Monday, October 9, 2017

வருத்தப் பட்டிருக்கிறேன் .....

வருத்தப் பட்டிருக்கிறேன் ..... பாரதி போல், கண்ணதாசன் போல், வைரமுத்து போல் - பாடல் எழுத வரவில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் ...... சுதா ரகுநாதன் போல், சுசீலா போல் பாடமுடிய வில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் ...... சுஜாதா போல், சிவசங்கரி போல் கதை எழுத தெரியவில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் பத்மினி போல், பத்மா வைப் போல் நடனமாட கற்க வில்லையே என்று....
இன்னும் இன்னும் படிக்கவில்லையே என்று; 
விளையாட வில்லையே என்று;
இன்னும் இன்னும் எத்தனையோ...
ஆனால்... இப்போதெல்லாம் சந்தோஷப்படுகிறேன்...
இந்த கலைகளை எல்லாம் ரசிக்கக் கற்றிருக்கிறேன் என்று
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்றிருக்கிறேன் என்று...
நல்ல குழந்தைகளுக்கு அம்மாவாக, சிறந்த பேரக் குழந்தைகளுக்கு பாட்டியாக பரிணமித்திருக்கிறேன் என்று...
குறை ஒன்றும் இல்லை - கண்ணா

எப்படி இருந்தேன்; மறந்தே விட்டதே....

எப்படி இருந்தேன்; மறந்தே விட்டதே....

நிறைய தலை முடி, நீளமாக, அடர்த்தியாக, இருந்த நாட்கள்...மறந்தே போய் விட்டது.
முடி நல்ல கருப்பாக, ஒரு காலத்தில் இருந்ததா.. யோசித்துப் பார்த்தாலும் அந்த நிறம் நினைவுக்கு வரவில்லை...
ஒல்லியாக, சிற்றிடையாக... நானும் இருந்தேனா; ஞாபகமே இல்லையே? 
எந்த பயமும், கவலையும் இல்லாமல், வெயிட் போடும் என்கிற பயமில்லாமல் நானும் சாப்பிட்டேனா... நினைவே இல்லை.
தோலெல்லாம் இன்னும் நிறமாக, இன்னும் ஸ்மூத் ஆக எனக்கும் இருந்ததா? எப்போது??
கண்ணாடி இல்லாமல் படிக்க முடிந்ததா? நம்ப முடியவில்லை...
இப்போ ...
நரைத்த முடியுடன் தலை...
கொஞ்சம் சுருக்கம் விழுந்த, நிறம் மங்கிய தோல்;
விமானத்தில், பெல்ட் சேர்த்து போட கஷ்டப்படும் இடை...
தினமும் ஒரு தையல் பிரித்து போடுமளவுக்கு சின்னதாகும் ரவிக்கை...
ஒன்றுமே நினைவுக்கு கொண்டு வர முடியாத மறதி
25 லிருந்து 50 வரை வாழ்க்கையை திரும்பி வாழ வாய்ப்புக் கிடைத்தால், கொஞ்சம் வித்தியாசமாக , மாடர்ன் ஆக வாழ்வேனோ??
வேண்டாம்... அதெல்லாம் முடிந்து போன கதை...
மறுபடியும் இதே நிலைக்கு வரும்போது, உலகம் இன்னும் முன்னேறி இருக்கும்...
திரும்ப திரும்ப 25-50 வேண்டாம்...
ஓய்வெடுப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது, புக்ஸ் படிப்பது, நினைத்தால் நினைத்தபடி வாழ்வது...
இதுவெல்லாம் தான் நிதர்சனம்....சுகம்.

Madras nalla Madras.

Madras nalla Madras.
1959 ஜூன் - காலேஜுக்கு திருச்சி, மதுரை, மெட்ராஸ் எல்லா ஊருக்கும் அப்ளிகேஷன் போட, அப்பாக்கு மெட்றாஸ் தான் பிடித்தது என்பதால், அப்பா முதலில் மெட்ராஸ் வந்து, Q.M.C. அட்மிஷன் லிஸ்ட் பார்க்க அங்கேஇடம்கெடச்சிடுத்து..
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately"
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி, தையற் காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்...
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது...
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும், அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger train ...... மறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் , என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது.
13 ரூபாய் வாடகையுடன் , புரசைவாக்கத்தில் துடங்கிய மெட்ராஸ் வாழ்க்கை, இன்று வரை இன்றைய சென்னையில் தொடருகிறது.
மெட்ராஸ் வாரம் கொண்டாடும் இந்த நேரம், என் மனதில், இந்த 58 வருட சென்னை வாழ்க்கை படமாக ஓடுகிறது.

வடாம் போடும் கல்யாணம் ......

வைகாசி பிறப்பதற்கே காத்துக் கொண்டிருந்தார் போல், பீனிக்ஸ் பறவை போல் அம்மாவுக்கு புது எனெர்ஜி வந்து விடும். என்ன, எல்லாம் வடாம் போடும் கல்யாணம் தான்.
2 நாள் முன்னாடியே நல்ல அரிசியை, ஜவ்வரிசியை பார்த்து வாங்கி, அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷினுக்கு தானே போய், முதலில் கொஞ்சம் வரட்டரிசி போட்டு அரைத்து விட்டு , அப்புறம் வடாத்து அரிசியை போட்டு அரைத்து வருவாள். யாரிடமும் நம்பிக்கை கிடையாது.
முதல் நாள் பெரிய மார்கெட் போய் தாராளமாக பச்சை மிளகாய், நல்லதாக பொறுக்கி எலுமிச்சை பழங்கள் என்று வாங்கி வருவாள்.
வடாத்து மாவு கிளற என்றே ஒரு அருக்கஞ்சட்டி, பெரியது இருக்கும். ராத்திரியே பச்சைமிளகாயும், உப்பும் வைத்து கல்லுரலில் மையாக அரைத்து வைத்து விடுவாள். விடிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு காப்பியை குடித்தால் , மாவு கிளரும் படலம். எப்படித்தான் அவ்வளவு மாவை கொட்டி பதமாக கிளற முடிந்ததோ. !
அதை ஒரு மணி நேரம் போல ஆற விட்டு, எல்லா சாமான்களையும் (தண்ணீர் கூட) மொட்டை மாடிக்கு ஏத்துவாள். வடாம் பிழிய ஓலைப் பாய்.
மாவில் பச்சை மிளகாய் அரைத்த விழுதை போட்டு, எலுமிச்சை பிழிந்து, ஒரு பெரிய தாம்பாளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, கையால் சேர்த்து பிசைவாள். உப்பு, காரம் பதமாக இருக்கும்.
பிறகென்ன, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதம் என்று, இந்த கல்யாணம் 1 வாரம் ஓடும். பிஸ்கட் டின் களில் ஒவ்வொரு வடாமும் ஒரு டின் நிறைய இருக்கும்.
இதில் எங்கள் பங்கு காவல். என் பெரிய அக்கா மட்டும் பிழிவதில் ஹெல்ப். அம்மா மாவை அச்சில் போட்டு தர, அக்கா பிழிந்து விடுவாள். நடுவில் ஒரு செகண்ட் டோஸ் காப்பி.
அந்த காவல் கொடுமை. வெய்யிலும் வெக்கையும் தஹிக்கும்.
கையில் கட்டு புஸ்தகம். கதை புஸ்தகம் தான். கையில் ஒரு கம்பு - காக்காய் விரட்ட. காக்கா ரெடியா இருக்கும் செவுத்துக் கட்டையில்.
ஒரு வடாத்தை பிச்சு திங்கலாமான்னு இருக்கும். ஆனா அம்மா கண்டு பிடிச்சுடுவா. "அங்கே ஓரத்தில் ஒரு வடாம் குரயறதே ; எங்கே" என்பாள். தின்னுட்டேன் என்று சொன்னால் அதற்கு திட்டு விழும்."அதான் கிளறின மாவு குடுத்துட்டேனே" என்று. காக்காய் கொத்திடுத்து என்று பொய் சொன்னால் அதற்கும் திட்டு விழுந் "துப்புக்கேட்டவளே" என்று.
நான் கடைசி, செல்லம் என்பதால், எனக்கு ஸ்கூல் லீவு நாளான சனி அல்லது ஞாயிறு அரை நாள் தான் ட்யூடி.
இப்போது இதெல்லாம் சாத்தியமா? நானும் பிழிந்திருக்கிறேன் குழந்தைகள் சின்னதாக இருக்கையில்.




வெற்றிலையை அனுபவித்து போடுவது எப்படி?.....

வெற்றிலையை அனுபவித்து போடுவது எப்படி?

வீட்டில் ஊஞ்சல் இருந்தால் ரொம்ப அழகு. அதில் கணவனும், மனைவியும் சேர்ந்து உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போடலாம்; இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சோபா செட். அதில் உட்கார்ந்து போடலாம்
மனைவி செய்ய வேண்டியது...
1. வெற்றிலையை அலம்பி எடுத்து, பாக்கு, சுண்ணாம்புடன் உட்கார்ந்து கொள்ளவும். ்
2.முதலில் கணவருக்கு கொஞ்சம் பாக்கு குடுத்து, நீங்களும் எடுத்துக் கொண்டு வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.்
3. இரண்டு வெற்றிலைகளை எடுத்து, ஈரம் போக துடைக்கவும்.
4. இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும்
5. நுனியை கிள்ளி விடுங்கள்.
6. வெற்றிலை காம்பிற்கு இரு புறமும் திட்டமாக வாசனை சுண்ணாம்பு தடவுங்கள்.
7. நீள வாட்டில் மடிக்க வேண்டும்.
8. வெற்றிலைகளின் மேல் காம்பை பிடித்து, மெள்ள இழுத்தால் நரம்பு வந்து விடும் .
9. இப்போது வெற்றிலையை நான்காக மடித்து ஆத்துக்காரர் கையில் கொடுத்து விடுங்கள்.
10. இதே போல் இரண்டு வெற்றிலைகளை, சுண்ணாம்பு தடவி, நுனி, நரம்பு எடுத்து, நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள் .
11. மற்றொரு செட் வெற்றிலை இரண்டு பேருக்கும்.
கொஞ்சம் மென்று விட்டு, வாய் எவ்வளவு சிவந்திருக்கு என்று பார்த்து சந்தோஷப்படலாம்.
இப்படி தினமும் ஒரு வேளையாவது ஒன்றாக உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொள்ளும் நேரம் மகிழ்ச்சியானது. அன்னியோன்னியமானது.
போட்டுத்தான் பாருங்களேன்.

INSTRUCTION TO MY NEAR & DEAR

INSTRUCTION TO MY NEAR & DEAR

When THAT happens, do not attempt to instill artificial life into my body by the use of medicine.
And don’t call this my death bed.
Let it be called the bed of life and let my body be taken from it to help others lead a fuller life.
Give my SIGHT to the man who has never seen Sunrise, a baby’s face or love in the eyes of a woman.
Give my HEART to a person whose own heart has caused nothing but endless days of pain.
Give my BLOOD to the teenager, who was pulled from the wreckage of his car, so that he might live to see his grand children play.
Give my KIDNEYS to one, who depends on a machine to exist from week to week.
Give my BONES, every MUSCLE, every FIBRE and NERVE in my body and find a way to make a crippled child walk.
Explore every corner of my BRAIN, take my CELLS if necessary and let them grow so that some day a speechless boy will shout at the crack of a bat and a deaf girl will hear the sound of rain against her window.
Burn what is left of me and scatter the ASHES to the winds, to help the flowers grow.
If you must bury something, let it be my faults, my weaknesses and all prejudice against my fellow man.
Give my sins to the devil.
Give my SOUL to GOD.
If by chance you wish to remember me, do it with a kind deed or word to some one who needs you.
If you do all I have asked, I WILL LIVE FOR EVER

சினிமா பாத்து அழறது........

சினிமா பாத்து அழறது ரொம்ப சாதாரணம்- முக்கியமா பெண்களுக்கு ... (முக்கியமா என்ன... அழறதே பெண்கள் தான். இதுல நான் கொஞ்சம் ஓவர்தான்.
என் பிரச்சினை எல்லாம் முக்கால் வாசி, ஹீரோவும், ஹீரோயினும் கல்யாணம் பண்ணிக்காம போறதுதான் !
"எதிர்பாராதது" துல சிவாஜியும், பத்மினியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம படத்த முடிச்சாங்க? ("அற்பச்செயலுக்கு, இப்படியும் மன அவஸ்தை பட விடுவாயோ..." ன்னு ரெண்டு சங்கதி போட்டு, இப்ப பாடினாலும், மனம் கனத்து, கண்ணில் தண்ணீர் வரும்; சாதம் இறங்காது)
"கல்யாணப் பரிசுல", சரோஜா தேவி, ஜெமினியை கல்யாணம் பண்ணாதது... இன்னி வரைக்கும் எனக்கு தாங்கல்ல. ("சென்ட்ரல் ஸ்டேஷனில்.. சரோஜா தேவி சோகமாக நடக்க, "காதலிலே தோல்வியுற்றாள்  கன்னியொருத்தி...கலங்குகிறாள் அவனை நெஞ்சில் இருத்தி...." ன்னு இப்பவும் பாடிப் பாடி அழறேன் !)
இதே போல், தேவதாஸ், பார்வதி ("எல்லாம் மாயை தானா, பேதை எண்ணம் யாவும் வீணா..ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா")
நர்கீஸ், ராஜ்கபூர் (அவன்) ; "ஆந்தி" யில் சஞ்சீவ், சுசித்ரா சென் பிரிவு..... இப்படி எத்தனையோ சொல்லிண்டே போகலாம்...
இதுல இன்னொரோ பிரச்சனை; சினிமா பார்த்தப்புறம், ஒரு வாரம் பிழிய பிழிய அழுவது.. எங்க வீட்டுல இதெல்லாம் எப்படி தாங்கினாளோ தெரியல்ல.
என் சிஸ்டர்ஸ் க்கெல்லாம் கல்யாணம் ஆகலைன்னோ, ஆனப்புறம் பிரின்னு போயிட்டாளே ன்னோ இன்னி வரைக்கும் அழுததில்லை. !!
10 வயசில பாத்த ஒரு படத்தில நடந்த (நடக்காத), கல்யாணம் , 70 வயசுலயும் என் மனதை பிசைவது தான்... சாரி... கொஞ்சம் ஓவர்...
இது மட்டுமா... நடுவில் பிரிவு..
"அன்பே..நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பதும் எங்கே " ன்னு சிவாஜி ஒரு இடத்திலையும், கதாநாயகி வேறு இடத்திலையும்.. மாறி மாறி பாடினது; "இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய், நீ எங்கே போகிறாய் " என்று ஜெமினியும், வைஜயந்தியும் "பார்த்திபன் கனவில்" ... ஜெமினி கப்பலில், வைஜயந்தி கரையில் "
சொன்னா நம்ப மாட்டேங்க... SK எங்களை பிரிந்து பூனாவில் வேலைப் பார்த்த 3 மாதங்கள் கூட என்னை பாதிக்கலை !!
(இருங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... கண்ணுல தண்ணி கொட்டறது; எழுத்து தெரியல்ல; தொடச்சிண்டு எழுதறேன்)
"கல்யாண ஊர்வலம் வரும்...உல்லாசமே தரும்.. " ; "என் காதல் இன்பம் இது தானா; சிறை காவல் நிலை தானா..."; "கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ, இன்பக் காதலிசை பாடியது நீயேயன்றோ.. (சரோஜா தேவியின் சோக முகம், இன்னிக்கும் ஞாபகம் வந்து torture பண்றது.) ... இதெயெல்லாம், கொஞ்சம் கூட பாவம் குறையாமல், பாடி, மன உளைச்சலுக்கு ஆளாவது, கொஞ்சம் அதிகம் தான்.
ஆனால், இதெல்லாம் பரவா இல்லை, சோகப்பாட்டு பாடினாலும் முடிவு சுபம்!
இதை எல்லாம் தூக்கி சாப்பிடராப்பல ஒரு சம்பவம்..
நானும் ஏன் சினேகிதி கீதா வும் விஜய், ரம்பா, தேவயானி நடித்த (படம் பேரு மறந்து போச்சே!) படத்துக்கு போனோம். விஜய்க்கும், தேவயானிக்கும் நடக்க இருந்த கல்யாணம் , க்ளைமாக்சில, விஜய்க்கும், ரம்பாவுக்கும் நடக்க.. கீதா அழுதா பாருங்கோ.. எதுக்கு ? விஜய் ஏன் தேவயானியை கல்யாணம் பண்ணிக்கலை ன்னுதான். இதுதான் லிமிட்... சினிமாவில் ஒன்றி போவதற்கு...
கல்யாணப் பரிசுல, தங்கவேலு எழுத்தாளர்ன்னு நெனச்சுண்டு சில லேடீஸ் வருவாங்க; "ஏன் சார், ........ கதையில, கதாநாயகி முடிவுல செத்துப் போறா?"
அதற்கு தங்கவேலு "அவ விதி, போயிட்டா..." ன்னு சொல்லும் வசனம் கிளாசிக். !!
அந்த மாதிரி எனக்கு எடுத்துக்க தெரியல்லியே.
ஆனா, இப்போ பாக்கிற படத்தில் எல்லாம் இந்த மாதிரி கொடுமைகளுக்கு சான்சே இல்ல. "டப்பான் குத்துவோட " கதாநாயகி ரோல் முடிஞ்சு போச் !!!!