அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் .....
சென்னை என்னை மழையுடன், அன்புடன் வரவேற்றது - 3.15 am க்கு
வீட்டுக்கு வந்து, கதவை திறந்ததும் உரைத்தது காபி பொடி, பால் கீழ் வீட்டில் இருக்கும் என்று.
நேறே குளியலறை... ஒரு நல்ல ஷாம்பூ குளியல் போட்டு, அநேகமாக முடித்து விட்டேன்; குழாயில் தண்ணி நின்றது !
அது முடிந்து வெளியில் வந்தால் தெரிந்தது பவர் இல்லை; ஒரு லைட் இன்வெர்டரில் ஓடுகிறது என்று...
சரி, கொஞ்சம் டிவி ஐ பார்க்கலாம் என்று போட்டால், "நோ சிக்னல்" என்கிறது... காரணம் கேட்டால், மழையாம், டாடா ஸ்கை க்கு ஒத்துக்காதாம்.
அதுவும் ஒ.கே. ... மெயில், FB பார்க்கலாம் என்று கம்ப்யூட்டர் ஆன் செய்தால்... "net not getting connected" ....
"பாரத நாட்டுக் கிணை பாரத நாடே...
பாருலகரியுமே .. இதற்கில்லை ஈடே..."
என்ற பாட்டுதான் ஞாபகம் வந்தது...
காவிரி, கங்கை, யமுனை ஆறுகள்;
கயிலை யும் இமயத்தின் எவரெஸ்ட்;
தேவர் சொல் திருக்குறள் கீதை;
தேனினும் இனிய திருவாசகம்...
புத்தர், பரமஹம்சர், காளிதாசர், கம்பர் பெரும் புகழ் படைத்தார்கள்..
உத்தமர் காந்திஜிக்கு உவமை யாருமில்லை...
உயர் பல கோயில்கள் ......
பழம் பெருமை பேசுவதில் நமக்கு நிகர் யாருமில்லை...
இனிமே யாராவது சுதந்திர தினம், குடியரசு தினம் என்று கொடியேத்தி,
"நாம் சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன..." என்று ஸ்பீச் கொடுத்தால்,
உருட்டுக் கட்டையாலேயே அடிப்பேன்...
"இதுவும் கடந்து போகும்" ன்னு கமெண்ட் குடுத்தீங்க... தொலச்சிப் பிடுவேன்..தொலைச்சு...

No comments:
Post a Comment