Friday, August 23, 2019

V.K யின் கதை......


KANDI RAJA PALACE HOUSE(TANJORE)     


THE ROOM IN WHICH I  WAS BORN






கண்டி என்பது இலங்கையில் இருக்கும்ஊர்.                                            
அங்கே இருந்த ராஜாக்கள், மதுரை அல்லது தஞ்சாவூர் நாயக்கர்குடும்பங்களில் பெண் எடுத்து கல்யாணம் செய்தார்கள்
(
நாயக்கர்கள் அரசவம்சத்தினர் - ROYAL FAMILY )
அப்படியே இங்கே ஊர்களும் பிடித்து ஆண்டார்கள்.
தஞ்சாவூரின் கண்டி ராஜா ஒருவன் ரொம்ப கொடுமைக்காரன்.
அதற்கு உதாரணமாக ஒருகதை...
அவன் ஒரு திருமணமான பெண் மேல் ஆசை படுகிறான்.
அவளுக்கு இரண்டுஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
அவள், ராஜாவின் ஆசைக்கு இணங்காததால், அவன்குடுத்த தண்டனை....
"
அவள் குழந்தைகளின் தலைகளை வெட்டி, உரலில் போட்டு, அவளையே உலக்கை கொண்டு இடிக்கச் சொல்கிறான்" அவளும் இடிக்கிறாள்...!!

இந்தகதையை, ஒரு சிவாஜி, பத்மினி படத்தில் நாடகமாக காட்டினார்கள். பத்மினிதான் அந்தபெண் ! மறக்க முடியாத பாட்டு... நாடகம்.. !
{
அவனுடைய அரண்மனை (சிறியதுதான் )தஞ்சையில் இருக்கிறது.... பாழடைந்து...
அதில், தடுப்புகள் ஏற்படுத்தி, வீடுகளாக்கி, ஒரு காலனி மாதிரி இருக்கிறது... இன்றும்.
இதெல்லாம் ஏன் இங்கே சொல்றேன் ன்னு யோசிக்கிறீங்களா.. 
அந்த palaceவீட்டில்தான் நான் பிறந்தேன் !! ---- நான் நல்லவ... நம்புங்க !! }

VANDIKKAARA THERU HOUSE (TANJORE)

1942, December 3rd ..... 
நான் பிறந்தது
கார்த்திகைமாசம், ஹஸ்தநட்சத்திரம், கன்யாராசி... ராத்திரி 11.50;new time - 10.50 
war timeங்கறதுனால, கடியாரத்தைஒருமணிநேரம் முன் தள்ளி வெச்சிருந்தாளாம்அதனாலே, என் ஜாதகத்தில ரெண்டு நேரம் போட்டிருக்கும்....
நான் பிறந்தது வீட்டிலேயே... 
நான் ஒம்பதாவது குழந்தை. இரண்டு இறந்துபோக, எனக்குமுன்னால் 2 ஆண்கள், நான்கு பெண்கள்...
மாத ஆரம்பம்ங்கறதுனால, அம்மாக்கு ரொம்ப வேலை.எல்லாம் ரெடி பண்ணனும்...
மாச சாமான் வாங்கி, முழு உளுந்து உருட்டி,  ஏந்திரத்துல உடச்சு, மாவு அரச்சு, பொடி வகைகள் பண்ணி...
எல்லாம் முடிச்சு, விறகடுப்பில் வெந்நீர் போட்டு, மருத்துவச்சிக்கு சொல்லி அனுப்பினாளாம்  
வெளியே "ஜோ" ன்னுமழை ...
என்பெரிய அக்காக்கு  பதினாலு வயசிருக்கும்.. வீட்டுப்பொறுப்பு
எல்லாம் அவளுது...
ஏற்கெனெவே நாலு பெண்கள் இருக்கறச்சே, அப்பா, பிள்ளைக் குழந்தைக்கு ஆசைப்பட ..நானும் பெண்ணாய் பிறந்ததில் அப்பாக்கு பெரிய ஏமாற்றம்..
வீட்டை விட்டு போனவர்...2 , 3   நாள் வெளியிலேயே இருந்தாளாம்...
எனக்கு அப்பா பேர்வைக்காததால், எல்லாரும் என்ன பாப்பா என்று கூப்பிட, அதுவே இன்று வரை நிலைத்துவிட்டது...
என்பெரிய அண்ணாதான் வசந்தா என்ற பெயரை வைத்தானாம்...

GIRLS’ CHRISTIAN HIGH SCHOOL (TANJORE)


SCHOOL– TANJORE - LEFT SIDE TOP ROOM WAS MY CLASS ROOM IN S.S.L.C.

                                      




நான்பிறக்கும்போதுஅம்மாக்கு 32 வயசு !!
 அந்தவீட்டிலேஇருந்துதான்நான்பள்ளியில்சேர்க்கப்பட்டேன்... 
அப்பாவேலைபார்த்தஅதேஸ்கூல்... அண்ணாஇரண்டுபேரும்ஐந்தாம்கிளாஸ்வரைபடித்தது... அக்காக்கள்எல்லாரும்படித்தது... 
நான்சேரும்போதுஎனக்கு 51/2 வயது... ஸ்கூல்சுமார்ஒருகிலோமீட்டர்இருக்கும்... நடந்துதான்போவோம்...

அந்தவீடுஅப்பாக்குரொம்பபிடித்தது... அதற்குமுன், நாடார்ஸ்டோர்என்றகாலனியில்இருந்தாளாம்... 
அந்தவீட்டில், சைடில்ஒருதோட்டம்உண்டு...அங்கே வாழைக்கொல்லை... நெறையவாழைவைத்திருந்தாஅம்மா... 
வீட்டில்எப்போதும்வாழைத்தார்பழுத்துக்கொண்டிருக்கும்... பூவங்காய்வறுவல்அடிக்கடி...
இதுமட்டும்எனக்குரொம்பநன்னாஞாபகம்இருக்கு... 

வீட்டுக்காரன்திடீர்என்றுகாலிபண்ணசொல்ல..அப்பாதிகைத்துப்போய்..வண்டிக்காரத்தெருவில்வீடுபாத்தா... தனிவீடுதான்...வாடகை 15 ரூ
அப்பாக்குஎதுஇருந்தாலும், இல்லாட்டாலும், குழாய்மட்டும்இருக்கணும்..கிணறுலதண்ணிஇழுத்தாஸ்ரமப்படுவோம்னு ..

வீடுகாலிபண்ணும்முதல்நாள்ராத்திரி, அப்பாக்குஅசாத்தியகோபம்வந்து, எல்லாவாழைமரத்தையும்வெட்டிப் போட்டுட்டா.. !!
BRAHADESWARAR TEMPLE (BIG TEMPLE – TANJORE)


வண்டிக்காரதெருவிலேர்ந்துஸ்கூல்ஒருகிலோமீட்டர்இருக்கலாம்..நடந்துதான்..காலுக்குசெருப்புகூடஇல்லாமல்...
நாங்கள்நாலுsisters  ஒண்ணாதான்போவோம்.. பெரியஅக்கா, எங்களைபாத்துக்கூட்டிண்டுபோவதாகஐதீகம் !! 
அந்தஅக்காதன்friend ஓடபேசிண்டேமுன்னாடிபோவா..நாங்கபின்னாடிஓடிஓடிசேந்துப்போம் ..அவாபேசறதநாங்ககேக்கக்கூடாதாம் !!என்ன, சினிமாகதைதான்பேசுவா... ஞானசௌந்தரிபடம்பாத்துட்டு..அந்தகதையஅவாரெண்டுபெரும்பேசிண்டுபோனதுஅவ்வளவுநன்னாஞாபகம்இருக்கு.       
அந்த வீட்டிலே சில விஷயங்கள் ரொம்ப பசுமையா ஞாபகம் இருக்கு...
நான் பல் தேய்க்க, எண்ணெய் தேச்சுக்க படுத்தி, வீட்டை சுத்தி ஓடினது...
ஒரு நாள் , எண்ணையில் பல்லி விழுந்திருந்ததை கவனிக்காமல் எங்கம்மா வடாம் வறுக்க, முதலில் நான் போய் அதை எடுத்து சாப்பிட, வாந்தி எடுக்க
ஆரம்பிச்சு, அம்மா அப்புறமா அதை கவனிச்சு, உடனே, பதட்டப் படாமல், நிறைய உப்பு போட்ட தண்ணிய குடிக்க வெச்சு, வாந்தி எடுக்க வெச்சது...
கமர்கட்டை அப்படியே முழுங்கி விட, தொண்டையில் சிக்கி, கண்கள் சொறுக, அம்மா என்னை  குனிய வைத்து  பிடரியில் ரெண்டு அடி ஓங்கி  போட்டு, கமர்கட் வெளியிலே வந்தது
எல்லாருக்கும் வரிசையாக  அம்மை போட , மூன்றாவது அக்காக்கு தலைக்கு ஜலம் விட்டதும், எனக்கு அம்மை இருந்ததால், அக்காவை பார்க்கக் கூடாது என்று அவளை எதிர்த்த வீட்டில் மூன்று நாள் இருக்கச் சொல்லி, சாப்பாடெல்லாம் கொண்டு கொடுத்தது
KALYANA SUNDARAM HIGH SCHOOL - TANJORE (WHERE MY BROTHERS STUDIED)

எனக்கு காலில் புண் மாதிரி வந்து, முழங்காலி லிருந்து, கணுக்கால் வரை பரவ, ஆடு தொடா இலை வைத்து கட்டி, அம்மாவே குணப் படுத்தியது...

கீழே விழுந்து, முழங்கால் இரண்டிலும் பெரிய அடி பட, அது சட்டுன்னு சரியா போகாம, டாக்டர் கிட்ட வைத்தியம் பண்ணி , சரியானது...
(இப்பவும் அந்த தழும்பு இருக்குSchool certificate   identification markஆ அதுதான் இருக்கு.. )
நாங்க எல்லாரும் க்ரூப் போடோ எடுத்தது, அதுக்கு போட்டுக்க நல்ல சட்டை இல்;லைன்னு எங்கண்ணா அழுது கண் வீங்கியது, நாங்க எல்லாரும் ஒரே மாதிரித் துணியில் தைத்த டிரஸ் போட்டது
எனக்கு மட்டும் ஆசைக்கு ஒன்றிரண்டு கவுன் தெச்சுக்குடுத்தது..

நான் நாலாம் கிளாஸ் அல்லது ஐந்து இருக்கும் - அதுவரை தான் அந்த வீடு. 
அப்போ எல்லாம் டாக்டரிடம் அடிக்கடி போகும் வழக்கமே இல்லை... 
ஜுரம், ஜலதோஷம் என்றால்... அப்பா வைத்தியம் ரெஸ்ட், சாப்பாடு கண்ட்ரோல்... 
வயிறு சரி இல்லைன்னா... "லங்கணம் பரம ஔஷதம்"
ரொம்ப முடியல்லியான்னாஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டுபோவா. டாக்டர் பாத்தப்புறம், கம்பௌண்டர் பெரிய பெரிய ஜாடியிலேர்ந்து கலர் கலரா மருந்து கலக்கித் தருவார்.ஜுரம்னா ரோஸ் கலர்; வயிறு சரி இல்லைன்னா வெள்ளை கலர் பிஸ்மத் மிக்சர். 

EAST RAM PART HOUSE (TANJORE)

Appa believed in natural cure - that our body has the capacity to fight illness; if treated with medicines, immunity will reduce .. 
We never heard of the word "antibiotic" 
appaa was strict with certain  diet pattern
1. Time factor - same time every day
2. in between meals no snacks - only in the evening
3. no coffee.. only kanji
4. every meal, freshly cooked - no left overs
5. night meals very simple & early dinner.
6. alternate day "keerai". often carrot- raw.at least 1/2 lime for everyone, every day.
7. only boiled rice or hand pound rice
8. eating was only on plantain leaf
9. daily 2 bananas in the evening - poovan pazham. 
 other than these there were certain strict rules..
1. early to bed (9 pm)
2. early to rise (4 am) 
3. எச்சில் பண்ணக் கூடாது... 
4.இடது கையால் சாப்பாடு போட்டுக் கொள்ளக் கூடாது - யாராவது பரிமாறணும்.
5.faceபவுடர் கூடாது... (ரொம்ப ஸ்ட்ரிக்ட் )
6.ஒரு தடவை அக்கா, ஹேர் பின்னை வாயால் பிரித்து குத்தினாள் என்று அப்பா அறைந்தது பார்த் ததே ,எனக்கு இன்னும் வலிக்கிறது...இன்னிவரைக்கும்  பண்ண மாட்டேன்..
8.சின்ன விஷயமானாலும் பொய் சொல்லக் கூடாது... உண்மை பேசி விட்டு, அதன் punishment  ஐ வாங்கிக் கொள்ளணும்
9. பெரியவாளை எதுத்துப் பேசக்கூடாது..
10. அம்மா பக்கத்து வீட்டுக்காராளோடு வம்பு பேசினால் பின்னிப்பிடுவா... அதனாலேயே அம்மாக்கு அந்த வழக்கம் இல்லாமலே போயிற்று கடைசி வரைக்கும். 
.  (ஸ்கூல் கதை எல்லாம் பிறகு தனி அத்தியாயத்தில்)
அம்மா எங்கயாவது .ஊருக்குப் போனா, நான் ரொம்ப அழுவேன். விட்டுட்டு இருக்கவே மாட்டேன். அதனாலேயே, என் அக்கா எல்லாம் "உன்ன ஆஸ்பத்திரி யிலேர்ந்து எடுத்துண்டு வந்தா. இது உன் அம்மாவே இல்ல" ன்னு சீண்டுவா. நான் ரொம்ப அழுவேன். 
சாப்பிடும்போது, எல்லாருக்கும் சாதம் போட்டு, நெய் விடுவா. எனக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா , கையில உருக்கின நெய் ! எனக்கு மட்டும் ராத்திரி பசும் பால் 
4/5  வயசு இருக்கச்சே, ரெண்டு மூணு தரம் fits வந்தது .. அப்போ வண்டிக்கார தெருவில இருந்தோம். நாடு ராத்திரி எனக்கே ஒரு feel தெரியும். முனகுவேன். உடனே fits வந்துடும். நின்னதும் ரொம்ப வீக்கா இருக்கும். டாக்டர் சொல்ல, ரொம்ப வருஷம் ராத்திரி பாலோட cod liver oilகுடுத்தா. அதுக்கப்புறம் வரவே இல்லை. 
THE SCHOOL CHURCH (TANJORE)



அதுக்கு முன்னாடி, ஒரு வயசாரச்சே, லிவர்ல கட்டி வந்ததாம். என் பெரிய அண்ணாக்கு (அம்மாவின் முதல் குழந்தை) இதே problem . அப்ப அதுக்கு சரியான வைத்தியம் இல்லாததால, அந்த குழந்தை ஆறு மாசம் கஷ்டப்பட்டு, இரண்டரை வயசில் செத்துப் போச்சாம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்  diet ஆம். கடைசி நாள், உப்புமா வேணும்னு கேக்க, பண்ணித் தரலயாம். கடைசி வரைக்கும் இஷ்டப்பட்டதை
சாப்பிடாம செத்துப் போனதாலே, அப்பா, அம்மாக்கு ரொம்ப வருத்தம்.
அதனாலே எனக்கு diet control கிடையாதாம். ஆனால், அப்போ, மெட்ராசில "jimmi 's liver cureமருந்து வந்துட, எனக்கு அதை வாங்கி குடுத்து, சரியாப் போச்சு. 
எனக்கப்புறம், என் பெரியண்ணா பையனுக்கு ஒரு வயசில வந்துது. மன்னி, கல்கத்தாலேர்ந்து வந்து (அப்போ மெட்ராசில இருந்தோம்) அதே treatment (Jimmi's Liver Cure) குடுத்தா. இப்ப கூட அந்த "Jimmi Building" , Luzல்இருக்கு. 
எங்களுக்கு எல்லாம் அப்பா, விளக்கெண்ணை, உரை மருந்து எல்லாம் குடுப்பது, சுடச் சுட வெந்நீர் ஊத்தி குளிப்பாட்டுவது, எல்லாம் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆ இருந்தா. 
நாங்க எல்லாம் கண்ணுக்கு மை இட்டுக்காம இருந்ததே இல்லை. இன்னி வரைக்கும் அது தொடர்றது. 
இப்பதான் கடையில வாங்கற eyetex, shingarமை எல்லாம். அம்மா இருந்த வரைக்கும் அம்மாதான் ஆத்துல மை கூட்டி குடுப்பா. 

 GNAANAM THEATRE – NOW A HOTEL (TANJORE)


அது ஒரு பெரிய process.   புது, பெரிய அகல் விளக்கு, புது மண் சட்டி, சின்னதா, அகலமா  எல்லாம் வாங்கிண்டு வருவா. அகல் விளக்குல, நிறைய விளக்கெண்ணை விட்டு, வேஷ்டி துணிய கிழிச்சு, திக்கா, நீ திரி திரிச்சு எண்ணையில நெனச்சு, ஏத்துவா. .ஒரு stand ல அகல சட்டிய விளக்கு சுடர் படறமாதிரி வெச்சு, ஒரு கூடைய போட்டு கவுத்து, ஒரு மூலையில வெச்சா, ராத்திரி பூரா எறியும். 
காலம்பர பாத்தா, அந்த சட்டி அடியில, கரி ஏறியிருக்கும். அத ஒரு பேப்பர்ல உதுத்து விடுவா. ஒரு கிண்ணத்தில கொஞ்சம் இந்த பொடிய போட்டு, விரல்ல விளக்கெண்ணை தொட்டுண்டு, கொஞ்சம் கொஞ்சமா குழச்சு, வெள்ளி மைக்கூடுல எடுத்து வைப்பா. 
ஒரு வருஷத்துக்கு வரும். 
எல்லாரும் நாங்க மை இட்டுண்டாலும் எங்க மோகனா அக்கா, சின்ன குச்சி, பின்னோட பின் வளையம் இதில மை எடுத்து, கண்டிப்பா, கண் நுனியில  "குருவி" இழுத்துப்பா.    
மறக்கவே முடியாது
அதே போல நெநத்திக்கு இட்டுக்க கருப்பு சாந்தும் அம்மாதான் பண்ணுவா. எப்படின்னு மறந்து போச்சு. சாந்தை கொட்டாங்கச்சில எடுத்து வெப்பா. அது காஞ்சு இருக்கும்.பொட்டு வெச்சுக்கும்போது, சொட்டு தண்ணி ஊட்டி, கொழச்சு இட்டுக்கணும். ஒருத்தர் மத்தவாளுக்கு
இட்டு விட்டா, தன்னை அறியாமல்,வாயில், நாக்கை மடித்து "கொ ள கொ ள " ன்னு சத்தம் பண்ணுவோம் !! சின்ன குழந்தை அசையாம காமிக்கறதுக்கு, நம்மளையே பாக்கறதுக்கு பண்ற சத்தம், அப்புறம் வழக்கமாவே ஆகிடும் !
 THANJAVUR JUNCTION

 குழந்தை பிறப்பதற்கு முன், அஞ்சாம் மாசம் விளக்கெண்ணை குடிக்கன்னு நாள் பாத்து அம்மா வாத்துக்கு அனுப்பிச்சா. ஆனா எங்கப்பா குடுக்கவே கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டா. 
அதே போல், ரமேஷ், புவனா பிறந்து அங்கே இருக்கையில், குழந்தைகளுக்கு ஒண்ணு விட்டு ஒரு நாள் விளக்கெண்ணை, உரை மருந்து, தினமும்  Gripe Water - இதெல்லாம் கிடையாது
பத்திய சாப்பாடும் கிடையாது. இரண்டாம் நாளிலிருந்தே தயிர், தக்காளி, காரட் என்று நிறைய கறிகாய் பழங்கள் குடுப்பா. மிளகு குழம்பெல்லாம் கிடையாது. அப்பா தான் சாப்பாடு என்ன பண்ணனும் ன்னு தினமும் அம்மாகிட்ட சொல்லிடுவா. 
இதில பிரச்சினையே, மாமியார் வீட்டிலிருந்து , இவர் மூலமாக instructionவரும். ஆனால் அதெல்லாம் அப்பா பேசாம கேட்டுண்டு, தான் பண்ணுவதையே பண்ணுவா. ஏன்னா, scientific  ஆ அப்பா எல்லாம் தெரிஞ்சு வெச்சிண்டிருந்தா. எங்களுக்கும் அப்பா மேல் அசாத்திய நம்பிக்கை.   


YAGAPPA THEATRE (TANJORE)
.
அங்கிருந்து நாங்கள் மாறியது கீழலங்கம்... எனக்கு நன்றாக நினைவு தெரிந்து, விளையாடி, படித்து, மெட்ராஸ் வரும் வரை இருந்தது இந்த வீடுதான்.
என் மனசுக்கு மிக மிக நெருக்கமான வீடு.. 


வாசலில் closedவெரண்டா..கிரில் போட்டது. நாலு படி ஏறினா பெரிய கூடம். 
கூடத்தில் ஒரு பக்கம் சதுரமான கடப்பைக் கல் .. ஆறு பேர் தாராளமாக உக்காந்து விளையாடலாம்...
ஹாலை தாண்டினால் ஒரு நீள வாட்ட ரூம்; அதன் சைடில் குளிக்கும் அறை .. அங்கிருந்து, இரண்டு படிகள் இரங்கற மாதிரி ஒரு சின்ன குளிக்கும் ரூம்... அங்கே ஒரு குழாய். 
குழாயில் தண்ணீர் வரும் போது பிடித்து வைத்துக்கொள்ளணும்... 
அதற்குள் ஒரு சிமென்ட் தொட்டி, அண்டா, கங்காளம், வென்னீர் அடுப்பு, அந்த அடுப்புக்கு மேல் ஒரு கரி ஏறிய தவலை   

அந்த நீள ரூமை தாண்டினால் இரண்டுபடி இறங்கி, பெரிய சமையல் ரூம் . நடுவில் முற்றம். ஒரு பக்கம் மண் மேடை போட்டு, அதன் மேல் மண் அடுப்பு. சமையல் ரூமில் உக்காந்துதான் சாப்பிடுவோம். 
சமையல் அறையின் ஒரு பக்கம் கதவை திறந்தால் தோட்டம்... தோட்டத்தின் கடைசியில் சர்வீஸtoilet .. தோட்டத்தின் ஒரு பக்கம் ரெண்டு சின்ன ரூம்வேண்டாத .. சாமான் அடைத்து வெச்சிருக்கும்
இந்த தோட்டத்துக்கு ரோட் சைடில் ஒரு பெரிய கேட்...மூடியதுஅலுமினியத்தால் ... பூட்டி விட்டால், வெளியி லிருந்து தெரியாது.. 
அங்கெல்லாம் நாங்கள் பயமில்லாமல் நடமாடி இருக்கோம் ! 
இந்த வீட்டில் இருக்கும்போது, விளையாடிய விளையாட்டுக்கள், பார்த்த திருவிழாக்கள், கொண்டாடிய பண்டிகைகள் .. இன்னும் பல தனித் தனியாக எழுதி இருக்கிறேன்..

அம்மா வருஷா வருஷம், கோடை காலத்தில வடாம் போடுவா. அது ஒரு பெரிய process முதல் நாள் மார்கெட் போய், நிறைய பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் வாங்கிண்டு வருவா. 
விடியற்காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து, அக்கா உதவியுடன் ஒரு பெரிய கங்காளத்தில் வடாத்து மாவு கிளறுவா. 
வெய்யில் வருவதற்குள் மொட்டை மாடியில் பிழிய வேண்டும். சுமார் 5 மணிக்கு ஆரம்பிச்சு பிழிவா. நாங்க எல்லாருமே ஹெல்ப் பண்ணுவோம் (வடாத்து மாவு சாப்பிட ரொம்ப ருசி). இட்ட வடாத்தை காவல் காப்பது ரொம்ப போர் ஆன வேலை. காக்கா கொத்தாம பாத்துக்கணும். அதுக்கு கருப்பு துணிய கட்டி வெப்பா. நாங்க டர்ன் போட்டுண்டு, கையில நீள கம்போட, கதை புஸ்தகம் படிச்சிண்டு உக்காந்திருப்போம், காக்கைகளை விரட்ட. 
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தினுசு என்று நாலைந்து நாள் இந்த வேலை ஓடும். ஒரு நாள் இட்டதை, மறு நாள் திருப்பி போட்டு, காய வைத்து, பிஸ்கட் டின்னில் அடைக்கணும்வடாம் பிழிய ஓலை பாய். மெட்ராசில் பின்னாளில் பெரிய பிளாஸ்டிக் ஷீட்கள் கிடைக்க, அம்மாக்கு ஏக சந்தோஷம்.  
பிறகு வத்தல்கள். கொத்தவரங்காய் ரொம்ப மலிவாக கிடைக்கும்போது (ஒரு வீசி ஒரு ஒரு அணா, ரெண்டு அணா க்கு கிடைக்கும். பிஞ்சாக பாத்து வாங்கிண்டு வந்து , உப்பு போட்டு காய வைப்பா. இந்த வத்தளை வறுத்து சாப்பிட்டா ஒரு சிறு கசப்புடன், வித்தியாசமான ருசியுடன் இருக்கும். 
இதே போல் கத்திரிக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல் எல்லாம். குழம்புக்கு தானாக போடா சௌகரியமாக இருக்கும். 
தஞ்சாவூரின் குட மிளகாய், சின்ன சின்னதாக இருக்கும். அதை வாங்கி மோர் மிளகாய். மணத்தக்காளி வத்தல், மோர் மிளகாய் வறுத்து வைத்தால், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள நன்னா இருக்கும். மணத்தக்காளியை வறுத்து, சூடான சாதத்தில் நெய் விட்டு, அதில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப நன்னா இருக்கும். 

அம்மா தோட்டத்தில் நிறைய மணத்தக்காளி போடுவா. அதன் இலைகளை பறிச்சு வாரத்துக்கு ஒரு தரம் பொரிச்ச குழம்பு பண்ணுவா. வயித்துக்கு அவ்வளவு நல்லது. வாய்ப்புண் வராது. அப்படி வந்தாலும், இதான் வைத்தியம். 

அடுத்த கல்யாணம், வருஷத்துக்கு வாங்கும் புளி. புளிகொட்டையோடும் , கோதோடையும்தான் கிடைக்கும். மேல் ஓடு இருக்காது. சுத்தி எல்லாரும் உக்காந்து, அரிவாள் மனை வைத்துக்கொண்டு, புளியை கிழித்துகொட்டையை பிரித்து எடுப்போம். ரொம்ப நேரம் இதை பண்ணினால் உடம்புக்கு சூடு என்று, குழந்தைகளை ரொம்ப நேரம் உக்கார விட மாட்டா. சுமார் முப்பது வீசை புளியை கொட்டைஎடுத்து, கொஞ்சம் உப்பு சேர்த்து (கெடாமல், புழு வராமல் இருக்க) , சாக்கின் மேல் பரத்தி, நன்றாக காய வைத்து , உருட்டி பானையில் அடைத்து வைப்பாள்.    
எடுத்த கொட்டைகளை சுத்தம் பண்ணி, சேர்த்து வைப்போம், ஊதி ஊதி விளையாட. 

மற்ற அக்காக்களை விட ஒரு அக்கா மேல் எனக்கு பற்று அதிகம்... நாங்கள்நாங்கள் இருவருமே அதிகம் பேசவே மாட்டோம். 
எனக்கு தலை பின்னுவது அவள் தான்.வேற யார் பின்னினாலும் பிடிக்காது.
ட்ரெஸ் பண்ணி விடுவது அவள் தான்.. 
ராத்திரி பாயில் அவள் பக்கத்தில் தான் படுப்பேன்.. இல்லேன்னா தூக்கம் வராது... 
இத்தனை ஏன் -. எல்லாரையும்- பேர் சொல்லிக் கூப்பிடுவேன் அவளை மட்டும் ்(ஒரு தடவை அவள் என்னை செல்லமாக அதட்டிச் .. அக்கா என்று கூப்பிடச் சொல்ல,அதே வழக்க மாக்கிக்கொண்டேன்)- இன்று வரை)  
ஆடைக்கும் கோடைக்கும்இது அவள்duty. நான் பக்கத்தில் உக்காந்து தள்ளுவேன். 
அவளை அல்ல, மாவை ) .. அப்போ ரெண்டு பெரும் சினிமா பாட்டு... 
சஹானா ராகத்தில், "எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே..."அனுபவிச்சு பாடி, அதன் வரிகளின் சொல் நயத்தை அலசி ஆராய்ந்து இன்றும் படம் போல் ஞாபகம்..
                                                 MYSELF & MY IMMEDIATE ELDER SISTER

                                                  
ஹால் கடப்பா கல் பற்றி சொன்னேன்... 
எங்கண்ணா ஹாஸ்டலில் இருந்ததாலும், வேலைக்கு போனப்புறம் வெளியூரில் இருந்ததாலும், எங்களை ரொம்ப மிஸ் பண்ணுவான். 
ஊருக்கு வரும்போது, சாகலேட் கவர் பெரிசாக வரும்... அப்போ பார் சாகலேட் எல்லாம் கிடையாது... காட்பரீஸ் கூட இருந்ததை ஞாபகம் இல்லை.. பாரிஸ் சாகலேட் தான்.. 
அந்த கடப்பா கல்லில் தான் உட்காருவான்
சுற்றி நாங்கள் சாகலேட்டுடன் உட்கார, புல்புல்தாரா வில் சினிமா பாட்டு வாசிப்பான்... 
அவன் வரான் னதும் அம்மா, நெறைய இட்லிக்கு அரைத்து, இட்லியுடன் வெங்காய சாம்பாரும் பண்ணுவா... அவன் இருக்கும் இரண்டு நாளில் நல்ல, அவனுக்குப் பிடித்த சமையல் தான். 
எனகளுக்கெல்லாம்  ரொம்ப ஜாலியாக  இருக்கும் அவன் வந்தால்.  
  அந்த வீடு, ரெண்டு மாடி வீடு. 25 ரூ வாடகை.ரொம்ப பெரிசு.
 AYYANGADAI THERU 






No comments:

Post a Comment