VESSELS
அந்தநாள்சாமானெல்லாம்நாமதூக்கிப்போட்டதுக்குமுக்கியமான காரணங்கள்..
பெரிசாஇருக்கும், maintain பண்ணுவதுகஷ்டம், எல்லாம்கனமாகஇருக்கும்...
அவைகளைதேச்சுசுத்தம்பண்ணுவதுஒருபெரியவேலை...
(அப்போஅதுகஷ்டமாதெரியல்லே... ஆனா.. பிளாஸ்டிக்ராணி நம்மைஆளஆரம்பித்ததும் , அவள்கலரில், பிடியின்சௌகரியத்தில், மெல்லிய , கனமில்லாதஉடலில்மயங்கித்தான்போனோம்.. அதோடுவிலையும்குறைவு, பழையதுணிகுடுத்தால்வாசலுக்கேவந்துபாத்திரக்காரன்குடுப்பான்... குளிக்கும்அறைசுவற்றின்நிறத்துக்கேற்பபக்கெட், மக் ; அதுவும்மெட்ராஸ்ஈவ்னிங்பஜார், சைனாபஜார்போனால் , அள்ளிண்டுவரத்தோணும் !!)
குளிக்ககுழாயடியில் பெரியபித்தளைஅண்டா, கங்காளம், சொம்பு,பிறையில்சோப்வைக்கபித்தளைடப்பா, மஞ்சள்உரைக்க, சின்னகருங்கல்...
இந்தகருங்கல்கூடவிதவிதமானஷேப்பில்அழகாகசெய்துவிற்றுகாசுபார்த்தார்கள்..
இந்தபெண்களுக்கேஅழகுணர்வும், கலைரசனையும்அதிகம். புதுசாகஇப்படிஎதுவந்தாலும்முழுஆதரவு. தான்வாங்குவதுமட்டுமல்ல; பிறத்தியார்எல்லாம்பார்க்கிறார்களஎன்றுஉறுதிசெய்துகொள்வார்கள்.. உடனேமற்றவரும்வாங்க, ("நீமாங்காய்ஷேப்வாங்கினா; நான்ஹார்ட்ஷேப்வாங்குகிறேன்" என்றுபோட்டிவேறு)
ஆண்கள், சிந்தித்து, மூளையைக்கசக்கி, புதுசுபுதுசாகஏதாவதுசெய்துவியாபாரத்தைபெருக்கி, பணக்காரர்ஆவதே, இந்தபெண்களைநம்பித்தான்...
ஆண்கள் , எவ்வளவுதான்படித்து, technical ஆகச்
சொன்னாலும், யாராவதுலேடிகொடுக்கும் certificate க்குத்தான்மதிப்புஅதிகம் !! அதைபொறுத்துத்தான்வியாபாரமும் !!
சரி, நம்மவீட்டுசாமான்களுக்குவருவோம்...
சமையல் அறையில்...
சாதம் வடிக்க - வெண்கலப்பானை, சிப்பல் தட்டு, ஓல வட்டி கரண்டி;
குழம்பு வைக்க... ஈயம் பூசின அடுக்கு, குழிவு கரண்டி...
ரசம் வைக்க
ஈயச் சொம்பு
கூட்டு பண்ண - வெண்கல உருளி,
வத்தக் குழம்பு, மிளகு குழம்பு, புளிக்காச்சல் எல்லாம் மாக்கல் சட்டியில் .
இதைத் தவிர பித்தளை அருக்கஞ்சட்டி, காபி டபரா, டம்ளர்கள், பறிமாற தாம்பாளங்கள், சாதம் கலக்க பித்தளை பேசின்கள், தண்ணி குடிக்க லோட்டா
(இப்போ பித்தளை லோட்டா தேடினேன்.. தேடினேன்.. அப்படித் தேடினேன்.. கிடைக்க வில்லை) ,
குடிக்க, சமைக்க, தண்ணீர் ரொப்பி வைக்கும் குடங்கள், தவலைகள்,
இரும்பு இலுப்பச்
சட்டி, ஜல்லிக் கரண்டி, இரும்பு தோசைக்கல், தோசைத் திருப்பி, அடைக் கல் (தண்டவாளக் கல்)
பாகு வெக்க, வெல்லம் காச்ச, அருக்கஞ்சட்டி , பண்டிகை நாட்களில்
சமைக்கும் பலவித கறி களை எடுத்துப் பறிமாற, பித்தளை கொத்துத் தூக்கு, சாம்பார் பரிமாறும் பித்தளை வாளி,
மாவரைக்க கல்லுரல், சட்னி அரைக்க அம்மி, மாவு, மிளகாய் பொடி இடிக்க இரும்பு உலக்கை...
ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய் ஜாடிகள், ஜாடிக் கிண்ணங்கள்...
பித்தளை காபி ஃ பில்டர், ...
மேலிருந்து ஹூக் மாட்டி, அவைகளில் தொங்கும் பித்தளை தூக்குகள்...
தயிர் கடையும் மத்து, கீரை கடையும் மத்து - இவைகள் மரத்தில்- இவைகளைத் தவிர மரக்
கரண்டிகளும், கரண்டி
முட்டைகளும்...
மண் அடுப்பு , இரும்பு அடுப்பு (விறகு அடுப்புகள்), குமுட்டி (கரி அடுப்பு)
சமையல் அறையில் மட்டும் இத்தனை சாமான்கள் !!
[சமைத்த சாப்பாட்டை, தணித்த அடுப்பின்
மேலும் குமுட்டி யின் மேலும் வைத்திருக்க, சூடு ரொம்ப நேரத்துக்கு இருக்கும்.
காலையில் 10 மணிக்கு சாப்பிடும் வழக்கம் உள்ளவருக்கு, நல்ல, சூடான சாப்பாடு.
சாப்பிட இலைதான்... தட்டு கிடையாது... இலை உடம்புக்கு
நல்லது; hygenic ; தூக்கி எரிந்து
விடலாம்... நம் தட்டு மாதிரி தேய்த்துத் தேய்த்து use பண்ண வேண்டாம்;
இந்த வாழை இலைகளை ஆடு மாடு கூட சாப்பிடும்... மக்கினாலும்
மண்ணுக்கு நல்லதுதான்..
சாப்பாடு மிஞ்சினால் பத்திரப் படுத்த fridge கிடையாது; கறிகாய் கள் அன்னன்னிக்கு fresh ஆக வாங்கப்படும்; ]
சரி, இவைகளை கட்டிக் காப்பாற்ற முடியாமல் என்ன பிரச்சினைகள் ?
அடுப்பில் வைக்கும் பாத்திரங்களில் கரி ஏறும்... அதனால்
அடுப்பில் வைக்கும் முன் அரிசிமாவை எடுத்து, தண்ணீர் தொட்டு, அடியில் பூச வேண்டும்.. அப்படியும் கரி ஏறும்; ஆனால் தேய்த்து எடுப்பது சுலபம்.
சமைக்கும் பித்தளைப் பாத்திரங்களில், ஈயம் பூச வேண்டும்.
இல்லாவிட்டால் கச்சிப் போய் விடும்
ஈயம், அடுப்பில் வைத்தால், தண்ணீர் குறைத்தால் உருகி விடும்..
பித்தளை பாத்திரங்களை தேய்க்க, புளியும், அடுப்புச் சாம்பலும்... சாம்பலை எடுத்து, சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேய்ப்பதற்கு தேங்காய் நார்... இதெல்லாமாக சேர்ந்து
பாத்திரம் தேய்க்கும் இடத்தை கொஞ்சம் அசுத்தம்மக்கத் தான் செய்யும் ! அதை அலம்பி
சுத்தப் படுத்த ஒரு நாழி !!
அப்போ
எல்லாம் கொல்லைப் பக்கம் வாழை மரங்களை நட்டு வைக்க, இந்த
சாம்பல் கலந்த தண்ணி, பத்து பசைகள் வாழை மரத்துக்கு போகும். இப்ப என்ன, சமையல் ரூம் sink கிட்ட வாழை மரமா வைக்க முடியும் ?
ஜாடிகள் கை தவறினால் உடையும்...
கல்லுரல் வாங்கினால் பழக்க வேண்டும்.. அதாவது, அரைக்கும்போது, கல்லும் மண்ணும்
வந்து கொண்டே இருக்கும். அதை போக்க, தினமும் அரசி நொய், தவிடு, உமி போட்டு அரைத்து
எடுக்க வேண்டும்... சில நாட்கள் ஆகும் சுத்தமாக.. அம்மியும் இப்படித்தான் பழக்கப்
படுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல், ஒன்றிரண்டு வருடத்தில் கல்லுரலும், அம்மியும், சுர சுரப்பு குறைய.. "அம்மி பொளியலியோ" ன்னு கத்திண்டு போறவனை
கூப்பிட்டு, பொளிய சொல்லி, மறுபடியும், உமி, தவிடு ன்னு அரைத்து
சுத்தம் பண்ணனும்... அதுக்கெல்லாம் இப்போ நேரமோ, பொறுமையோ இல்லை என்பது தான் நிஜம்...
கல் சட்டியை பழக்க, 10நாட்கள் ஆகும் !
தினமும் சாதம் வடிக்கும் கஞ்சியை சூடாக ஊற்றி வைக்க வேண்டும்; அப்புறம் சமைக்கும் குழம்பு, கூட்டு எல்லாம்
இதில் போட்டு வைக்க வேண்டும்...அப்புறம் "உடைந்து விடுமோ" பயந்துகொண்டேஅடுப்பில்வைக்கவேண்டும். .
இப்போ எல்லாம் husband ஐ பழக்க, குழந்தைகளை பழக்க, வேலைக்காரியை பழக்க, நாயை பழக்க..
எவ்வளவு பேரை பழக்க வேண்டி இருக்கிறது ? இதில் கல்லுரல், அம்மியையும், கல் சட்டியையும் வேற பழக்கணுமா ?
ஆனால் ஒன்று.. ஈயமும் பித்தளையும் அப்படியே காசு..
விற்றால்... எவர் சில்வருக் குத் தான் மதிப்புக் கிடையாது...
(பின்னே ஏன் "ஈயம்
பித்தளைக்கு பேரீச்சம் பழம்" ன்னு கூவறாங்க ?)
இப்போ நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள்...
இடத்தை அடைக்காது - flat இல், சின்ன சமையல் அறையில், அலமாரியில் வைக்கலாம்..
சோப் போட்டு தேய்ப்பது சுலபம்
கல்லுரலில் அரைத்தால் கை வலிக்கும். அம்மிக்கு பதில்
மிக்சியில் சீக்கிரமாக வேலை முடிந்து விடும்...(அப்போ தானே T.V. சீரியல் பாக்கலாம் !!)
(ஆனால், கை வலியும், spondulaities ம், முதுகு வலியும் இப்போ கொஞ்சம்அதிகமாகஇருக்கிறதோ? கனம் தூக்க தெம்பு இல்லையோ ? )
சமையல் அறை sink லேயே தேய்க்கலாம்.. குந்தி உட்கார வேண்டாம்...
கண்ணாடி பாத்திரங்கள் பள பள வென்று இருக்கும்.. (ஸ்டைல் தான் !)
எல்லாமே தூக்கி போட்டு விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்
அதான் ரெண்டு பெரும் சம்பாதிக்கரோமே !! (நெறைய வீடுகளில்)
எல்லாவற்றையும் விட வீட்டு வேலை செய்பவள் , பித்தளை பாத்திரம்
போட்டால் ஓடி விடுவாள் !!
வர வர “வாஷிங் மெஷினும் , டிஷ் வாஷரும் இருக்கா ; குனியாமல் பெருக்க நீளதுடைப்பமும், துடைக்க Mop ம் இருக்கா " ன்னு கேட்டுண்டு தான் வேலைக்குவரா
அவாளாலையும் வர வர முடியல்ல... நேரம் இல்ல... !!
ஆனால் எனெக்கென்னவோ இப்போ பழைய பாத்திரங்கள் மேல் ஒரு ஆசை
வருகிறது. எல்லாத்தையும்தூக்கிப் போட்டேன் ! இப்போ வாங்குகிறேன் !
இன்னும் விறகு அடுப்பு தான் பாக்கி !!
gas விற்கும் விலையில், சமைக்காமல், பச்சையாக எதை எதை சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
இதில் பாத்திரமாவது, பண்டமாவது?