Dear Balachandar,
நீங்க நெறைய அனுபவிச்சிருப்பீங்க.. இருந்தாலும் என் அனுபவத்தை சொல்றேன்....
கீதாவோட ஷாப்பிங் போற அந்த கூத்தை தான் சொல்றேன்...
ஒரு நாள் உங்களுக்கு தெரியும் நாங்க ரெண்டு பெரும், நான் வாங்கி இருந்த புடவையை மாத்தப் போனதை... ஆனால் உங்களுக்குத் தெரியாதது...
அந்த கடையில் நடந்தது... section section ஆ ... முதலில் பட்டுப்புடவை.. அதே விலையில்... ஷெல்பில் ஒரு புடவை இல்லை.. எல்லாம் எடுத்துப் போட்டாச்சு... 4 பொறுக்கி தனியாக வைக்கப் பட்டது...
கொஞ்சம் விலை அதிகத்தில் அலசி ஆராய்ந்து, உடல் கலர் பிடித்தால், பார்டர் பிடிக்கவில்லை.. பார்டர் பிடித்தால், பார்டரின் அகலம் இன்னும் கொஞ்சம் வேண்டும், இரண்டும் பிடித்தால், அந்த கலர் ஏற்கனவே இருக்கு..
அங்கே ரெண்டு சாம்பிள் எடுத்து தனியாக...
அங்கே ரெண்டு சாம்பிள் எடுத்து தனியாக...
அப்புறம் plain பட்டு... அதில் embroidari பண்ணிக் கொள்ள... கடைகாரனுக்கு புரிந்தால் தானே? அவன் அவ்வளவு அனுபவம் இல்லாதவன், புடவை embroidery யில்... ஹும்ம்ம்... நகரு மைசூர் சில்க் பக்கம்...
அவனும் கீதாவை பார்த்ததும், ஒரு உதவி ஆளுடன் எல்லா புடவையும் வெளில பரத்தி யாச்சு... ஆனால்..அந்தோ பரிதாபம் (நானும், sales people உம்) . லாங் பார்டர் காட்டு, இந்தக்ஷணம் ன்னா ... அவன் கிட்ட இருந்தா தானே... இந்த ஆசைக்கு காரணம் யாரோ, எவரோ ஒரு டீச்சர் அந்த மாதிரி உடுத்திண்டது தான்.. எய்தவள் வேறு யாரோ... அம்பு கீதா.
அடுத்தது சில்க் காட்டன். அது கொஞ்சம் சீக்கிரமாகவே நிராகரிப்பு...
எல்லா salesmen உம் அதற்குள் ஜாடை காட்டி சிரிப்பையும், கடுப்பையும் அடக்கி, வேறு கஸ்டமர் யாரையும் கவனிக்க முடியாமல்... அந்தோ பரிதாபம்...
எல்லா salesmen உம் அதற்குள் ஜாடை காட்டி சிரிப்பையும், கடுப்பையும் அடக்கி, வேறு கஸ்டமர் யாரையும் கவனிக்க முடியாமல்... அந்தோ பரிதாபம்...
கடையாக.. நெஜம்மாவே கடைசியாக... இப்போ வாங்கி இருக்கிற designer சரி பார்த்து, இரண்டு கலர் மேலே வைத்துப் பார்த்து...
அம்மா.......ஆ....... நான் கால் வலியால் சோர்ந்து நாற்காலியில் உட்காருவேன், "வசந்தா , இது எப்படி இருக்கு?" ன்னு ஒரு குரல் ஒலிக்கும்.. ம்ம்... எழுந்திரு..
ஒரு வழியாக புடவையை மேலே வைத்து கண்ணாடியில் பார்த்துக்கொள்ள கீதா அந்தண்ட நகரவும், நான் கடைக்காரனிடம், "அப்பா, எப்படியாவது convince பண்ணி, இந்த புடவைக்கு பில் போட்டு விடு " என்று கெஞ்ச, அவன் பதிலுக்கு கண்ணாலேயே "எப்படியாவது சீக்கிரம் இந்த அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்புங்கள்" என்று கெஞ்ச... ஒரு வழியாக செலெக்ஷன் முடிந்தது...
பில் போடப் போனால், இது வெறும் exchange !!! கடைகாரனுக்கு புது சேல்ஸ் உம் இல்லை !!
அவன் பில் போடும் நேரம், கீதா, மறுபடியும் உலாத்த, நான் அவசர அவசரமாக பில்லைப் போட்டு, பாக் பண்ணி வாங்கின டென்ஷன் எனக்குத்தான் தெரியும்..
நல்ல வேளையாக பர்சேஸ் முடிந்தது...
நல்ல வேளையாக பர்சேஸ் முடிந்தது...
பின் குறிப்பு...
அன்றைக்கு கடைக்கு லீவ் விட்டு விட்டு, எல்லாருமாக, வெளியே எடுத்துப் போட்ட புடவைகளை மடித்து அடுக்கினதாக கேள்வி... மறு நாள் 2/3 பேர் கை வலி என்று லீவு போட, நான் கால் வலியால் அவதிப் பட்டேன்.
அன்றைக்கு கடைக்கு லீவ் விட்டு விட்டு, எல்லாருமாக, வெளியே எடுத்துப் போட்ட புடவைகளை மடித்து அடுக்கினதாக கேள்வி... மறு நாள் 2/3 பேர் கை வலி என்று லீவு போட, நான் கால் வலியால் அவதிப் பட்டேன்.
பட்டால் தெரியும் பாப்பானுக்கு என்பது பழ மொழி.
பட்டாலும் தெரியாது பாப்பாத்திக்கு என்பது என் மொழி.
இல்லா விட்டால் நேற்றைக்கும் ஷாப்பிங் போய் படுவேனா??
பட்டாலும் தெரியாது பாப்பாத்திக்கு என்பது என் மொழி.
இல்லா விட்டால் நேற்றைக்கும் ஷாப்பிங் போய் படுவேனா??
No comments:
Post a Comment