Monday, September 12, 2016

KALAI POOSUDHAL - RETINNING OF BRASS UTENSILS

கலாய் பூசுதல்

அந்த நாள்ல சமையல் பாத்திரம் (அடுப்பில் வைப்பது) எல்லாமே பித்தளை அல்லது வெண்கலம்

பித்தளை பாத்திரத்தில் சமைத்தால் "கச்சி" போய்விடும்.. அதாவது ரொம்ப கெடுதல்.
அதனால் அவைகளுக்கு "ஈயம் பூசுறது" என்ற ஒரு "சடங்கு" அடிக்கடி நடக்கும். 

அம்மா "வாசலில் - ஈயம் பூசறவன், கல்லுரல் "பொளிபவன்" , அருவாமணை தீட்டறவன் வந்தால் கூப்பிடுங்கள்" என்று அடிக்கடி ஏதாவது ஒண்ணு சொல்லிண்டே 
இருப்பா.

இது எல்லாமே எனக்கு வேடிக்கை பார்க்க பிடித்த விஷயம் தான்...
எல்லாமே ஒரு கலை
எனக்கு  தெரியாதது- அவர்கள் லாவகமாக செய்வது... அதை ஆச்ச்சரியடுத்துடன்கண்களில் ஒரு admiration
 உடன் பார்ப்பது என் வழக்கம். அது இப்பவும் தொடர்கிறது. என்ன.. அப்போ எல்லாம் பேசாம பார்ப்பேன்.. 

இப்போ interview  மாதிரி கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன்.. 
வீட்டில் பூச்சி மருந்து அடிப்பவனை கூட , அவன் தொழிலை பற்றிஅதன் பற்றும் பற்றாத வருமானம் பற்றி, அந்த தொழிலால் உடல் நலத்துக்கு விளையும் கேடு பற்றி... இப்படி நிறைய... அப்புறம் 
இவரிடம் சொல்லி வருத்தப்படுவேன்.. "இவா எல்லாம் எப்படி இந்த விலை வாசில காலம்  தள்ரா ?
பூச்சி மருந்து அடிக்கரவாளுக்கு உடம்பு எப்படி கெட்டு போறது?
முதலாளி மருத்துவ வசதி கூட குடுப்பதில்லை " என்று ரம்பம் போட்டு விடுவேன் இவருக்கு.  

[[ஐயோ... எங்கேயோ குறுக்கு மூல பாஞ்சுட்டேனே... (வயசானாலேடீச்சரா  இருந்தாலே இப்படித்தான் )]]


விஷயத்துக்கு வரேன்.

ஈயம் பூசறவன் வந்தால்... பாத்திரமெல்லாம் கொண்டு வந்து அவனிடம் போடுவேன்... அவன் முதலில் கரி போட்டு நெருப்பை பற்ற வைப்பான். அப்புறம் (ஒரு தோல் பை மாதிரி இருக்கும் ) புஸ்ஸ்ஸ் புஸ்ஸ் என்று காற்று அடிப்பான்... ஈயத்தை உருக்கி உள்ளே பூசுவான்..

எப்படி, இப்படி சீராக ? மனிதர்களுக்குள் எவ்வளவு கலைத்திறமைகள்..? குலத்தொழிலை ஏன் எல்லாரும் மறந்தார்கள் ?

இதென்ன கேள்வி, குலத்தையே மறக்கிற காலத்தில், குலத்தொழிலாவது ? இதை ராஜாஜி சொல்லப்போகத்தான் எல்லோரும் அவர் மீது பாய்ந்தார்கள் !! நான் என் குழந்தைகளுக்கு "ஸ்ரீவத்ஸ்" என்று சேர்த்து விட்டேன்... பெண்ணும் தன் குழந்தைகளுக்கு "ஆத்ரேயா" என்று... ஏதோ கோத்திரமாவது தெரியட்டுமே என்று... ஆனா , என்ன வேடிக்கைன்னா, குழந்தைகளுக்கு கோத்திரம் ன்னா என்னன்னு தெரியாது... !! அப்படி ஜாதி, மதம் பேதமில்லாம வளர்க்கபப் படராளாம் !!  

ஐயோ... மறுபடியும் எங்கேயோ !!!! ... இழுத்து பிடிக்கிறேன்...

எல்லா பாத்திரத்துக்கும் பூசி முடிந்ததும், ஒரு துணியால் நன்றாக துடைத்து வைப்பான்... பள பள என்று இருக்கும்...
அம்மா முகத்தில் திருப்தி... என் முகத்தில் சந்தோஷம்..

ஒரு பாத்திரத்துக்கு கால்  அணாஅரை  அணா கேட்பான்.. மொத்த கூலியில், கொஞ்சம் குறைத்து கேட்காவிட்டால் அம்மாவுக்கு அன்று தூக்கம் வராது !! (அது தெரிந்துதான் இப்போ எல்லாம் வியாபாரிகள்  BUFFER  வைத்து  கூட்டியே கேட்கிறார்கள்.  அப்போதெல்லாம் அவர்கள் "பாவம்" ஜாதிகள் !!

எல்லாவற்றையும் பெருமையாக, ஏதோ நான்தான் சாதித்தது போல உள்ளே எடுத்து போவேன்...ஆனால், ஈயம் பூசுகிரவனை வழி அனுப்பி விட்டுதான். !!

          கலாய் பூசுவதற்கு முன்                                                               கலாய் பூசிய பின்  
                                                                                      
      
                                                         











No comments:

Post a Comment