Friday, June 5, 2020

Valmiki and ramayanam........


வால்மிகியின் வரலாறு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.அவர் நாரதரை பார்த்து "எல்லாவிதத்திலும் சிறப்புடைய "அனேக நற்குணங்களை பட்டியலிட்டு) யாராவது மனிதன் இருக்கிறாரா " என்று கேட்க, நாரதர் வால்மீகியிடம் ராம சரிதத்தை சொல்லி, அதை காவியமாகப் படைக்கசொல்லுகிறார்...அவர் சொன்னது பட்டாபிஷேகம் வரை...
ஒரு நதிக்கரையில் அமர்ந்து, தியானம் செய்து, ராமர் சரித்திரத்தின் நிகழ்வுகளை, படமாக மனதில் கண்டு எழுத ஆரம்பிக்க, ஒரு வேடன் ஜோடியாக இருந்த இரு பட்சிகளில் பெண் பறவையை (கிரௌஞ்ச பட்சிகள்) அம்பிட்டு கொல்ல, வால்மீகி துயரம் அடைகிறார், அந்த ஆண் பறவையை பார்த்து....வேடனை சபிக்கிறார்..."இணைந்து இன்புற்றிருந்த பறவைகளில் ஒன்றை கொன்றதால் நீ நிலையான வாழ்க்கையை அடைய முடியாது" என்று சாபமிடுகிறார். இந்த சாபமே, கவிதை நயத்துடன் இருக்க அதுவே ஆரம்ப சுலோகமாயிற்று. அந்த ஸ்லோகத்தின் அர்த்தம், " லக்ஷ்மியின் உறைவிடமாகிய ஸ்ரீனிவாசனே, ராக்ஷச இன்பத்தால் புத்தி பிறழ்ந்த ஒருவனை கொன்று, நெடுங்காலம் நல்லாட்சி புரிந்தவனே" என்ற அர்த்தத்தையும் கொல்ல (வேறு விதமான பதம் பிரித்ததில் ) அதையே பொருத்தமான  முதல் பாடலாக கொண்டார். 
(சமஸ்க்ரிதத்தில், உச்சரிப்பு, பதம் பிரித்தல் மாறினாலே ,அதன் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். யசுர் வேதத்தை ஒரு குருவிடம் படிக்கையில், அவர் நிறைய உதாரணங்கள் காண்பித்தார்.. அதிலும் 'சமக்கத்தில்' - எனக்கு பகைவன்  இல்லாத நிலையை கொடு" என்பதை சரியாகச் சொல்லாவிட்டால், "எனக்கு பகைவன் இருக்கட்டும்" என்று ஆகிவிடும்.. சமகம் முழுவதும்... "கொடு...கொடு..கொடு..." தான் !!! )
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வால்மிகியின் மனம் சஞ்சலப் பட்டது.. ஏன் இந்த நிகழ்வு.. இதற்கு ஏதாவது நோக்கம் இருக்கா ? என்று. பிரம்மர் தோன்றி, ஆசிகள் கொடுத்து, நடந்தது, நடக்கப் போவது எல்லாவற்றையும் அவருக்குத் தெரியும்படி காண்பித்து சென்றார். அப்போதே உத்தர காண்டமும் பிறந்து விட்டது. பிறகு அதே போல் நடக்கவும் செய்தது. 
லவ - குச ருக்கு இந்த சரிதையை சொல்லும்போது, வால்மீகி உத்தர காண்டம் சொல்வதில்லை . 
(உப தகவல் -- லவம் என்றால் தர்ப்பையின் மேல் பாகம்... குசன் என்றால் தர்ப்பையின் கீழ் பாகம்)

ஆதி காவியம் வால்மீகி உடையது தான் என்றாலும், அதை படித்து எழுதிய கம்பரும், துளசி தாசரும் நிறைய வேறுபடுகிறார்கள்.. ஆரம்பமே கம்பர் நேராக, அயோத்தியின் வர்ணனையில் ஆரம்பிக்கிறார் - மிக விஸ்தாரமாக... மூலக் கதையை விட தன கற்பனையை சேர்த்து... துளசிதாசரும் நிறைய வேறு படுகிறார். ராமாயணம் நிஜமாக நடந்ததா என்று கேட்டால், யாருக்கும் சொல்லத் தெரியாது... ஆழ்வார்கள் அனுபவித்ததை வார்த்தைகளில் வடித்தார்கள்... அவைகள் காவியமாயின...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக  அனுபவித்தார்கள்...

நாராயணீயத்தில்...நாராயண பட்டத்ரி.. குருவாயூரில் உடல் நலமில்லாமல் நாராயணீயம் எழுதும்போது, எல்லா அவதாரங்களையும் அவரால் விவரிக்க முடிந்தது... நரசிம்மரை கற்பனை செய்ய முடியவில்லை என்றும், பரந்தாமனை வேண்டிக்கொள்ள, அவர் நரசிம்மராக காட்சி கொடுத்தாராம். (மொத்தம் 23 அவதாரங்கள்... பத்து தான் முக்கியமானவையாக நாம் படிக்கிறோம் - அதுவும் கல்கி இன்னும் முடியவில்லை...
அதே போல், ஆண்டாள் ஸ்ரீவில்லி புத்தூரை ஆயர்பாடியாகவே காண்கிறாள்.. அதனால் அவளால் வர்ணனைகள் செய்ய முடிந்தது... 
இவைகளெல்லாம் அதீத பக்தி... 
(உப தகவல் - நாராயணன் லக்ஷ்மியை பூமியில் அவதரித்து - கீதையையும், பக்தியையும் வளர்க்கச்சொல்லி கேட்க.. லக்ஷ்மி " ராமாவதாரத்தில் சீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிநியாகவும் பிறந்து பட்ட கஷ்டம் போதும். நான் பூ லோகம் போக மாட்டேன்" என்று சொல்ல, பாமா அதற்காகவே காத்துக்கொண்டு இருந்தாளாம் !! "நான் போகிறேன்" என்று ஆண்டாளாக அவதரித்தாள்...
ஆண்டாளின் பக்திக்கு ஒரு சிறப்பு உண்டு. சீதை , ருக்மிணி இவர்கள் , தங்கள் அவதாரத்தில், கணவனோடு சேர்ந்தே இருக்கிறார்கள். அவர் கள் பத்தி பக்தியை விட , ஆண்டாள் சிறப்பு மிக்கவள் என்று ஒரு ஆழ்வார் அனுபவிக்கிறார். சீதையும், ருக்மிணியும் உடன் இருக்கிறார்கள். ஆண்டாள், கண்ணால் காணாத கண்ணனை, பார்த்தறியாத ஆயர்பாடியை , கற்பனையில் கண்டு, தன்னை ஆத்மார்த்தமாக அர்ப்பணிக்கிறாள். இது பக்தியின் எல்லை. 

நம் கதைக்கு வருவோம்....
வால்மீகி, லவ குச ர்கள் ராமனின் சபையில் ராமாயணம் கதையை பாடுவதிலிருந்து ஆரம்பித்து... பிறகு ராமர் பிறப்பிலிருந்து தொடர்கிறார். ஆனால் கம்பரும், துளசி தாசரும், நேரடியாக கதையை ஆரம்பிக்கிறார்கள், அயோத்தியில். 

அயோத்தி பார்கடலைவிட  விட சிறப்பு வாய்ந்ததாம். யுத்தம் இல்லாத பூமி.. (அ சேர்த்தாலே நெகடிவ் ) ... ராமர் வாழ்ந்து, பதினோராயிரம் ஆண்டுகள் ஆண்ட இடம். அந்த இடத்தில் நின்றாலே புண்ணியமாம். பதினோராயிரம் ஆண்டுகள் எப்படி ? பழைய கணக்குகளில் உள்ள அது, இன்றைய கணக்குக்கு 110  தான் இருக்கும். 
(இந்த  கணக்கை, பாரத வர்ஷே, பாரத கண்டே, ஜம்பூத்வீபே  ... என்றுவிளக்கமாகபிறகு...!!!) 
அயோத்தி முடிந்தால் போய் பாருங்கள், மசூதி இடிக்கப்பட்ட இடம், வெறும் தளமாக... ஒரு இடத்தில் ராமர் சிலையும், பலத்த பாதுகாப்பும்..'' யோதியில்  யுத்தம்..!! என்னசாதித்தார்கள்??

(இரு இதுக்குத் தகவல்... ராமாயணம் 24000 சுலோகங்கள் கொண்டது. ஒவ்வொரு முதல் ஆயிரம் சுலோகங்களின் முதல் எழுத்து, காயத்ரி மந்திரத்தின் முதல் எழுத்து... இப்படியே ஒவ்வொரு ஆயிரமும், வரிசையாக காயத்ரியின் 24 எழுத்துக்களில் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது !!amazing fact .)



(கொசுறு தகவல் - வால்மீகி என்றால் "புற்றிலிருந்து வந்தவர்" என்று பொருள். அவர் திருட்டு தொழில் புரிந்து வந்தபோது, சில ரிஷிகளால் உபதேசிக்கப் பட, தவறை உணர்ந்து, ஒரே இடத்தில் அமர்ந்து, த்யானம் செய்ய, அவரை சுற்றி புற்று எழும்பியது. அதிலிருந்து வெளி வரும்போது, ஞானியாக, வால்மீகியாக வந்தார்)

துளசிதாசர் ராமாயணத்தில், சிவன் ஒரு ராம பக்தர் என்றும், பார்வதி அதை பற்றி காரணம் கேட்க, அவர் விளக்க, பார்வதி சீதை உருவமெடுத்து, ராமர் முன் நின்றதாகவும், ராமர், அது  சீதைஇல்லைஎன்றுதெரிந்துகொண்டு, சலனமற்று இருக்க, பார்வதி சென்று சிவனிடம் சொல்ல, அவர் கோபம் கொண்டு, சபித்து.... என்று தக்ஷன் கதைக்கு போய் விடுகிறார். 
நாம் கேட்ட தக்ஷன் கதை இப்படி இருக்காது... 

(அதனால் தான் நான் சொல்கிறேன், நிறைய அர்த்தங்கள் சொல்லப் படுவதால், நமக்கு குழப்பம் வர சான்ஸ் இருக்கு. மனதை குழப்பிக்காமல்... ஒன்று ராமாயணத்தை அப்படியே எடுத்துக்கொண்டு, ராம, ராம என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுவும் ஒரு கதை என்று என்று எடுத்துக்கொள்ள வேண்டும்)

ஒரு முறை ப்ருகு முனிவரின் மனைவி, அரக்கர்களுக்கு உணவிட்டு அடைக்கலம் கொடுக்க, விஷ்ணு கோபப்பட்டு, அவளின் சிரத்தை அறுத்துத் தள்ள, முனிவர் கோபமுற்று, விஷ்ணுவை "நீயும் மனிதாகப் பிறந்து , உன் மனைவியை பிரிந்து, துயரப்படுவாய் " என்று சபிக்கிறார். பிறகு தன தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, விஷ்ணு, அந்த சாபம் சாபமாகவே இருக்கட்டும். நான் ஒரு காரணத்திற்காக மனித அவதாரம் எடுக்க வேண்டும். அதில் லக்ஷ்மி சீதையாக அவதரித்து, என்னை பிரிந்து வாழ்வால்" என்று இது முதலிலேயே எடுக்கப் பட்ட முடிவு. நாராயணன் செயலுக்கு காரணம் சொல்ல நம்மால் இயலாது.

சீதையை, இலங்கையிலிருந்து அழைத்து வர , விபீஷணனை அனுப்புகிறார் ராமர். அப்போது, அவளை, சர்வ அலங்காரங்களுடன் அழைத்து வரச் சொல்கிறார். ஏனென்றால், சீதையை, அசோகா வனத்தில் இருந்த கோலத்தில் ராமர் காண விரும்ப வில்லை. ராமர் தான் ஒரு அவதாரம் என்று உணராமலே இருந்தாரா அல்லது, தெரிந்தும் காட்டிக் கொள்ளாமல், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று உதாரணம் காட்டினாரா ? என்ற சந்தேஹம் எல்லோருக்கும் உண்டு. 
சீதை வந்ததும், ராமர் கடும் சொற்களால் அவளை திட்டுகிறார். அது சீதையை provoke பண்ண. சீதை தான், லக்ஷ்மணனிடம் தீ மூட்டச் சொல்கிறாள். லக்ஷ்மணன், ராமரை பார்க்க, அவர் பிறர் அறியாமல், கண்ணால் அனுமதி கொடுக்கிறார். அப்படித்தான் சீதை தீயில் குளிக்கிறாள். அப்போது சிவன் பார்வதி உள்ளிட்ட தேவாதி தேவர்களும் வந்து, ராமரிடம் அவரின் அவதார மகிமையை சொல்லி, "நீ வந்த வேலை முடிந்து விட்டது; இனி வைகுண்டம் போகலாம்" என்று சொல்ல, ராமர் அதை உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு, மறுபடியும் நாட்டிற்கு சென்று, நல்ல அரசனாக, நல்ல மனிதனாக வாழ்ந்து , மனித குலத்துக்கு, அரச குலத்துக்கு இலக்கணமாக இருக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது.

ராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு, சிறிது காலம் கழித்து...

(ஒரு கொசுறு தகவல்... பரதன் பாதுகையுடன் திரும்பும் போது, ராமர், ஒரு administrator எப்படி எல்லாம் இருக்க வேண்டும்; அவன் கடமைகள் என்ன என்று நிறைய சுலோகங்களில் உபதேசம் பண்ணினார். நான் M .A .பொலிடிகல் சயன்ஸ் படித்த போது, ராமாயணமும், மகாபாரதமும் - இரண்டிலும் உள்ள பொலிடிகல் thought சும்  பாடமாகஇருந்தது... 
கதை... கதை... (கடிவாளத்தை அப்பப்ப இழுக்க வேண்டி இருக்கு. 
ராமர் , சீதையை அழைத்து, அவள் வந்த வேலை முடிந்து விட்டது என்றும், அவள் வைகுண்டம் ஏகி , தனக்காக காத்திருக்கும் படியும், தான் இன்னும் சிறிது காலம் ஆட்சி செய்து விட்டு வருவதாகவும் சொல்கிறார். அப்போது தான் சீதை, தான் கருவுற்றிருப்பதை சொல்ல... ராமர் சீதையை காட்டுக்கு அனுப்ப முடிவு எடுக்கிறார். அவருக்கும் சாபம் தீர வேண்டும். ஒரு மனிதன், ஒவ்வொரு சமயத்திலும் எப்படி நடக்க வேண்டும் என்று உதாரணமாக இருக்க விரும்புகிறார். அதனாலேயே, சாதாரண மனிதன் சந்திக்கும் சோதனைகளையும், அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்றும், ஒரு பெர்பெக்ட் மனிதனாக வாழ்கிறார். 

சீதையை அனுப்ப காரணம் தேட வேண்டும். ஒரு நாள் தன மந்திரிகளை அழைத்து, நகரில் சென்று, தன் ராஜ்ய பரிபாலனத்தை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து வரச் சொல்கிறார். (இந்த வண்ணான் கதை துளசி தாசரின் கற்பனை.. அதுவே நிலைத்து விட்டது) .... மக்கள் நடுவில் இரு வேறு கருத்துக்கள் - சீதையை ராமர் ஏற்றுக் கொண்டதை பற்றி - டிபேட் நடக்கிறது... அங்கங்கு. அதை மந்திரிகள் வந்து சொல்ல, ராமருக்கு ஒரு காரணம் கிடைத்து விடுகிறது. சீதை பத்திரமாக காட்டுக்கு அனுப்பப் படுகிறாள். ராமருக்கும் அந்த பிரிவு வாட்டுகிறது. ஆனால் தர்மத்திற்காக பொறுத்துக் கொள்கிறார். அதாவது, ஒரு அரசர் , தன் நலன், தன் குடும்ப நலன் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், மக்கள் நலம் பற்றியும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை பற்றியும் மட்டுமே சிந்திக்க வேண்டும்... இதை வலியுறுத்த ராமர் அனேக அசௌகரியங்களை பொறுத்துக் கொள்கிறார். 

லவ குசர்கள் பிறந்து வளர்ந்தவுடன், சீதையை வரவழைத்து, (அவளை காணும் ஆசையில்) தன்னுடன் சேர்த்துக்கொள்ள நினைக்கையில் (அவள் தண்டனை காலம் முடிந்து விட்டது), ராமரின் மனதை நன்கு அறிந்த சீதை, தான் வைகுண்டம் ஏக முடிவு செய்து, பூமி மாதாவை வேண்டி, அவளிடமே தஞ்சம் அடைந்து வைகுண்டம் செல்கிறாள். 
ராமர் வெளிப்படையாக வருத்தம் காண்பித்தாலும், சீதைக்குத் தெரியும் தான் என்ன செய்ய அவர் எதிர் பார்க்கிறார் என்று.

(பரதன், இலக்குவன், சத்ருக்கனன் மூன்று பேருக்கும் ஆளுக்கு இரண்டு மகன்கள்... அதனால் ராமர் தயக்கம் காட்ட, எல்லாரும் லவ குசர்களுக்கு இளைய பட்டம் சூட்டுவதையே விரும்ப, அப்படியே செய்யப் படுகிறது. இப்போதும், ராமர் தன்னலம் அற்றவராகத்தான் இருக்கிறார். அடுத்த அரசன் தன் மகனாகத்தான் இருக்க வேண்டும், என்று நினைக்காமல் ,திறமை உள்ளவர்கள் அரசாள வேண்டும் என்பதை காட்ட இந்த நாடகம்) .

 Plato - Greek Philosopher - இதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்... அதாவது inheritance of Kingdom should not be birth right என்று. அது நம் வர்ண பிரிவுகளுடன் மிகவும் ஒத்து போகிறது. ஆனால், அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஜாதியை புகுத்தி விட்டார்கள், நம் நாட்டில். இது பாலிடிக்ஸ் காக செய்யப்பட்ட , சொத்து சுகத்திற்காக செய்யப்பட்ட ஒரு துஷ் பிரயோகம் ...
பிறகு லவ குசர்களை இளவரசர்கள் ஆக்கி,  11000 வருஷங்கள் ஆண்டு, மறுபடியும் தேவர்கள் வந்து நினைவூட்ட, லவ குசர்களை அரசராக்கி, வைகுண்டம் செல்கிறார். 

(ராமர் ,நாராயணன் இல்  ஆரம்பித்து, 64 வது ஜெனரேஷன்... பிறகு, லவ குச ர் களுக்குப்  பிறகு,  வந்த அரசர்கள் பட்டியல் இருக்கிறது. ஒரு முறை, நான் ராம தீட்சிதருக்கு (அனந்த ராம தீட்சிதரின் தம்பி மகன்) எழுதி கேட்க, அவர் தயை கூர்ந்து எனக்கு எழுதி அனுப்பினார். பாகவதத்தை ஆவர் சொல்லி கேட்க வேண்டும் அவ்வளவு நன்றாக இருக்கும். பாகவதம் பரீட்சித்துக்கு சொல்லப் பட்டது ஏழு நாட்கள்.... அதனால் தான் இன்றும் "பாகவத சப்தாகம் " என்று ஏழு நாட்கள் சொகிறார்கள். )

மனதில் எவ்வளவோ ஓடினாலும், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 
In a nut shell - everything was decided by Ramar & Seethai just obeyed. She need not be told in words. She could read His mind. So Ramayanam is told as a Story of an ideal King / Man. Puraanamaaga sollappadavillai. piragu, because of the Richness in the text, MahaaKavyam Aayitru. 

விஷ்ணுவின் அவதாரங்களில் எல்லாம், தன்னை பரந்தாமனாக காட்டிக் கொள்கிறார். ராம அவதாரத்தில் மட்டும் தான் மனிதனாக , தன்னை காட்டிக் கொள்ளாமல் வாழ்கிறார்.

விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மி... லக்ஷ்மி உடனிருந்தால், இறக்க சிந்தனை ஏற்படுமாம். லக்ஷ்மி எல்லோரையும் மன்னித்து விடுவாளாம். கூடவே நன்மையும் செய்வாளாம். அதனால் தான் நிறைய அவதாரங்களை தனியாக எடுத்திருக்கிறார். 
நரசிம்மர் - தனியாக வந்து, அரக்கனை அழித்து, ஆனால் அவர் உக்கிரம் குறைக்க லக்ஷ்மி வரவேண்டியிருந்தது. 
வாமன அவதாரத்தில், பூணல் போடப்பட்டு, பிரம்மச் சாரியாக வருகிறார். ஆனால் மார்பில் இருக்கும் லக்ஷ்மியை என்ன செய்வது? பிரம்மச்சாரிகள் மேல் துண்டினால் மூட வேண்டும். அதன் படி, துண்டை போர்த்தி, லக்ஷ்மியை மறைக்கிறார்.

ராமாவதாரத்தில் மனிதனாக உருவெடுத்து, ராவணனை சம்ஹாரம் செய்வது மட்டும் இல்லாமல், மனிதனாக வாழ கற்றுக் கொடுக்கிறார். அதனால் மனைவியை சேர்த்துக் கொள்கிறாள். 

பரசுராமன், ராமர் மிதிலாவிளிருந்து திரும்புகையில், அவரை பார்த்து விட்டு, வைகுண்டம் செல்கிறார்.

(இதை எல்லாம் கர்ண பரம்பரை கதைகளாகத்தான் கேட்டிருக்கிறோம். இடைச் செருகல்கள் நிறைய; பக்தர்களின் பார்வையில் வித்தியாசங்கள்... இவைகள் தான் நமக்குள் சந்தேஹங்களை எழுப்புகிறது. புராணங்களில் அநேகம் கட்டுக் கதைகளாக இருக்கலாம். அவைகள் சொல்லப் பட்டது, கடவுள் என்றால் எல்லாருக்கும் பயம் வரும்; ஒழுங்காக இருப்பார்கள் என்ற எண்ணத்தால். 

அதுக்கப்புறம் , நரி மாதிரி ஏமாற்றும் கதைகளும், தந்திர மந்திர கதைகளும், காக்காய் வடை திருடிய கதைகளும், பூச்சாண்டி, சாமி கண்ணை குத்துவார் என்ற கதைகளும் சொல்லப்பட்டு, கலி காலத்தில், இவைகளே குழந்தைகள் மனதில் நிலைத்து விட்டது. சந்தா மாமா புக்ஸ், நிறைய நல வழிகளை போதித்திருக்கிறது. இந்த மாதிரி கதைகள் - கற்பனயாகவாவது எழுதப் பட்டு, பாடமாக்கப் பட்டால் , குழந்தைகள் கண்டிப்பாக பயனடைவார்கள்.

ஸ்ரீராம, ஜெயராம, ஜெய ஜெய ராமா. 
ஸ்ரீராமரின் அனுக் கிரகம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.


No comments:

Post a Comment