காலம்பர வாக்கிங் போறது ஒரு நல்ல அனுபவம்
(அதுக்காக நான் தினமும் போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க; twooooooooooo dayssssss ஆ continuous ஆக போறேன்)
(அதுக்காக நான் தினமும் போறேன்னு தப்பு கணக்கு போடாதீங்க; twooooooooooo dayssssss ஆ continuous ஆக போறேன்)
நாகேஸ்வர ராவ் பார்க்கை சுத்தி போகும்போது, எத்தனை விதமான conversations ?
1) சுமார் 50 வயசுக்கு மேலே இருக்கக் கூடிய மாதுக்கள்... ஒருவர் தன் மாட்டுப்பெண்ணை பற்றி விடாமல் குற்றம் குறை ஓத, கூட வரும் பெண்மணி "பின்னாடி அவ நன்னாவே இருக்க மாட்டா!" ன்னு காலங்காத்தால ஒரு சாபம் - யாருக்கு? அடுத்தவளுடைய மருமகளுக்கு. அப்புறம் தன வீட்டு கதையை சொல்ல வேண்டாமா? அதே குறையை சொல்ல இஷ்டமில்லாமல், "எங்காத்து problem வேற தினுசு" ன்னு, தினுசு தினுசா கதைகள் சொல்லப்படும்.
அதே வயது range உள்ள மற்றொரு க்ரூப், தன அமெரிக்க அனுபவங்கள்; வருஷத்துக்கு எத்தனை மாதம் Washington இல், எத்தனை மாதம் Pittsburg , Sanfrancisco என்று அலசல் (அலட்டல்) நடக்கும். இந்த ரெண்டு டாபிக் தான் அவாளுக்கு தெரியும்.
2) 30 - 40 வயது பெண்கள், ஸ்கூல், படிப்பு, சமையல், மாமியாரை ஒரு திட்டு, ஸ்கூலை பற்றி எப்பவும் குறை தான்; அதில் மாற்றமே இல்லை.
3) 60 வயதுக்கு மேலுள்ள ஆண்கள்.... ஒரு க்ரூப்.... politics - அவர்களுக்கு, உள் நாட்டு, வெளி நாட்டு பிரச்சினைகளுக்கெல்லாம் solution தெரியும். அதில் ரொம்ப confident !! நான் நினைத்துக் கொள்வேன், இவர்களை, ஒபாமா இடத்தில், மன்மோகன் சிங் சேரில், ஜெயலலிதா போஸ்டில் உட்கார வைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
பாகிஸ்தான் border problem லிருந்து, அமெரிக்கா தன் ஆக்கிரமிப்பை (அந்நிய நாடுகளில்) எப்படி நிறுத்த வேண்டும் என்று எல்லாம் தெரியும் இவர்களுக்கு. அந்த confidence level தான் high லைட் !!
4) இன்னும் கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள், கொஞ்சம் நடந்து விட்டு (வீட்டில் wife force பண்ணி அனுப்பி இருப்பார்கள் போல இருக்கு) , ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விடுவார்கள், தங்கள் ஜமாவுடன். அவர்கள் பேச்சு, limited to "வெண் பொங்கல் , கொத்சு, தோசை, சட்னி ... இந்த மாதிரி...
இல்லைன்னா... cricket ... முந்தய match ஐ, batting , bowling என்று அலசலோ அலசல். இரண்டு பேர், நான் மூணாவது ரவுண்டு வரும் வரை இதே பேசினார்கள். எழுந்திருக்கவே இல்லை. டைம் பாத்து வீட்டுக்கு போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன்
(" அப்பாடா .... மங்களம், ஒரு காப்பி சூடா குடு" ன்னு !!) அந்த மங்களத்துக்கும் ஒரு திருப்தி; "இந்த பிராமணன் வரும் வரை நாம புது டிகாக்ஷன் காப்பியை சாப்பிட்டு, சற்று குமுதம் படிக்கலாம்" ன்னு
(" அப்பாடா .... மங்களம், ஒரு காப்பி சூடா குடு" ன்னு !!) அந்த மங்களத்துக்கும் ஒரு திருப்தி; "இந்த பிராமணன் வரும் வரை நாம புது டிகாக்ஷன் காப்பியை சாப்பிட்டு, சற்று குமுதம் படிக்கலாம்" ன்னு
5) 30 - 40 ரேஞ்சில் ஆண்கள் தென்பட வில்லை இன்று. அவர்களுக்கு, எப்பவும் ஆபீஸ் கவலை தான்... தன் வேலை பளு, தன் importance , சிடுமூஞ்சி சீனியர், லீவு problem ... இப்படி
6) 20 - 25 பெண்களுக்கு இந்த உலக சிந்தனையே இல்லை. ஒன்று... கையில் ipod or mobile; காதில் சொருகிய ஸ்பீக்கர். இவர்களால் ஒரு மணி நேரம் பாட்டு இல்லாமல் இருக்க முடியாதாம்
இல்லேன்னா, செல் போனில், பேச்சு, பேச்சு, பேச்சு... இத்தனை காலையில் யாருடன் இவ்வளவு நேரம் பேச முடியும் ?
இவர்களுக்கெல்லாம், ஏன் இயற்கையின் பாட்டும், தாளமும் ரசிக்கத் தெரியவில்லை? நல்ல காற்று; இழுத்து மூச்சு விடலாம்; வித விதமான பறவை ஒலிகள் (மைனா, குருவி, அக்கூ பக்ஷி, கிளி இவைகள் ஒலியெல்லாம் சுத்தமாக மறைந்து, எல்லாம் CASIO வில் ஒலிக்கிறது !!) இதை எல்லாம் ரசிக்க மாட்டார்களோ?
சரி, இவ்வளவு சொல்றேனே, நான் என்ன செய்வேன் என்று யோசிக்கிறீர்களா?
நான் தனியாகத்தான் போவேன்; அதே மரங்களை தாண்டும்போது "இந்த மரம் என்னை தினமும்(!!) பார்க்கிறதே; அந்த இலைகளுக்கு என்னை அடயாளம் தெரியுமா?"
இந்த பூ இவ்வளவு அழகாக பூத்திருக்கிறதே; சிகப்பும், ரோஸும் கலந்து... அவைகள் ஒரு நாளிலேயே உதிர்ந்து விடும் என்று அவைகளுக்கு தெரியுமா?
இந்த பறவைகள், காலங்கார்த்தாலே இப்படி கத்துகிறதே ... எதற்கு? தூங்கி எழுந்த புத்துணர்ச்சியா? மறு நாளை பார்த்த சந்தோஷமா? தன கூட்டதத்திற்கு, "நான் ஆஜர்" என்று தெரிவிக்கவா?
அப்போதெல்லாம் எனக்கு சில பைபிள் வாசகங்களும், பாட்டும் ஞாபகம் வரும் :
"ஆகாயத்து பறவைகளை பாருங்கள் ; அவைகள் அடுத்த வேளை என்ன உண்போம்; எதை உடுத்துவோம் என்று கவலைப் படுகிறதா; எல்லோரையும் படைத்து, காக்கும் நான், உங்களை காக்க மாட்டேனா?"
"வானம் பூமியும் , கடலும் அலையும் , படைத்த ஆண்டவர், நம்மை காக்கிறார்"
No comments:
Post a Comment