Wednesday, June 12, 2019

கார்த்திகை பண்டிகையும் என் அசிரத்தையும் ......



ஒண்ணுமில்ல ...
கார்த்திகை பண்டிகை வந்துது. எனேக்கே கொஞ்சம் ச்ரத்தை கொறஞ்சிதான் போச்சு. எனக்கே ஒரு சமாதானம்.. !
"ஹாங்;
எல்லாம் வருஷக்கணக்கா பண்ணியாச்சு
வயசாச்சு; தள்ளல்லே ("ஷாப்பிங் க்கு மட்டும் உடம்பை தள்ளிண்டு போறியே" ன்னு கேக்கப் படாது -- அது வேற...இது வேற)
ஆத்துல ரெண்டே பேரு; ரெண்டும் கிழம்; இதுல என்ன பொறி உருண்டை பண்ண வேண்டி இருக்கு?
grand sweets ல ரெடியா விக்கறான்."
இப்படி, கையாலகா தனத்துக்கு சமாதானங்கள்.
இதுல கொடுமை என்னன்னா... என் பெண் மாறிப் போனதுதான்.
கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் நன்னாதான் போயிண்டிருந்தது. இப்போ 4/5 வருஷமா ஒரு பண்டிகை கிடையாது - எல்லாம் சேர்க்கை யால் வந்தது. (அவ சினேகிதி ஆத்துல அவா அம்மா எல்லாம் இதையே சொல்லுவா)
"புவனா, நான் அகல் வாங்கப் போறேன்; உனக்கும் சேர்த்து வாங்கட்டுமா?" ன்னா , ஒரு உதட்டு சுழிப்பு, cynical சிரிப்பு.
நான் ஏதோ 10 விளக்கு ஏத்தி வெச்சு, வாசலுக்கு கொண்டு போறதுக்குள்ளா, எல்லாம் அணையறது. காத்து. அப்புறம் வீட்டுக்குள்ளேயே வைத்து, எல்லா எலெக்ட்ரிக் விளக்கையும் சுச்சு தட்டினேன். கார்த்திகை முடிஞ்சிது. டி.வி. பாக்க உக்காந்துட்டேன்.
இவர் நம நம ன்னு கத்தி கமெண்ட்... ஏன் புவனா பண்ண மாட்டேங்கறா ன்னு.
நான் மாறல்லியா ? எங்க அம்மா மாமியார் மாதிரியா இன்னும் எல்லாம் சிரத்தையா பண்றேன்?
இந்த மாத்தத்த நாம எத்துக்கரதுதான் கரெக்ட். ஏத்துக்கரத்துக்கு என்ன ? கவலையே படக் கூடாது.
நாமோ one foot in grave. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன தெரியப் போறது. ?
பேரக் குழந்தைகளை பத்தி இவர் கமெண்ட் அடிச்சாக் கூட நான் அதான் சொல்வேன். அவா அம்மா வளர்க்கற படி அதுகள் இருக்கு. நாம யாரு அதை திருத்த ?
இதுல ஒரு வேடிக்கை என்னனா....
என் பெண்ணை "ஏண்டி கொலு வைக்கல்லே?" ன்னா " குழந்தைகள் கேக்கல்லேம்மா " ம்பாள். எல்லா பண்டிகைக்கும் அதையே சொல்லுவாள். சின்னக் குழந்தைகள் தானே கேக்குமா ? நாமதான் பண்ணனும். ன்னா ஒத்துக்க மாட்டா.
அமெரிக்கா வில இருக்கறவா கூட நம்மளை விட அதிகம் பண்றா ன்னு எனக்கு தோணும்.
மாட்டுப் பெண் மதராசுல... அம்மாவாத்தில கார்த்திகை விளக்கு. முடிச்சுட்டு நமஸ்காரம் பண்ண வந்தாளா.. அது வரைக்கும் சந்தோஷம். தீவாளிக்கு நான் குடுத்த பட்டுப் புடவைய கட்டிண்டு, காமிக்க வந்தா. அதே போறும்.
நான் எதுக்கும் கவலை படறது இல்லை. நானுண்டு, என் தூக்கமும், புக்ஸ் ம் , உத்தியோகமும் உண்டு ன்னு இருக்கேன். இவரும் அப்படித்தான். ஆனாக்க இன்னும் கொஞ்சம் பக்குவப் படணும்.
எப்பூடி ??

No comments:

Post a Comment