நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது....
ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence
இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா..
நடுவில் வந்த இடைஞ்சல்களை சமாளிக்க முடியுமா...
சீதையை பார்த்து, ராவணனை பார்த்து, இலங்கையை கொஞ்சம் தீக்கு இரையாக்கி..
ராமர் கண்டிப்பாக வந்து காப்பாற்றுவார் என்று நம்பிக்கை கொடுத்து...
(சீதைக்கு தெரியாதா? இல்லை நம்பிக்கை இல்லையா) இது ஒரு சாதாரண மனிதர்கள் படும் அவஸ்தையும், anxiety யும்.
ஹனுமான் திரும்பி வந்து... ஆவலுடன் காத்திருந்த ராமனிடம்..."கண்டேன் சீதையை " என்று கண்டேனை முதலில் வைத்து... எப்படி முக்கியமான செய்திகளை, முக்கிய தருணத்தில் சொல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்கு சொல்லித் தரவில்லையா... (நாம் அப்படி செய்கிறோமா.. போனில் ஒரு செய்தி சொல்ல அரை மணி நேரம் !!! )
படிக்கும்போது சிலிர்த்துத் தான் போகிறது..
அப்போது, "எப்படி, எந்த தைரியத்தில் ஹனுமான், கடலை தாண்ட நினைத்தார்?.. " என்று ஆரம்பித்து கேள்விகள் கேக்கலாம்.. ஏனென்றால் நம்மளால் முடியாத காரியம்.
அதற்காகத்தான், அனுமனை "தடங்கலை சக்திக்காக" சக்திக்காக வேண்டுகிறோம்.
ஒரு குழந்தை, தன் தாயை எப்படி நம்புகிறது ? தாயின் கையை பிடித்துக் கொண்டு விட்டால், தாய் போகுமிடமெல்லாம் போய், ஒரு இடத்தில் உட்கார வைத்தால் நம்பிக்கையாக உட்கார்ந்து, வேறு யாருடனும் போகாமல், காத்திருந்து, தாயை பார்த்ததும், கையை பற்றி கூட வரவில்லையா? எவ்வளவு செக்யூரிட்டி அம்மாவிடம்?
அதே குழந்தை... வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக விலகி, தானே சிந்திக்கும் போது, அவநம்பிக்கை கொள்கிறது... சமூகம் கற்றுக் கொடுக்கும் பாடம்... ஸ்திதப் ப்ரக்ன்யா இல்லை...
அதனால் தான் , மார்க் குறைந்ததால், வீட்டுக்கு போகாமல், மூன்று நாள், தூரத்து உறவுக்காரர் வீட்டில் தங்கி... எவ்வளவு சங்கடம் அந்த அம்மாவுக்கு.. இனி அந்த பெண்ணை எப்படி கையாள்வது என்று புரியாமல்..... இதெல்லாம் மனதில் கள்ளம் புகுவதால் வருகிறது... (மனதில் நடக்கும் குருக்ஷேத்திர சண்டையில், அர்ஜுனனாக , குழப்பமாக இருப்பதால் வருகிறது..)
நான் ஏற்கெனெவே எழுதி இருக்கிறேன்.. எப்படி என் பேத்தி மூன்று வயதில் வில் அம்பு எடுத்துக் கொண்டு , தனுஷ் கோடி போய் , அம்பு விட்டு, ராவணை அடித்து விட்டதாக நம்பி, ராமருக்கு ஆறுதல் சொன்னாள் என்று... அந்த innocence எப்போது மாறுகிறது ?
நாமெல்லாரும் கடவுளின் குழந்தைகளாகவே இருப்போம்.
சந்தேகங்கள் வந்தால் சுந்தர காண்டம் படித்து பலன் உண்டா?
ஆண்டாள் சொல்லும் "நீராடல்" என்ன ? குளத்தில் வெறும் குளியலா ? இல்லை... பகவானிடம் அதீத பக்தி கொண்டு, அவன் அருளில் முங்கி முங்கி குளிப்பது.. அவனை பற்றிய எண்ணங்களில் மூழ்கி மூழ்கி அனுபவித்து, மனதை சுத்தப் படுத்துவது... அவள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இஷ்டப் பட்டவர்கள் வரலாம் என்று எழுப்புகிறாள். மாலையை சூடிக் கொடுக்கிறாள்... அதுதான் பக்தி...
கண்ணப்பன் லாஜிக் யோசிக்க வில்லை, ஆத்மார்த்தமாக , வாயில் தண்ணீர் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணி, செருப்பால் கூட்டி சுத்தம் பண்ணி, ஒரு கண்ணை கொடுத்து, மறு கண்ணை எடுக்கும் முன், ஒரு காலால் இறைவனின் கண் இருக்க வேண்டிய இடத்தில் அடையாளம் வைத்துக் கொண்டு...
இதுதான் சரணாகதி...
இந்த சரணாகதி ஒரு முறைதான் பண்ண முடியும்.. ஒரு முறை சரணாகதி என்று பாதங்களில் விழுந்து விட்டால், மறுபடியும் எழுந்து, எழுந்து விழ முடியுமா... பிறகு பகவான் வேறு, நான் வேறு என்ற எண்ணம் எப்படி வரும் ? அது தானே கடவுள் நம்மை ஆக்ரமிக்கும் தருணம் ?
அதனால் தானே கண்ணப்பனுக்கு சிவா லோகப் ப்ராப்தி ?
"சிக்கென ப் பிடித்தேன் ... எங்கு எழுந்தருளுவது இனியே " என்று தேவாரமாக மலர்ந்தது !!
மானசரோவரிலும், கண்டகி ஆற்றிலும் (108 ) குழாய்களின் அடியில் குளிக்கும்போது, இறைவனை நம்பித் தான் இறங்குகிறோம்.. இல்லாவிட்டால் அந்த குளிர் தாங்குமா...??
//கண்டகி ஆற்றிலும் (108 ) குழாய்களின் அடியில் குளிக்கும்போது// - கண்டகி நதில நாங்க குளித்தோம். ஆனால் கொஞ்சம் சகதி இருந்தது. (எந்த இடம் என்று சட்னு நினைவுக்கு வரலை). முக்திநாத் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள இந்த 108 குழாய், திவ்யதேசங்களை நினைவுக்குக் கொண்டுவருவதற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கு. அதில் எந்த சிங்கமுகத்திலிருந்து வரும் நீரில் ப்ரோட்சித்துக்கொண்டாலும் போதுமானது. குளிக்கவேண்டும் என்றால் கோவிலின் முன் உள்ள நீர்த்தொட்டியில் குளிக்கலாம்.
ReplyDeleteசரணாகதிக்கு பிறகு வருகிறேன்.
சரணாகதி - வைணவர்கள் ப்ரபத்தி பண்ணிக்கொள்வார்கள். உன்னைச் சரணடைந்துவிட்டேன் என்று பகவானிடம் விண்ணப்பித்துக்கொள்வார்கள்.
ReplyDeleteஎல்லோருக்கும் சரணாகதிக்குப் பிறகு, அவன் என்னை முழுமையாகப் பார்த்துக்கொள்வான்..... இனி இந்த ஜீவாத்மா, 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகிலிடப்படோம்' என்று முழுமையான நம்பிக்கை வந்தால் அப்புறம் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், குரவர்கள், கண்ணப்பன் போன்றோருக்கும் சாதாரணமான நமக்கும் என்ன வேறுபாடு?
பகவானிடம் முழுமையான மனத்தைச் செலுத்தி அந்த இறை உணர்வுடன் இருப்பவர்கள்,
ReplyDeleteமுனியார், துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும் கனியார்.
அப்படி எத்தனைபேரை நாம் வாழ்க்கையில் சந்திக்கிறோம்? கொஞ்சம் யோசியுங்கள்? வெகு வெகு வெகு அபூர்வம்
ஒரு குழந்தை தாயிடம் வைக்கும் நம்பிக்கை போல கடவுளிடம் பக்தர்கள் வைக்க வேண்டும் என்கிற கருத்து பிடித்திருக்கிறது.
ReplyDeleteஅருமையாக உணர்ந்து அனுபவபூர்வமாகச் சரணாகதி தத்துவத்தை எடுத்துச் சொன்னதுக்கு மனமார்ந்த நன்றி.
ReplyDelete//இந்த சரணாகதி ஒரு முறைதான் பண்ண முடியும்.. ஒரு முறை சரணாகதி என்று பாதங்களில் விழுந்து விட்டால், மறுபடியும் எழுந்து, எழுந்து விழ முடியுமா... பிறகு பகவான் வேறு, நான் வேறு என்ற எண்ணம் எப்படி வரும் ? அது தானே கடவுள் நம்மை ஆக்ரமிக்கும் தருணம் ?// அருமையான விளக்கம்!
ReplyDelete