நகர வாழ்க்கையில், அடுக்கு மாடி குடி இருப்பில், மேல் தளங்களில் கேட்காத சத்தங்கள்
"நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...குடு குடு குடு " - குடுகுடுப் பைக் காரன்...
"ஏ... அம்மாளோ, அய்யாளோ, நரிப்பல்லு புலி நகம் வாங்கலையோ ஆயாளோ" குறவன் குறத்தி...
"பூம்...பூம்...பூம்.... " பூம்ப்பூம் மாட்டுக் காரன்....
"ராம ஜோசியம்...ராம ஜோசியம்...ராம ஜோசியம்..." ... சின்ன தம்பூரை மீட்டிப் போகும், காவி உடையணிந்த ஆள்....
"சோசியம் பாக்கலையோ சோசியம்" .... கையில் சிறிய கம்புடன் குறி சொல்லுபவள்...
"கோவிதா கோவிந்தா... அடுக்குப் பானையில அரிசி இருக்கு அள்ளிப் போடுடா கோவிந்தா..." புரட்டாசி சனிக் கிழமை கேக்கும் கோவிந்தன் நாமம்.
"டிங் டிங் டிங்...... " மாலை 5 மணிக்கு வரும் வேர்க்கடலை
வண்டிக்காரன் , இரும்பு சட்டியில் தட்டும் ஓசை.
"கிணிங் கிணிங் கிணிங்...." இரவு எட்டு மணிக்கு பானையிலிருந்து இலையில் குல்பி வைத்துக் கொடுப்பவன்
"டொக்...டொக்...டொக்... " சோன் பப்டி விற்பவன்...
"சோடா கலர் உஷ்.........." பாட்டில் சோடா, கலர் விற்பவன்.
..
"கலாய் பூசலியோ... கலாய்..:" கலாய் பூசுபவன்...
"கிர்ர்ரிங் கிர்ரிங் .... கத்தி தீட்டறது... அரிவாள் மணை தீட்டறது...." கத்தி தீட்டுபவன்..
பார்க்க முடியாதது...
இவர்களுக்காக வாசலில் காத்திருக்கும் குழந்தைகள்...
அப்பா குடுத்த காசை கையில் வைத்துக் கொண்டு....
அம்மா சொல்படி இவர்களில் யாரையாவது கூப்பிட காத்திருக்கும் சிறுசுகள்

No comments:
Post a Comment