Saturday, March 30, 2019

சபாவில் நான்......

நாரத காண சபாவுக்கு ட்ராமாக்களுக்கு போவேன். சில சமயம் கையில் புத்தகம் எடுத்துக்கொண்டு. அங்கே என் பார்வையும் எண்ணங்களும்.
வந்தவர்களின் average age 65 ! ஆண்கள் வேஷ்டியில். பெண்மணிகள் (மாமிகள்) சாதாரண புடவை கட்டு, தலைப்பைக் கொசுவி மேலே போட்டு, பலர், ஒரு நுனியை இடுப்பில் இழுத்துச் சொருகி... அநேகமாக முழுதும் வெள்ளையான முடியில் சின்ன கோடாலி முடிச்சு.. அதில் ஒரு கணு மல்லிகைப் பூ; நெற்றியில் அழகாக குங்குமம்..
அவர்கள் ஹாலில் நுழையும் போதே, சத்தமாக வும், சந்தொஷமாகவம், சிநேகிதர்களை, தினமும் சபாவில் meet பண்றவாளை greet பண்ணிக் கொண்டு. !!
ஒரு பக்கம் மாவடு, ஆவக்காய் போட்டு விட்டதைப் பற்றி பேச்சு... ஒரு பக்கம் அப்பளாம் இடும் கல்யாணம் ஆரம்பித்து விட்டதைப் பற்றி டிஸ்கஷன். எல்லாம் சத்தமாக.. ஒரு inhibition ம் இல்லாமல்... மச்சினர், ஓர்ப்படி, நாத்தனார் என்று செய்திகள்... எதுவுமே வம்பு தும்பு இல்லை.. சகஜமான தகவல்கள். நடு நடுவில் கையில் கொண்டு வந்திருக்கும் சுலோகப் புத்தகங்கள் படித்து...
பக்கத்தில் இருக்கும் மாமிகள் இருவரும், திங்கட் கிழமை கிளம்பப் போகும் அமேரிக்கா பயணம் பற்றி...
இப்போது நடுத்தர குடும்பங்களில் இது ரொம்ப சகஜமாக போய் விட்டது... பெண்கள் அசால்ட் டாக அமேரிக்கா போய் 6 மாதம் இருக்கிறார்கள்.. பெண்ணுக்கு பிரசவம், பிள்ளையின் குழந்தைகள் என்று அவர்களுக்கு ஏதோ காரணம் கிடைக்கும். ஆனால், கொஞ்சமும் மாறாமல், போன படியே திரும்பி வந்து, அதே யதார்த்த வாழ்க்கை வாழும் அவர்களைப் பற்றி appreciate பண்ணியே ஆக வேண்டும்.
அந்த ஹாலில் நான் மட்டும் , odd one out.
நான் மட்டும் வித்தியாசமாக ! ஒற்றையாக விட்ட பின் பண்ணிய தலைப்பு, (fashion parade மாதிரி) ; matching "jing-bing) ; கையில் ஜெயகாந்தன் புக் .. ரீடிங் cum listening ! ரொம்ப அன்னியமாக உணர்ந்தேன்...
ஏன் இப்படி கலந்து பேசத்தெரியாமல் ? மனம் பின்னோக்கி போக... அப்பாவின் attitude... அம்மா யாருடனும், அண்டை அசலில் அரட்டைக் கூடாது... அம்மாவுக்கு வழக்கமே இல்லாமல் போய், பேச மறந்தே போனாள்....
யாரோ சிநேகிதனுடன் தெரு மூலையில் நின்று பேசிய அண்ணா வாங்கிய 'பளார்' , எங்களுக்கு கூறாமல் கூறப் பட்ட கண்டிஷன்.
அப்படியே பழகி விட்டதோ? எப்பவும் உம்மணா மூஞ்சியாக... என் மாமியார் வீட்டிலும் முதலில் பயந்து பயந்து.. ஆனால்.. பின்னாளில் நிறைய பேசக் கற்றுக் கொண்டேன்.. நிறைய பேச சந்தர்ப்பம் அளித்தது .. இந்த முக நூல் தான்.
சரி, சபாவுக்கு வருவோம்... எல்லாரையும் ஒரு ரவுண்டு, பார்த்து, கேட்டு, மற்றவரைப் பற்றி கவலை இல்லாமல், அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்... நான் ஏன் இப்படி மாறு பட்டு இருக்கிறேன் ? என்று சிந்திக்க வைத்தது...
normal family போல்.. காலையில் ஸ்நானம் பண்ணி, கோடாலி முடிச்சு போட்டு, சுலோகம் சொல்லிக் கொண்டே சுவாமி விளக் கேற்றி, பில்டரில் தட்டி கொட்டி டிகாக்ஷன் இறக்கி, இரண்டு டம்ளர் கலந்து, பேசிக்கொண்டே சாப்பிட்டு... மறுபடியும் சமையல் அறையில் தஞ்சம் புகுந்து.. சமைத்து..உட்கார்ந்து சுலோகங்கள் சொல்லி.. . 9.30 மணிக்கு சுடச் சுட இவருக்கு இலையில் பரிமாறி, நானே பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, மிச்ச மீதிகளை, மேடை ஓரத்தில் அடுக்கி மூடி, அலுப்பு தீர கொஞ்சம் தலையை சாய்த்து, விகடனும், கல்கியும் படித்து... பின்னர் ராமாயணம் மகா பாரதம் இப்படி படித்து... ஒரு மணிக்கு காபி போட்டு... 3 மணிக்கு டிபன் பண்ணி... என் கற்பனை விரிந்தது... எதையோ மிஸ் பண்ணுகிற மாதிரி...
ஆனால் எல்லாம் அந்த அரை மணிதான்... வீட்டுக்கு வந்ததுமே, என் self ஆகி... ஓ... நான் இருப்பதுதான் எனக்கு natural. புலியை பாத்து பூனை சூடு போட்டுக் கொண்டால் அது செயற்கை என்று தெளிவு பெற்று, இதோ, FB இல் உக்காந்து, செய்வது தான் என் நியதி. அதை மாற்ற முடியாது. மாறினால், அது செயற்கை.. நிறைய அன்னியங்கள் இருக்கும்.. சொச்ச நாட்களை (வருடங்கள்? மாதங்கள்?) இப்படியோ தள்ளுவோம்... இல்லை இல்லை - வாழ்வோம் என்ற யதார்த்தக்கு வந்தேன்.
குறையொன்றும் இல்லை கண்ணா

Friday, March 22, 2019

VK & SURGERY


எனக்கு 2013 ல் ஒரு சின்ன ஆப்பரேஷன். இசபெல் ஆஸ்பத்திரியில். அந்த அனுபவங்கள் இங்கே .......

வியாழன், 26 செப்டம்பர் காலை, குளித்து, நல்ல ட்ரெஸ் (!!) பண்ணிக்கொண்டு, ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு, தம்பதி சமேதராய் 9 மணிக்கு ஆஸ்பத்திரியில் ஆஜர். ரூம் காலி இல்லை என்று 11.30 வரை காத்திருக்க வைக்க, நானும் அங்கு வருபவர் போகிறவர் எல்லாரையும் வேடிக்கை பார்த்து, "அவர்களுக்கெல்லாம் என்ன வியாதியை இருக்கும்; எத்தனை பேர் என்னை விட குண்டு ; எத்தனை சல்வார் கமீஸ், எத்தனை புடவை; எவ்வளவு ஒல்லி ஒல்லி பெண்கள் என்று வித விதமான கணக்கெடுப்பு செய்து கொண்டு, நாடு நடுவில் SUDOCU போட்டுக்கொண்டு காத்திருந்தேன். பொறுமை போனபோது, டாக்டருக்கு போன் செய்ய, 15 நிமிஷத்தில் ரூம் கிடைத்து, போனேன். பலப் பல ஷோடக உபசாரங்கள்....
ஒன்றும் சாப்பிடக் கூடாது. ஆனால் பசிக்கவே இல்லையே !! அதான் மனசின் கண்ட்ரோல் !! மோட்டு வளையை பார்த்து, மனசில் ஏக கற்பனைகளோடு காத்திருந்தேன்.
என்ன கற்பனை என்கிறீர்களா...
எனக்கோ முழு மயக்க மருந்து... அப்படியே டாக்டர் ஒரு கிட்னி சத்தம் போடாமல் எடுத்து விடுகிறார். மற்றபடி ஆபரேஷன் முடிந்து, வெளியே வருகிறேன். வயிற்றில் தையல் போட்டிருப்பதை 2 நாள் கழித்துத்தான் உணருகிறேன்; சந்தேஹம் வர, வயிற்ரை அமுக்கிப் பார்க்கிறேன்; கொஞ்சம் வெற்றிடம் தெரிகிறது. ஒருவருக்கும் தெரியாமல், இன்னொரு டாக்டரிடம் காட்டியதில் கிட்னி பறி போனது தெரிய வருகிறது. கேஸ் போடுகிறேன்...
டாக்டர் உண்மையை ஒத்துக் கொண்டு, "வசந்தாதான் கிட்னி டொனேட் பண்ண ஆசைப் பட்டாள்" என்று தன வாதத்தை வைக்கிறாள்.
நான் ஒரு முறை டாக்டரை பார்க்கும்போது , சற்றே உணர்ச்சி வசப்பட்டு, "டாக்டர், எனக்கோ வசாயிடுத்து; ஒரு கிட்னியை வெச்சுண்டு சொச்ச நாளை கழிச்சா போரும்..யாருக்காவது வேணும்னா நான் தரேன்" என்று சொன்னதென்னவோ உண்மை தான். அதற்காக என்கிட்டே சொல்லாம எடுக்கலாமோ? " இது என் வாதம். அதாவது யாருக்காவது தேவைன்னா, என்னைக் கேட்டு எடுத்துக்க வேண்டியது தானே; அதென்ன திருட்டுத்தனம் ... என்பது என் வாதம்.
வழக்கு முடிந்து, டாக்டருக்கு 25 லட்சம் fine . அதை நான் வாங்கிக் கொள்ளாமல், என் கிட்னியை யாருக்கு பொருத்துகிறார்களோ, அவர்கள் மெடிக்கல் செலவுக்கு என்று கொடுத்து விடுகிறேன்....
இதையே விவரமாக கற்பனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.
அப்போது ஒரு நர்ஸ் நிறைய பேப்பர் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினாள். அதில் பொடி எழுத்தில் என்ன பிரிண்ட் பண்ணி இருந்தது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் எல்லா பக்கத்திலையும் SK கையெழுத்து... (!) நானும் போட்டு விட்டேன், என்கையெழுத்து ... இல்லை இல்லை ... என் தலை எழுத்தை ... படித்துப் பார்க்காமலேயே... படிக்க ஆரம்பித்தால் இரண்டு நாளாகும். என் சந்தேஹம் இப்போது பலத்த சந்தேஹம் ஆச்சு...

இப்போது நர்சுகள் வரிசை கட்டி உள்ளே நுழைய, என் கற்பனைகளை ஓரம் கட்டி, காரியத்தில் கவனம் செலுத்த ஆரம்பிக்க....
என்ன கொடுமை இது சரவணா?
ஒரு nurse வந்து, "உங்களுக்கு உடம்புக்கு என்ன.." என்று விசாரிக்க, நானும் அதௌ கீர்தனாரம்பித்திலே என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்ல, ஒரு reaction உம் காமிக்காமல் வெளியேறினாள்.
மறுபடி மற்றொரு நர்ஸ்... அதே கேள்வி... சற்றே சுருக்கமான பதில்...
மற்றொரு டாக்டர்... "உங்க ஹிஸ்டரிய" கேக்க வந்தேன்" அதே கேள்விகள்...
"
எத்தனை குழந்தைகள்; நார்மல் டெலிவெரியா; வேற ஆபேரஷன் என்னவெல்லாம் பண்ணியிருக்கு; இப்போ என்ன ப்ராப்ளம் .... "
இதையே எத்தனை தரம் சொல்றது...?
இனிமே history கேக்க வந்தா, என் புக் "வசந்த கால நினைவலைகள்" குடுத்து என் history படிக்க சொல்ல வேண்டியதுதான்.
இதற்கு அடுத்த ordeal - preparation for surgery.... முதல் நாள் தான் B.P. போய் oil massage பண்ணி, ஹேர் லூசாக, பறக்க விட்டு, pedicure பண்ணி, நல்ல சிகப்பு பாலிஷ் (symbolic ) போட்டுண்டு வந்தா, ஒருத்தி, தலைமுடியை இறுக்கி கட்டி, cap போட, மற்றொரு நர்ஸ், ஸ்பிரிட் குடுத்து பாலிஷ் எல்லாம் துடை என்கிறாள் !! கையிலும், காலிலும் எடுக்கப் பட்ட பாடு, பெரும் பாடு.
இந்த நர்ஸ் எல்லாம் பார்த்தால், 10 ம் , 11 ம் கிளாஸ் குழந்தைகளை கூட்டி வந்து, நர்ஸ் யூனிபார்ம் போட்ட மாதிரி இருந்தது.
இப்படியாக, எனக்கு ஒரு கவுனையும் மாட்டி, (யாராவது பாக்க வந்தா, நான் அழகாக இருக்கத்தானே Beauty Parlour. ??) ரெடி பண்ணி காத்திருந்தேன்.
ஒரு வழியாக 4.45 க்கு stretcher வந்தது. அதில் படுக்க வைத்து, போர்த்தி, நான் நாலு பக்கமும் பெருமையாக பார்க்க, தள்ளிக்கொண்டு போனது என்னமோ ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், என் ரூமுக்கும்.. ஆபரஷன் தியேட்டருக்கும் நடுவில் இருந்த கரடு முரடு பாதையில் தள்ளரச்சே, குலுங்கின குலுக்கலில், வயிறு கலங்கி த்தான் போனது. (ப்ரெக்னன்ட் ஆக இருந்தால், குழந்தை சுகப் பிரசவம் ஆகி இருக்கும்.

என்னை சுற்றி 3 நர்ஸ் , 2 வார்ட் பாய் , ஒரு சலைன் பாட்டில் ... 7 கடல், 7 மலை மாதிரி, ஈரேழு கதவுகள், ரூம்கள் எல்லாம் தாண்டி, ஒரு இடத்தில் நங்கூரம் பாச்சி stretcher நிக்க வைத்து....
அந்த பக்கம் பார்த்தால், சில பல ரூம்கள்... எல்லாம் காலிதான்... கண்ணாடி கதவுகளுடன். ரொம்ப பிசியாக சில நடமாட்டங்கள். அங்கே தான் ஆபரேஷன் தியேட்டர் ... என்னை தள்ளி வந்தவர்கள் கூவுகிறார்கள்... "யாராவது patient receive பண்ணுங்களேன்" என்று. அதற்குள் மற்றொரு patient . நாங்கள் இருவரும் friend ஆகி, பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால் யாருக்கும் எங்களை கூட்டி போக டைம் இல்லை. ஒரு வழியாக நர்ஸ்கள் வர, என்னை ஓரம் கட்டி விட்டு (!!) அந்த லேடியை அழைத்துப் போக, கொஞ்ச நேரத்தில் எனக்கும் அதிர்ஷ்டம் வந்தது.
ஆபரேஷன் டேபிளில் படுக்க வைத்து மயக்க ஊசி போடப் போவதாக ஒரு சின்ன அறிவிப்பு.
எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை. ஒரு டிவி சீரியல் போட்டு விட்டால், அசந்து தூங்கி விடுவேன். ஆனால் டிவி மட்டும் அணைக்கக் கூடாது. எத்தனை நேரமானாலும் ஆபரேஷன் பண்ணலாம் என்பது SK யின் ஜோக்.
கடைசியில், முதுகில் ஊசி போட்டு, மரத்துப் போக வைத்து, 3/4 டாக்டர்கள், 5/6 நர்சுகள் ... எல்லாரும் சந்தோஷமாக தயாரானார்கள் ! எனக்கு தூக்க ஊசி. என்னத்துக்கு. டிவி ஒரு சினிமா போடக் கூடாது. நான் பாட்டுக்கு பாத்துண்டிருப்பேன்.
5.30 க்கு ஆரம்பித்த ஆபரேஷன், முடிந்தது என்று டாக்டர் சொல்லும்போது 7.30. (ஹும்ம்ம்.... டிவி யில் நாதஸ்வரம் ஆரம்பித்திருக்கும் !!)
அப்படியே என்னை post operative ICU வில் தள்ளி விட்டு, "நிம்மதியாக தூங்குங்கள்" என்று சொல்லி விட்டு எல்லோரும் காயப். ஆனால், தூங்க விட்டார்களா என்னை !!
5
நிமிஷத்துக் கொருதரம் நர்ஸ் வந்து, BP , temp , பல்ஸ், எல்லாம் பாக்கறதும், அதை விட கொடுமை, என்னை எழுப்பி, "தூக்கம் வரதா, இல்லை இன்னொரு ஊசி போடணுமா" ன்னு கேட்டதுதான்.
மொத்தத்தில தூங்கவே விடல்லே.
வெள்ளி காலை 4 மணிக்கு எழுப்பி, வாய் கொப்பளிக்க சொல்லி - காபியா குடுக்கப் போறா - உடம்பைத் துடைத்து; கவுன் மாத்தி... அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா... 7 மணிக்கு அடுத்த செட் duty க்கு வந்து, BP பாத்து, டெம்ப். பாத்து, .... பாத்து...பாத்து... "நல்லா தூங்குங்க" என்ற அட்வைசுடன் போய், அரை மணியில் அடுத்த ரவுண்டு. அதற்குள் டாக்டரே வந்தாச்சு...
ஒரு வழியாக 1 மணிக்கு என் ரூமுக்கு transfer .

இப்படியாக ICU விலிருந்து, stretcher இல் ஏற்றப்பட்டு, ஆடி, குலுங்கி, அதிர்ந்து, வழியில் "அம்மா, அப்பா" என்று முனகி, ரூமிற்கு வந்தேன்....
பிறகென்ன... தண்ணீரில் ஆரம்பித்து, 2 நாள் வெறும் நீர் ஆகாரம்... என் பிரிய காப்பி மட்டும் கிடையாது... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடு என்று 3 நாள் ரூமில்.
Style லாக டிவி பார்த்துக்கொண்டு, புக் படித்துக் கொண்டு , friends ஓடு பேசிக் கொண்டு....பொழுது போக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றும் பிடிக்கவில்லை...
நர்சும், அவள் எடுக்கும் இரத்த அழுத்தமும், ஜுர மானியும் (ஆகா... என்ன தமிழ், என்ன தமிழ்) ஊசிகளும் பழகிப் போக... அதுவே 3 நாட்கள் வாழ்க்கையானது. ஒரே இடத்தில், இடது கை புறங் கையில் , ஊசி குத்தி குத்தி, ஒரு பெரிய இட்லி சைசுக்கு அழகாக வீங்கிப் போனது... அந்த வீக்கத்தின் உப்புதலும், வழ வழப்பும் ரொம்ப அழகு. தடவி தடவி ஆனந்தப் பட்டேன். ஊசியை எடுத்து, வலது கையில் மாற்றிக் குத்தினாள் நர்ஸ். அந்த வீக்கம் வடிந்ததும் என் கை அழகே போய் விட்டது.
சில friends நான் மருத்துவ இல்லத்தில் இருக்கிறேன் என்று கேள்விப் பட்டு, என்னை பார்க்க சாத்துக் குடி, ஆப்பிள் சகிதம் வர, என்ன கொடுமை இது... அவர்களிடம் என்ன வியாதி என்று சொல்வது ?? ஆனந்த் சினிமாவில், ராஜேஷ் கன்னா "ah.. kyaa naam hai, lympho sychomaa of the intestine" என்று சொல்லி மகிழ்வார். அந்த அளவு வேண்டாம். சொல்லிக் கொள்ளும்படியாக நல்ல பெயர் உள்ள விதமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்புறம் ஒரு நல்ல இங்கிலீஷ் பேர் கண்டு பிடித்து ஸ்டைலாக சொல்ல ஆரம்பித்தேன்.
தனிமையில் இருக்கும் போது கற்பனை சிறகை தட்டி விட்டு , ஒரே கதைகள் தான் !!!!
கூட்டிக் கழித்துப் பார்த்தால்... இதுவும் ஒரு நல்ல அனுபவம் தான் !!