Monday, October 30, 2017

cooking tips - 1

காலையில், முதல் காரியமாக, காப்பி கலந்து, ஆற்றி, நுரையுடன், எல்லார்க்கும் முன்னாடி, (husband எழுந்துட்டா கூட குடுக்க கூடாது), பதட்ட படாம, சாப்பிட்டு, வேலையை ஆரம்பிக்கவும் !!!!!
1. சேப்பங்கிழங்கை முதல் நாளே 3/4 பாகம் வேக வைத்து (குக்கர் இல் அல்ல), உரித்து, கட் பண்ணி fridge இல் வைத்து, மறு நாள், அதில் உப்பு, பெருங்காயம், சாம்பார் பவுடர், மஞ்சள் போடி கலந்து, பிசிறி, கொஞ்ச நேரம் வைத்து, தாளித்த பின், போட்டு கலந்து, சில நிமிடங்களுக்கு அப்புறம், transfer to a shallow non-stick frying pan... spread... ஒத்தை ஒத்தையாக..சிம் இல் வைத்து, அப்படியே விட்டு விட்டால், கொஞ்ச நேரத்தில் crisp கரி தயார்.
வாழை, உருளை,சேனை இதை எல்லாம் கூட தளித்த பின் transfer to a shallow non-stick frying pan... spread...
2. பருப்பு உசிலிக்கு முதல் நாளே அரைத்து, இட்லி தட்டில் ஊற்றி, வெட்டில் வைத்து, எடுத்து, fridge இல் வைத்து, மறு நாள் உதிர்த்து உசித்தால், என்னை அதிகம் இல்லாமல், உசிலிக்கலாம்.
3 . சாம்பாருக்கு அரைக்க வறுக்கும்போது, ரொம்ப வறுக்காமல், 75 % வறுத்தால் போதும் வாசனையாக இருக்கும்
4 . இட்லி க்கு வெங்காய சாம்பார் செய்யும்போது, அரைப்பதற்கு, தனியா, பொட்டுக்கடலை (கடலை பருப்புக்கு பதில்), வெங்காயம், தேங்காய் - பச்சையாக (வறுக்காமல்) அரைத்து, கடுகு, வெந்தயம், மி.வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம் வதக்கி புளி குறைவாக விட்டு, ஒரு தக்காளி கட் பண்ணி போட்டு, வெந்த காரட் ஒன்று போட்டு (நறுக்கி தாங்க..!!!), சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, ரொம்ப நேரம் கொதிக்க விடாமல், பருப்பு, அரைத்த விழுது சேர்த்து, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
5 . பருப்பு போடும்போது, வெந்த பருப்பை மிக்ஸ் யில் ஒரு சுற்று அரைத்து விடுவேன். ரசம், சாம்பாரில், முழித்து பார்க்காமல் இருக்கும்.
6 . ஊத்தப்பத்துக்கு , பச்சை அரிசி ஒரு கப், புழுங்கல் அரிசி ஒரு கப் ஊற வைத்து, துவரம் பருப்பு 3 / 4 கப், வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து, தனி தனி ஆக, அரைத்து, (பருப்பு, வெந்தயம் கொட கொட ன்னு அரைக்கணும்) , உப்பு சேர்த்து, கலந்து, கொஞ்சம் அதிகமாக புளிக்க வைத்து, சின்ன தாக வெட்டிய தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை , துருவிய காரட் எல்லாம் தனி தனியாக வைத்துக்கொண்டு, கல்லில் கெட்டியாக தோசை ஊற்றி, veg தூவி, சிம் இல் வைத்து, எக்ஸ்ட்ரா எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு, நன்றாக வேக வைத்து, கொத்த மல்லி சட்னி உடன் சாப்பிடவும். (சரஸ்வதி, கரென்ட் போவற்கு முன்னாள் சட்னி அரைக்கவும் !!)
7 . சப்பாத்திக்கு செய்த கரி, salad ஏதாவது மிஞ்சினால், கவலை வேண்டாம். மிக்ஸ் இல் அரைத்து, stuffed பராத்தா செய்யலாம்
இதை எல்லாம் படித்து, முத்து லக்ஷ்மி மாதிரி "அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்கிறவர்கள், "அதாங்க எனக்கு தெரியாது" என்கிறமாதிரி ஏதாவது எழுதலாம். !!!!!

அப்பாவோட மாமா ..

மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரி கரையில ஆக்ராஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!
காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.

Saturday, October 28, 2017

Photo......





பழைய நாட்களில் photo எடுக்கும் வழக்கம் அவ்வளவாக கிடையாது.
தஞ்சாவூரில், எனக்கு சுமார் 5 வயது இருக்கும்போது, அப்பா, ஒரு group photo எடுக்க decide பண்ணினார்.
நாங்க sisters எல்லாம் ஒரே துணியில், பாவாடை, சட்டை , தாவணி...uniform !! (நான் மட்டும், அதே துணியில், என் life லேயே போட்ட ஒரே கவுன் !!)
eldest sister புடவை.
என் சின்ன அண்ணா.. நல்ல சட்டை இல்லை என்று ஒரே அழுகை... கண்ணெல்லாம் சிகப்பு ! போட்டோவிலும் தெரியும் !
என் அம்மா அந்த போட்டோவில் super look !! she must have been around 37/38 yrs. (i have separated it & saved)
கல்யாணத்துக்குப்பிறகு பிறகு, எங்கப்பா உத்தரவு படி, முதல் வேலை...
Mount Road G.K.Vale இல், நின்று கொண்டு ஒரு full size photo & பாதி (bust size) photo ...
right side daughter or d' in law... left side s' in law or son. .... same pose !!
எல்லாரும் எடுத்து ஒரு காப்பி அப்பாவுக்கு...
அப்பா ஆத்தில்.. ஹால் சுவற்றில் வரிசையாக.. ஒவ்வொருத்தருக்கும் இரண்டு போட்டோ... age order இல் மாட்டப்பட்டிருக்கும்...
half - one row... full one row...
இதை தவிர...
M.S.Subbulakshmi, D.K.Pattammaal, N.C.Vasanthakokila, U.R.Jeevarathinam !!
(coming to think of it, why no male singer like GNB, Madurai Mani Iyer, Semmangudi, Ariyakkudi .. etc. who were very famous then ??)
நான், என் கல்யாண reception saree, Black beeds necklace போட்டு எடுத்திருந்தேன்.
என் புக்காத்தில் அந்த மாதிரி எடுக்கும் பழக்கம் இல்லை..
(with great difficulty i got permission to take the photo for my father's sake 5 months after marriage !!)
என் படத்தை பார்த்ததும்.. மாமியாருக்கு தன பெண் எடுக்க வில்லையே என்று ஆதங்கம்.
3 years முன்னாடி கல்யாணமாகி, 2 வயது குழந்த இருந்த , என் நாத்தனாரை வர சொல்லி, அதே புடவை, அதே ரவிக்கை, அதே கருகமணி மாலை, அதே போல் ஒற்றை பின்னல், நிறைய மல்லிகை பூ (இரண்டு பக்கமும் தெரிய வேண்டும் !!) ... அதே G.K.Vale இல், அதே மாதிரி இரண்டு போட்டோ எடுக்க வைத்தார் !!
அடுத்த நாத்தனாருக்கு, 5 வருடம் கழித்து கல்யாணம். அந்த புடவையை பத்திரமாக வைத்திருந்து...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
7 வருடங்கள் கழித்து... மச்சினர் கல்யாணம்...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
25 வருடங்களுக்கு பிறகு, என் கடைசி மச்சினனுக்கு கல்யாணம் ஆனபோது...
அப்பா... அந்த புடவை இல்லை...!! (உழைத்து உழைத்து உயிரை விட்டு விட்டது !!)

Friday, October 27, 2017

பழைய நாவல்கள்.......

இந்த பழைய நாவல்கள் படிக்கறதே ஒரு சுகம்...
அக்ரஹாரம்; 10/12 வயசுல 4 நாள் கல்யாணம்; அதோட விதரணை....
4000 ரூ. எதிர் ஜாமீன் குடுத்து, அக்ரஹாரட்தை அடைத்து பந்தல் போட்டு, 6 நாள் அங்கே ஒரு வீட்டிலேயும் அடுப்பு மூட்ட மாட்டா... ஒரு வேளைக்கு 500 பேர் போல் சாப்பாடு .... பண்ணை ஆட்களை சேர்த்து... துணி மணி , பட்சணம் பாடி... வெத்திலை சீவல் எல்லாம் சேர்த்து, 6000 ரூ. ல அமர்க்களமான கல்யாணம். மொத்தம் 10000 ரூ. எல்லாம் அப்பா, நிலத்தை வித்து, செய்வார். அதுவும் எப்படி- பத்துக்கு அஞ்சு பழுதில்லாம...
சினிமாவா.. 2 அணா குடுத்து பாத்துட்டு வருவா.. இது நானே பண்ணி இருக்கேன். 2 அணா டிக்கட், 1 அணா பாட்டு புஸ்தகம், காலணா கடலை, காலணா கமர்கட்டு... அம்மா குடுத்த 4 அணாவில பாக்கி அரை அணா திருப்பிக் குடுத்திருக்கேன் !!
கல்கி நாவல் ன்னா.. 500 ரூ. க்கு 50 பவுன் நகை; கையில 10/20 ரூ வெச்சுண்டு கல்காத்துக்கு பயணம். அன்னிக்கு தீர்மானிச்சு, அன்னிக்கே ரயில் ஏறுவா... "ஏண்டி அம்மா, இங்கே வறயாடி சித்த..." இது, பெண் அம்மாவை கூப்பிடுவது...
எங்கம்மாவே தன்னோட சித்திய (step mother) வாடி போடின்னு பேசுவா !! வேடிகையா இருக்கும் !!
கல்கிக்கு வருவோம்... தியாக பூமில, ஒண்ணுமே தெரியாத பட்டிக்காட்டுப் பொண்ணு, கல்கத்தாவில போய், மாமியார்ட்ட கஷ்டப்பட்டு, 8 மாசம் pregnant ஆ இருக்கச்சே , தனியா ரயில் ஏறி கிராமத்துக்கு (கும்பகோணம் பக்கம்) வருவா.. கையில் சில்லறை.. அங்கே அப்பாவை காணாம , பட்டணத்துக்கு போவா.. பட்டணத்துல சுத்தி "சம்பு சாஸ்திரி வீடு எதுன்னு தெரியுமா.. " ன்னு கேட்டுண்டே சுத்தி, மயக்கம் போட்டு, பிரசவம் ஆகி (செலவில்லாம ஆஸ்பத்திரில), ஒரு பெஞ்சியில தூங்கிண்டிருக்கற அப்பாவ பாத்து, குழந்தைய அவர் பக்கத்துல விட்டுட்டு, பம்பாய்க்கு ரயில் ஏறி , 6 வருஷம் கழித்து, 5 லக்ஷம் சொத்து இருக்கிற, ரொம்ப பணக்காரியா (!) நாகரீகமா திரும்பி வருவா...
இந்த நாவல் எல்லாம் லேசில் முடியாது... நம்ம மெகா சீரியல் மாதிரி இழுத்திண்டு போகும்.. coincidence ன்னா , அப்படி ஒரு coincidence.. 1000 சம்பவங்கள்...
பேரெல்லாம் இப்படித்தான்... அம்மாளு, அம்புலு, அம்பி, பட்டாம்பி, பாச்சா, சம்புவய்யர், பாப்பா, சீதா... இப்படித்தான் ... நிறைய சொல்லிண்டே போகலாம்.
இதே சிவசங்கரி பழைய வாழ்க்கை பற்றி கதை களம் அமைச்சால், பாண்டி ஆடற 8 வயசு பெண்ணுக்கு, 16 வயசு பையனோட கல்யாணம்.. அந்த கல்யாணத்துக்கு அப்பளம் இடுவதிலிருந்து வர்ணனை... அந்தோ பரிதாபம்... 10 வயசுல அந்த பெண்ணோட ஆம்படையான் செத்துப் போயிடுவான்... 14 வயசுல நார்மடி புடவை கட்டிண்டு... அடுக்களையில் பூந்தா.... ஆயுசு பரியந்தம் சமையல் அறை வேலை தான்... அந்த ஆயுசு ங்கறது 40/45.
தமிழ் ரொம்ப அழகு. எங்கப்பாவே எண்பதுக்கு , எம்ப்ளது ன்னு சொல்லுவா. 980 க்கு தொளாயிரத்து எம்ப்ளது ம்பா ... அது ஒரு வழக்கு தஞ்சாவூர் பக்கம்.
தஞ்சாவூர் அக்ரஹாரம் தமிழ் அப்படி ஒரு அழகு. அதில வளந்த நான்தான், போன "வேலைக்காரி லீவு" கதையில "கலீஜ்" ன்னு எழுதினேன் !!
இன்னும் சொல்லிண்டே போகலாம்... அவ்வளவு எண்ணங்கள் 

பிறந்த நாள்......

எங்கம்மாவாத்தில் எல்லார் பிறந்த நாளும் கொண்டாட வசதி இல்லை. அன்று ஒரு பாயசம் மட்டும் உண்டு.
நான் லக்கி. எனக்கு 3 ம் தேதி பிறந்த நாள். அப்பாக்கு சம்பளம் 1 ம் தேதி வரும். கையில் கொஞ்சம் பணம் புரளும்
(ஒன்றிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... தேதி 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம்)
எனக்கு சீட்டியில் (அது ஒரு வகை துணி) பாவாடை சட்டை உண்டு. (என் வாழ்க்கையில் நான் ஒரே ஒரு கவுன் தான் போட்டிருக்கிறேன்). 
அப்போதெல்லாம் சாக்கலேட் கொடுக்கும் வழக்கம் கிடையாது - யாருக்குமே.
டிசம்பர் மாதம் ரோஜா சீசன். 4 அணாக்கு க்கு 30/40 பூ கிடைக்கும்... ரோஸ் நிறத்தில். அப்போதெல்லாம் நான் வேற கலர் ரோஜாவே பார்த்ததில்லை. !!
ரோஜா வாங்கி, துணிப்பையில் (பிளாஸ்டிக் இல்லாத நல்ல காலம்) போட்டு தருவா. ஸ்கூலில் எல்லா டீச்சருக்கும் குடுப்பேன். எல்லா டீச்சரும், சந்தோஷமா தலையில் வெச்சுப்பா. எனக்கும் சந்தோஷமா இருக்கும்.
இப்படியாக என் பிறந்த நாள் இனிமையாக கழியும்.
ஆனால் நான் S.S.L.C. படிக்கும் போது (school final) ஏதோ காரணத்தால் அப்பாக்கு எனக்கு புதுசு வாங்க முடியல்ல. அன்றைக்கு கண்ணீர் விட்டு அழுதா. பசுமையா நினைவிருக்கு. நான்தான், "நான் என் தீவாளி டிரஸ்ஸை போட்டுக்கறேன்" என்று சொல்லி சமாதானம் பண்ணி, ரோஜா மட்டும் எடுத்துண்டு போனேன்.
மறக்க முடியவில்லை.... மறக்க முடிய வில்லை...இப்போது எவ்வளவு தான் கொண்டாடினாலும், அது அதுதான்... இது இதுதான்.

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...

1. வாழப்பூ நறுக்குகையில், பிய்த்துப் போடப்பட்ட மடலை ஆளுக்கொன்று எடுத்து வைத்துக் கொண்டு, அன்று சாப்பிடும்போது, அந்த மடலில் கறி போட்டுண்டு சாப்பிட்டது...
2. வெண்டைக்காய் நறுக்கியதும், அந்த தலைப்பாகத்தை (வெட்டி ஒதுக்கியது) நிறைய எடுத்து, முகம் பூர ஒட்டிக்கொண்டு திரிந்தது...
3. வாழப்பூ உள்ளிருக்கும், கடைசி பருப்புக்கு சண்டை போட்டு ஜெயித்து சாப்பிட்டது...
4. வெண்ணை உருக்கி மீந்த கசந்டில் சர்க்கரை கலந்து சாப்பிட்டது...
5. பழுத்துப் பிளந்து நீட்டவாக்கில் இருக்கும் வெள்ளரிப் பழத்தை வெல்லச் சர்க்கரை சேர்ர்த்து சாப்பிட்டது...
6. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டு, அப்பா குடுக்கும் பழைய பேப்பரில் சக்கையை துப்பி , குப்பைத்தொட்டியில் வாசலில் எரிந்தது....
7. சரோஜா தேவியைப் பார்த்து...
இரட்டைப்பின்னல் போட்டு மடிச்சுக்கட்டியது, அந்த பின்னலில் அடிவழியாகக் குடுத்து, இரண்டு பக்கமும் கொண்டு வந்து, மல்லி வைத்துக்கொண்டது...
நடுவில் மையால் ஒரு திலகம்- அதன் இரண்டு பக்கமும் இரண்டு சற்றே சிறிய திலகம்-அடியில் ஒரு சின்ன கொடு - அதன் அடியில் ஒரு சின்ன வட்டப் போட்டு... வைத்தது...
கண்ணில் மையிட்டு, திக்காக குருவி இழுத்தது...
அனுபவமே இல்லாமல், அர்த்தமே புரியாமல்.. "காத்திருந்தேன் காத்திருந்தேன்"... "காதலொன்றே இல்லையென்றால் கன்னி மனம் கருகி விடும்..." என்று அனுபவித்துப் பாடியது...
8. விடியற் காலை 4 - 6 மணிக்கு ரேடியோ மலேசியா கேட்டது...
9. அப்பா வருவது தெரிந்ததும்... சட்டென்று ரேடியோ வில் கர்நாடக கச்சேரி வைத்து, சமத்துப்போல் வேஷம் போட்டது...
10. விகடனுக்கு காலையில் தொடர் கதைக்காக சண்டை போட்டு, பிடுங்கி படித்தது....
11. கல்லுரல் மேல் உக்காந்து, குகுட்டி அடுப்பில் அம்மா போட்டுக்கொடுக்கும் காப்பியை அம்மாவைப் பார்த்துக் கொண்டே குடித்தது...
இன்னும்...இன்னும்... எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்... ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்...
மறக்க முடிய வில்லை... மறக்க முடியவில்லை...
அது ஏன் அம்மாவாத்தில் இருந்த நினைவுகள் மட்டும் அழுத்தமாக...??
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!!.. 1.

Pinnal........

ஒரு 12 வயது பெண்ணுக்கு தலை வாரி பின்னி விட்டேன். - உடனே எனக்கு என் அம்மா ஞாபகம்.
ஸ்கூல் போகும் நாளில் இரட்டை பின்னல்தான் என்றாலும், லீவு நாட்களில், ஒத்தை பின்னல் போட அம்மாதான் வாருவாள்.
அதுவும் எப்படி.. ? நின்னுடுண்டா..? ஊஹும் !
எண்ணெய் ஜாடி, சீப்பு, ரிப்பன், சமயத்தில் வாழை நார் எடுத்துண்டு, வெளிச்சம், காத்து இருக்கும் இடமா பாத்து, மேல் படியில் உட்கார, நான் கீழே. 
முதல் ஒரு கரண்டி முட்டை எண்ணெய் எடுத்து, இடது கையில் வெச்சுண்டு , ஒரு விரலால் தொட்டு, உச்சந்தலை, அப்புறம், குழைத்து தலை முழுதும், மயிர் கால்களில் படும்படி- இன்னொரு கரண்டி முட்டை எடுத்து, குழைத்து, கீழே முடியில்.
பிறகு சிடுக்கு எடுக்கும் படலம். கையால் கொஞ்சம் ஆத்தி விட்டு, சீப்பால் வலிக்காமல், வெட்டு வெட்டு என்று இழுக்காமல் (கொஞ்சம் வலித்தாலும் பொறுத்துக்கணும்) ..
அப்புறம் முன்னாலே வழிச்சு, தழச்சு, இழைய வாரி, வகிடு எடுத்து, மூணு கால் பிரிப்பாள்.
வலது பக்க காலை முதலில் போட்டு, பிறகு இடது.
அப்போ ஒரு இருக்கு இருக்குவா பாருங்கோ.. என் தலை, கழுத்து ரெண்டும் முன்னால் போய், பின்னால் வரும் .
"ஆ...!" என்றால் அதுக்கொரு குட்டு. "அப்புறம் தளர்ந்து போயிடும்" ன்னு ஒரு explanation .
இப்படி இரண்டு கால் போட்டவுடன் ஒரு "அழகு" வாரல் ஆரம்பிக்கும். அதாவது...
இடது பக்க காலை போட்டால், இடது கை கட்டை விரலால் பிடிச்சுண்டு, வலது கை சீப்பால் அந்தக் கால் மேல் "வழ வழ" ன்னு வாருவாள். பிறகு, வலது பக்க காலை போட்டு, அதை ஒரு வாரல்..
இப்படியே பொறுமையாக, அலுக்காமல், ஒவ்வொரு காலையும், "இழைய" வாரி, நுனி வரைக்கும் பின்னி, ரிப்பன் அல்லது நார் வைத்து நுனியை பின்னி, முடிச்சு போட்டு, பின்னலை ஒரு இழு இழுத்து, உள்ளங் கையால் மேலே இருந்து, கீழ் வரை தட்டி, கொஞ்சம் மடித்துக் கட்டி, "தாடையை" பிடித்து, வெடுக்கென்று திருப்பி, சீப்பால் "முன்னுச்சு" வாரி, முதுகில் ஒரு குத்து குத்தி, "எழுந்திறேன்" ன்னு ஒரு அதட்டல். - யாரோ ரொம்ப ஆசையா உக்காந்திண்டே இருக்காப்போல !
யாராவது தலையை குடுங்களேன். இழைய வாரி பின்னி விடுகிறேன் !!