நீ தான் எவ்வளவு ரூபத்தில, என்ன டேஸ்ட் குடுக்கற ?

நீதான் எத்தனை வகை ?
நாட்டுக் கத்திரிக்காய் ஒரு வகை ,
லேசான பச்சை நிறத்தில், மெல்லிசா நீளமாய் ஒரு வகை,
ஒரு shining violet கலர்ல, சின்னதா, உருண்டையா ஒரு வகை,
முள்ளோட ஒரு வகை,
குண்டா, பெரிசு பெரிசா ஒரு வகை ..
இப்படி பலப் பல
 உன்னிடமும் ஜாதி மத பேதத்த இந்த மனுஷா எல்லாம் உண்டு பண்றா.. நீ மயங்காதே.. உன் எல்லா ரூபபும் கத்திரிக்கா ங்கற ஒரே ஜாதி தான் !!)   

உன்ன எப்படி எல்லாம் நாங்க வதைக்கிறோம் ?
                                          
பிஞ்சா , சின்ன சின்னதா பொறுக்கி வாங்கி, உன்ன நறுக்காம, கீறி , உனக்குள்ள ஏதேதோ திணிச்சு, உன்ன எண்ணெய் கொப்பறையில போட்டு, வதக்கி சாப்பிடறோம். 
(நாங்க மட்டும், பாவம் பண்ணினா, எம லோகத்தில எண்ணெய் கொப்பறையில போடுவா ன்னு பயப்படறோம் !!)
கொஞ்சம் பெரிசா இருந்தா, மெல்லிசா, நீட்ட வாக்குல உன்ன நறுக்கி, உப்பு, மிளகாய் பொடி போட்டு, வதக்கறோம். (அதுல எண்ணெய் வேற கூட விட்டு !!)
நாட்டுக் கத்திரிக்காய வாங்கி, "வாங்கி பாத் " ன்னு சாதத்தில போட்டு கலக்கறோம் !
பெரிய கத்திரிக்காய , லேசா எண்ணெய் தடவி, தணல்ல அல்லது காஸ்ல வெச்சு சுட்டு, உன் தோல் சுருங்கி பிரிஞ்சு குடுக்க , அதை உரித்து எடுத்து, .. எத்தனை வகை உரு மாற்றம்..!
(இந்த மனுஷாளை புரிஞ்சிக்க முயற்சிக்காதே.. முடியாது. உன்ன பல சமயம் தோலோட சாப்பிடுவா, சில சமயம் தொலை உரிப்பா.. எல்லாம் அவா நாக்கு சொல்றத கேக்கறா !!)

சரி, உன்ன சுட்டு, மசிச்சு  என்னெல்லாம்பண்றா


சாதத்தில பெசஞ்சிக்க, சில பல சாமான்களை வறுத்து தொகையல்
தோசைக்கு தொட்டுக்க, வறுக்கற வேலையில்லாம, பச்சை மிளகாய், உப்பு, புளி வைத்து ஒரு வகை துகையல்.
 உன் கூட வெங்காயம் , தக்காளின்னு உன் உறவுக்காரா, friends எல்லாம் வெச்சு  வெண்பொங்கலுக்குஒருகொத்சு. 
 உப்பு, பெருங்காயம், கலந்து, கடுகு, ப.மிளகாய், வ.மிளகாய் தாளிச்சு, புளி குத்தி, "பச்ச புளி கொத்சு " ன்னு, அரிசி உப்புமாவோட தொட்டுக்க. 
வடக்கத்திக் காரா கிட்ட கத்துண்டு, "பைகன் பர்த்தா" ன்னு சப்பாத்திக்கு தொட்டுக்க..
 (எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேஹம்.. அவா அவா "தன பர்தா (Sanskrit - husband ) மேல இருக்கிற கோபத்தை, உன் மேல காட்டி, கரண்டியால குத்து குத்து ன்னு குத்தராளோ ? )   
நீ ரொம்ப நல்லவ. உன்னோட யாரை சேத்தாலும், சந்தோஷமா, இன்னும் ருசிய குடுக்கற.. 
வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பட்டாணி.. இப்படி எத வேணா உன்னோட சேக்கலாம்.. 
நீ கறி ரூபத்தில இருக்கச்சே, முதல் வாய் சாதம் , உன்ன போட்டு பிசிஞ்சு தான் ! அவ்வளவு ருசி. 
உன்னோட வெங்காயம் சேத்து கறி பண்ணினா - ருசியோ ருசி - ரொட்டிக்கு கூட தொட்டுக்கலாம். . 
உன்ன துண்டு துண்டா நறுக்கி சாம்பார்ல போடலாம் , வத்தக் குழம்புல போடலாம்... (இதிலெல்லாம் கூட உன்னோட வெங்காயம், குட மிளகாய் - இப்படி எது வேணா சேத்துக்கலாம். 
பொடி கத்திரிக்காயா இருந்தா, உன்னை வகுந்து, அப்படியே முழுசா போடலாம் 
உன்னை மெல்லிசா நறுக்கி, பிசிஞ்சுக்க பிட்லை பண்ணலாம்.
தொட்டுக்க ரசவாங்கி பண்ணலாம். 
உனக்கு இயற்கை "பாவாடை " கொடுத்திருக்கு... மனுஷா எல்லாம், அந்த பாவாடைய கழட்டி  எடுக்கறா
அப்புறம், அந்த பாவாடையோட ஒரு சமையல் குறிப்பு எழுதறா...
நீ மட்டும் எல்லாத்துக்கும் ரெடி. 
உனக்குள் புழுவைக்  கூடஅனுமதித்து, ஏன் பொறுமையாய் இருக்கிறாய்
ஏன் "சொத்தைக்" கத்திரிக்காய் என்று பேர் வாங்குகிறாய் ?
ஆனால், புழு, சொத்தை என்று தூக்கி எரிய்வதில்லை நாங்கள். அவைகளை நீக்கி விட்டு சமைப்போம். 
நீ அதிகமாக விளையும்போது, வத்தலாக போட்டு வைத்தாவது சாப்பிடுவோம. ஏனென்றால் , நீ இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. 
உன்னை, சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் , மைசூர் ரசம் .. எல்லாத்துக்கும் ஒரு நல்ல combination ஆக தொட்டுக் கொள்ளலாம்    
நீ வீட்டில இருந்தா, திடீர்னு யாராவது வந்தாலும் கவலை இல்ல. 
உன்னை வெட்டித் தள்ளி, நறுக்கறது ரொம்ப ஈசி. 

நான் ஸ்கூல் ல படிக்கறச்சே கூட, டிராயிங் கிளாஸ்ல உன்னைத்தான்  தான் படமா வரையச் சொன்னா டீச்சர். ஆனா உன் அழகை அந்த டிராயிங்ல முழுசா கொண்டு வர முடியல்லியே என்னாலே !
அதுக்காக நான் தான் திட்டு வாங்கினேன் ! எனக்கு உன்னை ரசிக்க, ருசிக்கத்  தான்  பிடிக்கும்; உன்னை வரஞ்சு, பேப்பர் ல அடக்க என்னால முடியாது !

உன்னை எல்லோருக்கும் பிடிக்கும். 

இவ்வளவு நல்லவளான உன்னை அமாவாசை, திவசம் ன்னா  தள்ளிவெச்சுடரா. !! (இதென்னஞாயம்) அதையும்சகிச்சுண்டு  நீ பொறுமையாதான் இருக்க !

இவ்வளவு நல்லது, உன்ன மாதிரி யாராவது மனுஷா செஞ்சா , பொன்னாடை போத்தி, பட்டம் குடுத்து கவுரவிப்பா.. 

பரவா இல்லை feel பண்ணாதே (நீ பண்ண மாட்டே) .. நான் குடுக்கிறேன் பட்டம்..

"தியாகச் செம்மல், பல ரூப அதி சுந்தர ராணி" கத்திரிக்காய் வாழ்க.   









No comments:

Post a Comment