Friday, June 5, 2020

நினைவுகள் - 1




நான் படித்தது கிறிஸ்டியன் ஸ்கூல். (PROTESTANT )... அநேகமாக எல்லாருமே christian lady teachers தான்.. 
girls ஸ்கூல் ஆச்சே !! 
விதி விலக்கு.. எங்கப்பா Maths , சயின்ஸ் க்கு ஒரு மாஸ்டர்,  Sanskrit க்கு ஒரு மாஸ்டர்.
எனக்கு தெரிஞ்சு, ஒரே ஒரு டீச்சர் ஐ தவிற எல்லாரும் கல்யாணம் பண்ணிக்காதவர்கள் தான்
(தப்பா புரிஞ்சுக்காதீங்க... விதி விலக்கு மூன்று பேரும் கல்யாணம் ஆனவங்க .. இல்லேன்னா நான் இப்போ இங்கே எழுதிண்டு இருக்க மாட்டே !! )

மிஸ் .பிலிப்ஸ் ன்னு ஒரு தையல் / டிராயிங் டீச்சர்.. எனக்கு ரெண்டுமே பிடிக்காது...
டிராயிங் இல் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் வரைய வேண்டும்..
இந்த காய்கள் எல்லாம் symmetrical ஆவா இருக்கு ? அனால் நோட்டில் அப்படித்தான் இருக்க வேண்டும்..! அழித்து அழித்து வரைந்து... அழுகிப்போன காய் மாதிரி இருக்கும் நெறைய குட்டு வாங்கி இருக்கேன் !

தையல் கிளாசில்... டீச்சரின் நடு விரலில், ஒரு கவசம் இருக்கும்.. ஊசி குத்தாம இருக்க..
 (ஒரு வேளை கர்ணன் மாதிரி அதோடே பிறந்திருப்பாளோ)
அந்த விரலாலேயே குட்டுவா...
நான் ஊசிய கீழே போட்டுட்டு, அதை தேடியே நேரத்தை ஓட்டிடுவேன் !!
எனக்கு பிடித்த மாதிரி, யங்கா, அழகா ஒரு சகுந்தலா டீச்சர் வந்தா... இங்கிலீஷ் டீச் பண்ணினா.. குரலும் அவ்வளவு இனிமை..
அவ்வளவுதான்... நான் ஒரே craze ! எனக்கு போட்டியாக இன்னும் சில பேர். நான் அவாளை போட்டியில் ஜெயிக்க, அவள் வீட்டை தெரிந்துகொண்டு, ஒரு லீவு நாளில் போய் கதவை தட்ட, டீச்சரின் அந்த mixed facial expression  ஐ இன்னி வரைக்கும் மறக்க முடியாது !! நாசூக்காக கட் பண்ணிட்டா..

காலேஜ் ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேர் வேறு... காலேஜ் போனதும்.. இந்த வால் தனம் எல்லாம் வந்துடும் போல !!
தமிழ் நாடகம் எடுத்த lecturer சந்திர குமாரி!   "சங்கீத குமாரி" ..என்று பெயர் வைத்தோம் .. proseநடையில் இருக்கும் வசனத்தை, பாட்டு மாதிரி படிப்பா.
poetryஎடுத்த ராஜ மாணிக்கத்தை ரொம்ப பிடிக்கும்.. ஏன்னா.. குறுந்தொகை சொல்லிக்கொடுத்தா..!! (வயசுக்கோளாறு !)
Calculasஎடுத்த Catherine ஐ ரொம்ப பிடித்ததால்... அதில் எப்பவும் first மார்க்.. அவ இடது கை எழுத்து...
ஒரு நாள் அவ கிளாஸ் க்கு வர கொஞ்சம் லேட் ஆக, ஆர்வக்கோளாறினால்.. போர்டில் இடது கையால் எழுதிண்டிருந்தேன். வந்து ஒரு முறை முறைச்சா பாருங்க.. அன்னி பூர அழுது, மன்னிப்பு கேட்டு... அந்த lecturer இடம் அசடு வழிஞ்சிருக்கேன் !!
Physics சாந்தாவ எல்லாருக்கும் பிடிக்கும்..Heat / Sound / optics ... (பிடித்ததற்கு காரணம் பாடம் நன்னா சொல்லித்தந்தது மட்டும் இல்லை.. ரொம்ப வெளுப்பா, அழகா இருப்பா..
அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதா கேள்விப்பட்டதும் எவ்வளவு கவலை பட்டிருப்போம் ? மாப்பிள்ளையும் அழகா இருக்கணுமேன்னு !!
Dynamics , statics , Hydrostatics சொல்லிக்குடுத்த ரங்கநாயகி... சூப்பர் டீச்சிங் ! இன்னி வரைக்கும் நான் அதில் strong !
Electricity Class was for eating curd rice with nellikkaaioorugaai..ஏன்னா .. ஒரு  derivationboard   போட ஆரம்பிச்சாமுடியற வரைக்கும் திரும்ப மாட்டாமறந்து போயிடும்னு பயம் !! நாங்க 13 பேர் தான் !! இரண்டு row  வில உக்காந்துஜாலியா சாப்பிடுவோம்..
அதான்இப்ப வரைக்கும் எனக்கு electricity / Magnetism தகராறு... !!

Atomic Physics சௌந்தரம், Properties of Matter பிரபா ... (இவா ரெண்டு பேரும் ஏன் இன்னி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கல ன்னு மண்ட காச்சல்தான் ! .. ரெண்டு பேரும்.. இணை பிரியா தோழிகள்..)
மறக்க முடியுமா இவாளை எல்லாம் !!

Practical demonstrator சரஸ்வதி.. ஓஓஒ... கொடுங்கோல் ஆட்சி... !!




No comments:

Post a Comment