செப்டம்பர் ஏழாம் தேதி... பிள்ளையார் சதுர்த்தி அன்று எங்கள் கல்யாணம் நிச்சயம் ஆன நாள்.
மின்ன நாள்ல எல்லாம் அதுக்கு நிச்சயதார்த்தம் என்று பெயர் இல்லை. Engagement என்ற பிரயோகமே கிடையாது.
"பாக்கு, வெத்தலை மாற்றுவது " என்று பெயர். இது ஒரு சின்ன function . பிள்ளை வீட்டில் நடக்கும்.
"பாக்கு, வெத்தலை மாற்றுவது " என்று பெயர். இது ஒரு சின்ன function . பிள்ளை வீட்டில் நடக்கும்.
அதிகம் பேரை கூப்பிடுவது இல்லை. முக்கியமான , மிக நெருங்கிய உறவினர் மட்டுமே.
எங்கள் வீட்டில் இருந்து அம்மா, அப்பா, அக்கா, அத்திம்பேர் ,மன்னி இவ்வளவு பேர் தான்.
எங்கள் வீட்டில் இருந்து அம்மா, அப்பா, அக்கா, அத்திம்பேர் ,மன்னி இவ்வளவு பேர் தான்.
கல்யாண பெண்ணை கூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. "பளிச்சுனு புடவை கட்டிக்கோ, தலை பின்னி பூ நிறைய வெச்சுக்கோ" என்று என்னை எல்லாம் செய்துக்க சொல்லி, விட்டு விட்டு போய் விட்டார்கள் !!எனக்கு துணையாக என் அத்தையை வைத்து விட்டு, எல்லோரும் போனார்கள்.
சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எங்கள் வீட்டிலிருந்து போனவர்கள் கொஞ்சம் லேட். அதற்குள் அந்த சைடில் டென்ஷன்.
வெற்றிலை பாக்கு, மஞ்சள், பல தினுசு பழங்கள் , தேங்காய், பூ, ஸ்வீட் - சில முக்கியமான வெள்ளி பாத்திரங்கள் இவைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போனார்கள்.
சாஸ்திரிகள் வந்து, லக்ன பத்திரிகை படித்து சம்பிரதாயப்படி வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள்.
சாஸ்திரிகள் வந்து, லக்ன பத்திரிகை படித்து சம்பிரதாயப்படி வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள்.
பிறகு எல்லோருக்கும் டிபன் . சாப்பாடு கிடையாது.
வைரத் தோடு நகைகள், வெள்ளி பாத்திரங்கள், பித்தளை , எவர் சில்வர் பாத்திரங்கள், துணி மணி, மாப்பிள்ளை டிரஸ் , சத்திரம் , சாப்பாடு எல்லாம் சேர்த்து 22 , ௦௦௦ ரூ. பட்ஜெட்டில் எங்கள் கல்யாணம் நிச்சயமாகி அக்டோபர் 25 என்று முஹூர்த்தம் நிச்சயிக்கப் பட்டது.
No Photos !!!
No Photos !!!
இப்போதெல்லாம் நிச்சய தார்த்தத்துக்கு beauty parlor க்கே 22 , ௦௦௦ ரூ. ஆகும் !!!!
No comments:
Post a Comment