Wednesday, June 12, 2019

THE CLASS SYSTEM......

 THE CLASS SYSTEM......

1. The Greek Philosopher, Plato, advocated the following system of division of groups among the people based on Wisdom, Valor, those who don't have either

(given very briefly here - the crux of the system advocated)

Common Education for all the children for few years - in the fields of Logic, Philosophy, marshal arts, skilled works etc.

At the end of this there are to be examined. The intelligent ones who have analytical thinking are to be separated ; given special education on various fields involved in ruling.

The remaining are to be trained, based on their capacity - one group to be warriors ; the others are to be skilled labors ; to do menial jobs.

Every group    receives  their training.... The best ones are chosen

Brainy ones are to be the rulers / advisers.

Those who excel in marshal arts will become warriors for protecting King ; People from enemies (army)

The third group to serve these.

This is similar to our "Saathwik", "Rajaas", Thamaas"

---------------------------------

During our Vedik period - the division was into 4 groups.

Education was common for men & women.

அவர்கள் தகுதிக்கேற்ப,

கல்வி, கேள்விகளில் , வேதம் சொல்லுவதில் சிறந்தவர்கள் அதே வழிகளில் கற்பிக்கப் பட்டார்கள்.

அவர்கள் குருவானார்கள். சிஷ்யர்களுக்கு கற்பித்தார்கள். கற்க கஷ்டப்படும் மாணவர்களை விலக்கினார்கள் 
மற்றவர்க்கு சிறந்த கல்வியை போதித்தார்கள். இந்த கல்வி, தகுதியானவர்களுக்கு வழி வழியாக போதிக்கப் பட்டது.

அவர்கள் வாழ்க்கை பல நியதிக்களுக்கு உட்படுத்தப்பட்டது.

பிரம்மத்தை உணர வைப்பதால், பிரம்மத்தை  நோக்கி கை பிடித்து செல்வதால் அவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்

அவர்களின் சாப்பாடு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்கள் மூளையின் சிந்தனை திறன் இவைகளை வளர்ப்பதாக இருந்தது.

அவர்கள் தனியாகவும், மண  வாழ்க்கையில் ஈடு பட்டு, ஆனால் கட்டுப் பாட்டுடன் வாழ்ந்தார்கள்.

சில சாப்பாட்டு பொருட்களை ஒதுக்கினார்கள் - அது to control their senses. சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்தார்கள். கோபத்தை தவிர்த்தார்கள் சாத்வீகமாக இருந்தார்கள். தவம் செய்து, மேலும் மேலும் மனக் கட்டுப்பாட்டை வளர்த்தார்கள்.

அதனாலேயே , பிறருக்கு உபதேசிக்கும் திறமையை பெற்றார்கள். அதுவே தர்மமும் ஆயிற்று.

பிரம்மத்தை உணர வைப்பதால் "பிராமணன் " என்றும், போதிப்பதால் "குரு" ... "அஞானத்தை களைபவன் , இருட்டில் விளக்காய் இருப்பவன் " என்று அழைக் கப்பட்டார்கள்

குதிரை ஏற்றம், ஆயுதங்கள் தாங்கி போராடக் கூடியவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் ... அரசனையும் , மக்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் படை ஆனார்கள் . இவர்கள் "க்ஷத்ரியர்" என்று அழைக்கப்பட்டு , நாட்டின் காவலில் ஈடு படுத்தப் பட்டார்கள். அதிலும், சிறந்து விளங்கியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப தளபதி... etc .. நியமிக்கப் பட்டார்கள்.

அரசனுக்கும் மற்ற பிற மக்களுக்கும் தேவைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து , அவைகளை விற்று தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள் "வைசியர்" என்று அழைக்கப்பட்டார்.

இவை எதுவுமே கற்றுக் கொள்ள முடியாதவர்கள் , பிறருக்கு உடம்பு உழைப்பால் சேவை செய்தார்கள் "சூத்திரன்" என்று அழைக்கப் பட்டார்கள்.

இந்த 4 வர்ணங்களும் அவரவர் தகுதிக்கும், செய்யும் சேவைக்கும் ஏற்ப பிரிக்கப் பட்டதே தவிர, எல்லோரும் மனிதர்களாக மதிக்கப் பட்டார்கள்

அவர்களுக்கிடயல் பேதங்களும், பொறாமைகளும் இல்லை. அப்படி இருந்தால் தண்டிக்கப் பட்டு, திருத்தப் பட்டார்கள்.

அவரவர் வேலைகளை அவரவர் ஒழுங்காய் பின் பற்றியதால் சமூகம் அமைதியாக வாழ்ந்தது.

பிறப்பால் மட்டுமே "ஜாதி" என்று அழைக்கப்பட்டு, ஏற்றத் தாழ்வு செய்யப் படவில்லை.

அதனால் தான் வால்மீகியும், காளிதாசனும் படிப்பாற்றல் மிகுந்து கவிஞன் ஆனார்கள். இதில் கடவுள் பக்தியும், பூர்வ ஜென்ம பாவ புண்ணியங் களின் பலன்கள் என்ற தத்துவங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஒரு முனிவர் யாகம் செய்கிறார், அப்போது, "நீயா, நானா" போட்டி இவர்களுக்குள் ஏற்பட, முனிவர் சொல்கிறார்...

"பிறப்பால் எல்லாரும் சமம். உடலில் உள்ள இந்த்ரியங்கள் எல்லாம் சமம். அவரவர்க்கு என்ன திறமையோ அதை நன்றாக செய்ய வேண்டும்.

பிராமணன் யாகம் செய்தால், அது உலக நன்மைக்காக. தேவர்களை திருப்தி படுத்த; மழை பொழிந்து நாடு வளமாக;

க்ஷத்ரியன், அந்த யாகம் யாராலையும் பாதிக்கப் படாமல் காவல் காக்க வேண்டும்.

வைசியன் , யாகத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க;

சூத்திரர்கள் ஏவலிட்ட வேலைகளை செய்து, தேவையான சாமான்களை சுமந்து வந்து (உடல் வலிமை பெற்றவர்கள்) உதவ;

இவர்களில் உசத்தி யாரு, மட்டம் யாரு? இவர்களின் ஒன்று பட்ட சேவை இல்லாமல் யாகம் நடை பெறாது. ஆகையால் எல்லோரும் சமம். ஏற்றத் தாழ்வு கிடையாது.

நம் உடலில் உள்ள கை கால் போன்ற உறுப்புகள் இப்படி யோசிக்க ஆரம்பித்தால் நம்மால் இயங்க முடியுமா. எல்லா அங்கங்களுக்கும் , தனித்தனி பணிகள் இருக்கின்றன. அதில் ஒன்று வேலை செய்யா விட்டாலும் system சிரமப் படும்."

என்று உபதேசித்தார்.

--------------------------------------

காலப் போக்கில், கலி காலத்தில், சில விஷமிகளால் மக்கள் மனம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் கற்பனை செய்யப் பட்டன.

பிராமணர்கள், மிக மதிக்கப் பட்டதாலேயே.. அவர்களுக்கும் கொஞ்சம் "கர்வம்" வந்தது. அவர்கள் பூஜைகளும் யாகங்களும் செய்ய சில சுத்த பத்தங்களும், கட்டுப் பாடுகளும் இருந்ததால், மற்ற சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

கஷத்ரியர்களும், மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இவை களால் ஆட்டுவிக்கப் பட்டு, போர் செய்தல் (நாட்டை விரிவு படுத்த) (போர் என்பது, மக்களை எதிரி களிடமிருந்து காப்பாற்ற மட்டும் என்ற தர்மத்தை மறந்து), தன் நாட்டையே, அரசனிடமிருந்து கைப் பற்றி ஆள என்று திரிந்து...பல தீய செயல்களுக்கும், தகுதி இல்லாதவர்கள் அரசனாகவும், தகுதி இல்லை என்றாலும் குலத்தின் வழித் தோன்றல் , அரசனாவதும் என்று கெட்டது .

ஞானிகளின் ஆலோசனை பெற்று, அரசனை நியமிக்கும் வழக்கம் போயிற்று.

வைசியர்கள், வியாபாரத்தால் செல்வம் மிக்க வர்கள் ஆனார்கள். தனக்கு போக மிஞ்சியதை தான தருமங்கள் செய்ய வேண்டும், அரசாங்கத்துக்கு வரிகள் கட்ட வேண்டும் என்ற நியதிகளை மறந்து, தனக்கென்றும், தன்  குடும்பத்துக்கும் என்று வாழ ஆரம்பித்தார்கள்.

செல்வமும், வாழ்க்கை வளமும், தன்னலமும் பெருக, பணம் பிரதானமாயிற்று. போட்டி, பொறாமை வளர்ந்தது. மனிதன், தன தேவைக்கு மேல் பொருளீட்ட ஆசைப் பட ஆரம்பித்தான். தர்மம் அழிய ஆரம்பித்தது.

சூத்திர்கள் , வேலைகள் மட்டும் வாங்கப் பட்டு, தள்ளி வைக்கப் பட்டார்கள் .

சமூகம் மாற ஆரம்பித்தது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. நாகரீக வளர்ச்சிகளால் ஏற்பட்டவை. changes in society, difference of opinion, sociological / political changes, இவைகளால் , மரபுகள் மாறின. பழக்க வழக்கங்கள் மாற, சமூகக் கட்டுப் பாடு குறைந்து, கூட்டங்கள் பிரிந்து, சிறு சிறு கூட்டங்களாக ஆகி, ஜாதி என்று பெயர் சூட்டினார்கள். எந்த சாதிக்கும் , பழக்க வழக்கங்கள் மாறினாலும், மனிதன் என்ற தன்மை மாறக் கூடாது.ஆனால் மாறியது.

சில நம்பிக்கைகள் வேறு பட (குரங்கு மனம் தான்.), அவனவன் தான் leader ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட, பல ஜாதிகள் உருவாகின.

மத நம்பிக்கைகள் மாறியது.

ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், கருத்து வேறுபாட்டால் , பிரிந்து வேறு வேறு பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

சம்பிரதாயங்கள் மாறியது. "யார் உசத்தி" என்ற போட்டியும் பொறாமையும் உருவாயின. "தெய்வங்களும் பிரிக்கப் பட்டனர் ; எந்த தெய்வம் ஒசத்தி என்ற பகையில், வெட்டுக் குத்துக் கூட ஏற்பட ஆரம்பித்தன. ஆணவமும், பக்குவமின்மையும் மேலோங்கியது. மனித நேயம் என்ற சொல் வெறும் சொல்லாக, fashion சொல்லாக மாறியது. மனதில் துவேஷமும், வெளியில் வேறு வேஷமும் - மனிதன் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தான்.

அன்பே சிவம் என்றான்

அரங்கனே வாழ்விப்பான் என்றான்.

கல்லும் சந்தன குங்குமத்துடன் , கடவுளாகியது 

இது நம்பிக்கையாகவே இருந்தால் psychological , mental stability ; அமைதிக்கு உதவும்.

அதுவும் கடவுள் படைத்தது தான் என்று, மரத்தையும், மட்டையையும் கடவுளாக்கியவன் , "மனிதனும் தெய்வமாகலாம்" என்றும், ஆத்மா ஒன்று தான் என்றும் புரிந்து கொள்ள வில்லை.

ஆதி சங்கரரும், ராமானுஜரும் போதித்ததை மறந்தார்கள். வள்ளலார் சொன்னதை, ஒரு poetical , literary தமிழ் என்று ஆக்கிவிட்டார்கள்.

பட்டினத்தாரும், பாரதியாரும் சினிமா எடுக்க பயன் பட்டார்கள்.

-------------------------

" வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாவும் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடற்காற்றும் மலரும் மண்ணும் நதியும் சோலையும்

எதுவும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்; மதத்தில் ஏறிவிட்டான்..

பாரில் இறைவன் படைத்ததை எல்லாம்

பாவி மனிதன் பிரித்து விட்டானே...!!!"

“ மழையும் நிலவும், சூரியனும் - மாளிகை, குடிசை என்று பார்ப்பதில்லை.

அவைகளை பூஜிக்கும் மனிதர்கள் தான் பணக்காரன் / ஏழை என்று சமூகத்தை பிரித்து விட்டான்.”

அரசையும், வேம்பையும் கும்பிடுபவன், அடுத்த வீட்டுக் காரனை கூட மதிப்பதில்லையே !!

இப்போது ஜாதி என்பது அரசியல் சதுரங்கத்து காய்கள் ஆகிவிட்டன.

ஆயிரமாயிர சங்கங்கள்... முன்னேற்ற கழகங்கள்....

ஆனால் மனிதன் முன்னேற வழி காட்டப் படவில்லை.

-------------------------------------------

இதற்குமேல் சொல்ல தேவையில்லை... இன்றைய நிலை சொல்லித் தெரிவதில்லை.

No comments:

Post a Comment