ஆகஸ்ட் 22 - மறக்க முடியாத நாள்... நான் டீச்சராக பிறவி எடுத்த நாள்.
படிக்கும்போது டாக்டர் கனவுகளுடன் படித்தேன். டீச்சராவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. பிடிக்காது என்று நினைத்திருந்தேன் . எக்ஸாம் முடிந்து, ரிசல்ட்டும் வந்ததும், அப்பா சொல்படி A.G. 's office, Telephones , Government College க்கு எல்லாம் அப்ளை செய்துவிட்டு, அலஹாபாதில் , அண்ணா வீட்டிற்கு போயிருந்தேன். அப்பாவிடமிருந்து தந்தி... "உடனே கிளம்பி வா... Q.M.C. யில் வேலை” என்று. அண்ணா railways ல் இருந்ததால், உடனே டிக்கெட் வாங்கி, கல்கத்தாவில் , ஹௌரா எக்ஸ்பிரஸில் ஏற்றி விட்டார் .
மெட்றாஸ் வந்து சேர்ந்ததும், 22ம் தேதி காலேஜில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு, மற்ற இடங்களிலும் வேலை கிடைத்தாலும், அம்மா, அப்பாக்கு, காலேஜ் தான் பிடித்தது. அப்பாக்கு டீச்சிங் பிடித்தது... அம்மாவுக்கு அது பெண்கள் காலேஜ் என்பது பிடித்தது !!!
நான் படித்த காலேஜிலேயே, நான் படித்த lecturers உடன் வேலை பார்க்க பயங்கர கூச்சம். எனக்கு ஒரு வருடம் ஜுனியர் ஆக இருந்த பெண்களெல்லாம் ரொம்ப friends . லன்ச் சாப்பிட அவர்களுடன் மரத்தடிக்கு போய் விடுவேன். !! சில நாட்களுக்கப்புறம், staff ரூம் பழகி விட்டது. வேலையை ரொம்ப என்ஜாய் பண்ணித்தான் செய்தேன். 1963 - 1973.
1974 ல் SK பூனாவிற்கு வேலைக்குப் போக , நானும் குழந்தைகளுடன், காலேஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு , பூனா போய் , 1980ல் திரும்பி மெட்றாஸ் வந்து, மூன்று குழந்தைகளும் முழு நேரம் ஸ்கூலுக்குப் போக , தபால் வழி மேலும் படித்து, ஸ்கூலில் டீச்சராக சேர்ந்தேன் - 1985, ஜூலை 8.
மறுபடியும் நான் கற்பனை கூட செய்யாத வேலை. ஏனென்றால், "நான் ஸ்கூல் டீச்சிங் எல்லாம் போக மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அதையும் மிகவும் விரும்பி செய்தேன்.
அங்கேயே பிரின்சிபால் ஆக வேலை பார்த்து, ஓய்வு பெற்று, 2001 லிருந்து, 2015 வரை கோச்சிங் சென்டர் .
ஆக 1963 லிருந்து, 2015 வரை (நடுவில் ஒரு 11 வருட பிரேக்குடன் ) டீச்சர்.
இப்போதும், டீச்சர்களை பார்க்கும்போது, டி.வி. யில் கிளாஸ் ரூம், டீச்சிங் என்று காண்பிக்கும் போது மறுபடியும் அதே உத்தியோகம் பார்க்க ஆசையாக இருக்கிறது.
No comments:
Post a Comment