Wednesday, June 12, 2019

தஞ்சையில் சினிமா........




என் அப்பாவும் அம்மாவும் சினிமா ரிலீஸ் அன்னிக்கு, முதல் ஷோ !!
தஞ்சாவூரில் நாலு சினிமா கொட்டகை ! எல்லாம் நடக்கிற தூரம் !
அம்மா / அப்பா யாரை கூட்டிண்டு போவா என்பது கடைசி வரை suspense !
அப்ப எல்லாம் no advance booking; no time spent for getting ready !!
ஆனால், முதல் நாள் இல்லன்னாலும் அப்புறம் பார்த்துடுவோம் !!
தரை டிக்கெட்... ஒரு அணா.. bench - 2 அணா. chair - 4 அணா.
ரொம்ப நாள் வரை தரை தான்.
எல்லா class - ம் பெண்களுக்கு தனி.. ஆண்களுக்கு தனி.. நடுவில் தடுப்பு கட்டை.
கூட்டம் அதிகம் வந்தால், நெருக்கி அடித்து உட்க்கார வேண்டும். no house full சமாச்சாரம் !!
Fan கிடையாது... கொசு, மூட்டை பூச்சியும் கிடையாது !! பீடி நாற்றம் குடலை பிடுங்கும் !!!
intervel இல் ஒரு அணா பாட்டு புஸ்தகம், வேர் கடலை, பட்டாணி, சோடா, கலர் விற்பனை
நாங்கள் வாங்கியதே இல்லை... on principle father never allowed us to buy these things & eat in theatres.
பாட்டு புத்தகம் கண்டிப்பாக வாங்குவோம் !!
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எவ்வளவு சினிமா? ஆனால் வீட்டில் அதை பற்றி விமரிசனம் பண்ணி பேசியதாக ஞாபகம் இல்லை. படம் பார்க்கும்போது, ஒன்றிப்போய், அழுது சிரித்து , வருத்தப்பட்டு , கோபப்பட்டு ... அதோட சரி.
இவைகளை பற்றி நிறைய எழுதலாம்... வண்டி வண்டியாக.. பக்கம் பக்கமாக !!
Krishna theatre இல், ஒரு முறை, ஒன்று விட்டு ஒரு நாள் நாலு பழைய படம். நாலையும் பார்த்தேன்! நான் பிறக்காத போதோ, கைக்குழந்த்யாக இருந்த போதோ பார்க்காமல் விட்டுப்போனது !!மொத்தம் ஒரு ரூபாய் செலவு !!
குலேபகாவலி படம் முதலில் பார்த்தாச்சு. 7th class படித்துக்கொண்டிருந்தேன். அம்மா மூக்கு குத்தி விட்டாள். வீட்டிலேயே, புது ஊசி வாங்கி, நூல் கோர்த்து, நல்ல எண்ணையில் நனைத்து, ஒரே குத்து... நூலை முடி போட்டு விட்டாள். வலி தாங்கலை. அதுக்கு பிரதியாக... குலேபகாவலி, இரண்டாம் தடவை பார்க்க காசு கொடுத்தாள் !!
நான் அந்த நாளில் இரண்டு தடவை (father never allowed us to see a film two times) பார்த்தது, குலேபகாவலியும், நாடோடி மன்னனும் !!
Hindi நல்ல படங்களும் வரும்; அதையும் விட்டு வைக்கவில்லை. Janak Janak Payal Paje, Do Aankein Bharaah hath, Aan, boot polish, Dileep Kumarin sila padangal..
புது படம் வந்தால், வாசலில் கலர் கலர் Notice உடன் வண்டி... எத்தனை நோட்டீஸ் வாங்குவோம் !!
"ஏ. வி. எம். படமுங்க.. வாங்க..வாங்க.. இந்த ஊரில் இப்போ ஓடுதுங்க வாங்க வாங்க...
படத்துக்கு பேரு என்ன ?
பெண்..பெண்..பெண்..
வாழ்க்கை படத்தில் வந்து மயக்கிய வைஜயந்தி உண்டா ?
ஓ உண்டே !! குதிரை ஏறி சவாரி செய்வார் ; ஆற்றில் விழுந்து நீச்ச்சலடிப்பார் வைஜயந்தி மாலா.. !!! "
இது விளம்பர பாடல்.. அடி பிறழாமல், ராகத்துடன் ஞாபகம் இருக்கிறது... !!
அமர தீபம் படத்தில் ஒரு பாட்டில் "தஞ்சாவூரு காரன் சொன்னான்" என்று வரும். எவ்வளவு பெருமை !!
அண்ணா சித்தம்பட்டி என்ற ஊரில் வேலையாய் இருந்தபோது (PWD-Enginner) - Tent கொட்டகை.. நாங்கள் போனால், ராஜ மரியாதையுடன் நாற்காலியில் உட்கார வைப்பார்கள் !!
நான் 1959 சென்னை வந்து பார்த்த முதல் படம் "கல்யாண பரிசு" ... நடுவில் ஏன் "ப்" போடவில்லை என்று ஒரு ஆராய்ச்சி வேறு !!
------------------------
என்னை பழைய கதை பேச சொன்னால்..மணிக்கணக்கில், நாள் கணக்கில், வருடக்கணக்கில் பேசுவேன் !!!

No comments:

Post a Comment